வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Fuction -னுக்கு போறதுக்கு முன்னாடி இந்த பேஸ் பேக் போட்டுட்டு போங்க..! செம பிரைட்டா தெரிவிங்க..!

Updated On: October 4, 2024 12:25 PM
Follow Us:
 Face Pack For Glowing Skin in Tamil
---Advertisement---
Advertisement

 Easy Face Pack at Home For Glowing Skin in Tamil

பொதுவாக பெண்கள் அனைவருமே பிரைட்டாகவும் அழகாகவும் இருக்க வேண்டும் என்று  நினைப்பார்கள். இதற்காக பலவற்றை முகத்திற்கு பயன்படுத்தி இருப்பார்கள். ஆனால் அதெல்லாம் தினமும் பயன்படுத்த சிலருக்கு நேரம் இருக்காது. ஆனால் கல்யாணம் போன்ற விசேஷத்திற்கு போகிறோம் என்றால் அழகாக போக வேண்டும் என்று அனைவருமே நினைப்போம். அப்படி அழகாக போவதற்கு இயற்கையாகவே நிறைய பேஸ் பேக் இருக்கிறது. அவற்றில் ஒன்றை தான் இன்று நம் பொதுநலம்.காம் அழகுக்குறிப்பில் பார்க்கப்போகிறோம். வாருங்கள் உங்கள் முகத்தை பிரைட்டாக்கும் அந்த பேஸ் பேக் என்னெவென்று இப்பதிவில் படித்து தெரிந்துக்கொள்வோம்.

Face Pack Homemade in Tamil:

பேஸ் பேக் செய்ய தேவையான பொருட்கள்:

  1. முட்டையின் வெள்ளைக்கரு- சிறிதளவு
  2. முல்தானி மெட்டி- 1 டேபிள் ஸ்பூன் 
  3. சாதம்- 2 டேபிள் ஸ்பூன்

ஃபேஸ் பேக் செய்வது எப்படி.?

முதலில் ஒரு மிக்சி ஜாரில் சாதம் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள்.

 easy face pack for glowing skin in tamil

பிறகு, ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் முட்டையின் வெள்ளை கருவை உடைத்து ஊற்றி அதனுடன் முல்தானிமெட்டி பவுடரை சேர்த்து நன்றாக கலந்து விடவும்.

உங்களுக்கு முட்டையின் வெள்ளை கரு வேண்டாமென்றால் அதற்கு பதிலாக தேன் சேர்த்து கொள்ளலாம்.

இவற்றை நன்றாக கலந்ததும், அதனுடன் அரைத்து வைத்த சாதத்தை சேர்த்துக்கொள்ளுங்கள். பிறகு இதை ஒரு பேஸ்ட் போல் நன்றாக கலந்துக்கொள்ளுங்கள்.

 easy homemade face pack for glowing skin in tamil

 

 இந்த பேஸ் பேக்கை நீங்கள் Function-ற்கு போகுவதற்கு 20 நிமிடத்திற்கு முன்னதாகவே போடுங்கள். அப்போது தான் நாள் முழுவதும் பிரைட்டா இருப்பீர்கள். 
சரும அழகிற்கு புதினா ஃபேஸ் பேக்

 

ஆயில் ஸ்கின் உள்ளவர்களுக்கு:

ஆயில் ஸ்கின் உள்ளவர்கள் இந்த பேஸ் பேக்குடன் சிறிதளவு தயிர் சேர்த்து கொள்ளுங்கள்.

How to Apply Face Pack At Home in Tamil:

முதலில் உங்கள் முகத்தை சோப்பு போட்டு நன்றாக கழுவவும்.

 best face pack for glowing skin in tamil

பிறகு நாம் செய்து வைத்த பேஸ் பேக்கை கையில் எடுத்து உங்கள் முகம் முழுவதுமாக அப்ளை செய்யுங்கள். (இதை நீங்கள் உங்கள் கை மற்றும் கழுத்து பகுதியிலும் அப்ளை செய்யலாம்.)

பிறகு 5 நிமிடங்கள் கழித்து, மீதமுள்ள பேஸ் பேக்கையும் அதன் மேலே அப்ளை செய்யுங்கள். இதை ஒரு 10 நிமிடம் அப்படியே வைத்துவிடுங்கள்.

சருமத்திற்கு அழகு தரும் மஞ்சள் தூள் ஃபேஸ் பேக்..!

 

10 நிமிடம் கழித்ததும், சிறிதளவு பால் எடுத்து முகத்தில் தடவுங்கள். பிறகு உங்களின் இரு கைகளினாலும் முகத்தை மசாஜ் செய்யுங்கள். 2 லிருந்து 3 நிமிடங்கள் வரை நன்றாக மசாஜ் செய்யுங்கள்.

மசாஜ் செய்த பிறகு உங்கள் முகத்தை தண்ணீரில் கழுவுங்கள். வெறும் தண்ணீரில் மட்டுமே கழுவ வேண்டும். சோப்பு போடக்கூடாது. கழுவிய பிறகு ஒரு காட்டன் துணியை வைத்து முகத்தை துடைத்துவிடுங்கள். பிறகு நீங்கள் Function-ற்கு ரெடி ஆகும் போது Sunscreen க்ரீம் போட்டுகொண்டு செல்லுங்கள்.

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil

 

 

Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now