உடல் முழுவதும் வெள்ளையாக மாற
ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி வெள்ளையாக இருக்க வேண்டும் என்று தான் நினைப்பார்கள். இதற்காக கடையில் விற்கும் கிரீம் மற்றும் மருந்துகளை பயன்படுத்துவீர்கள். ஆனால் இந்த மாதிரி கெமிக்கல் நிறைந்த பொருட்களை பயன்படுத்துவதால் சருமத்தில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதனால் இயற்கையான முறையில் வெள்ளையாகுவது எப்படி என்று இந்த பதிவை படித்து தெரிந்து கொள்வோம்.
முகம் பளபளப்பாக தேவையான பொருட்கள்:
- உருளைக்கிழங்கு-1
- பால்- 100 ml
- அரிசி மாவு – 2 தேக்கரண்டி
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
பேக் செய்முறை:
அடுப்பில் கடாய் வைத்து 100 ml பால் ஊற்றி கொதிக்க விடவும். நன்றாக கொதித்து வந்ததும் சீவிய உருளைக்கிழங்கை சேர்த்து கலந்து விட வேண்டும். உருளைக்கிழங்கு பாலுடன் சேர்ந்து வேக வேண்டும்.
உருளைக்கிழங்கை கையில் எடுத்து பார்த்தால் மாவு போல் இருக்க வேண்டும். மாவு பதத்திற்கு வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி ஆற விடவும்.
உருளைக்கிழங்கு ஆறியதும் அரிசி மாவு 2 தேக்கரண்டி சேர்த்து கட்டி இல்லாமல் கலந்து விடவும். பின் இதில் 1 தேக்கரண்டி தயிர் சேர்த்து பேஸ்ட்டாக கலந்து கொள்ள வேண்டும்.
இந்த பேக்கை முகம் முழுவதும் அப்பளை செய்து 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவி கொள்ளவும். வாரத்தில் 2 முறை இந்த பேக்கை அப்ளை செய்தாலே போதும் முகம் வெள்ளையாக மாறிவிடும்.
முகம் வெள்ளையாக தேவையான பொருட்கள்:
- அரிசி – தேவையான அளவு
- உருளைக்கிழங்கு –1
- பால் –1/2 டம்ளர்
- கான்பிளவர் மாவு –1 தேக்கரண்டி
- தயிர் -சிறிதளவு
இதையும் படியுங்கள் ⇒ ஒரே வாரத்தில் முகம் பளபளப்பாக இருக்க டிப்ஸ்
பேக் செய்முறை:
அரிசியை 2 மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும். பிறகு ஊற வைத்த அரிசியை அரைத்து வடிகட்டி தண்ணீரை மட்டும் எடுத்து கொள்ளவும்.
அடுத்து 1 உருளைக்கிழங்கை சீவி அதிலுருந்து சாற்றை மட்டும் எடுத்து கொள்ளவும். மேலும் கெட்டியான தயிர் எடுத்து கொள்ள வேண்டும்.
பிறகு அடுப்பில் கடாய் வைத்து அதில் அரிசி வடிகட்டிய தண்ணீரை ஊற்றவும். பின் அதில் காய்ச்சாத பால் 1/2 டம்ளர் சேர்த்து கலந்து விடவும். இதில் கான்பிளவர் 1 தேக்கரண்டி சேர்த்து தண்ணீர் சேர்த்து கட்டி இல்லாமல் கலந்து விடவும். கெட்டியான பதம் வந்ததும் அடுப்பை அணைத்து ஆற விட வேண்டும்.
ஆற வைத்த பேக்கில் கெட்டியான தயிர் சிறிதளவு, உருளைக்கிழங்கு சாறு சிறிதளவு சேர்த்து கட்டி இல்லாமல் பேஸ்ட் போல் கலந்து கொள்ள வேண்டும்.
அப்ளை செய்யும் முறை:
இந்த பேக்கை குளிப்பதற்கு முன்பு உடல் முழுவதும் அப்பளை செய்து காய்ந்த பிறகு குளித்து விடலாம். இந்த பேக்கை 2 நாட்களுக்கு பயன்படுத்தி பாருங்கள் வெள்ளையாக மாறுவதை காணலாம்.
இதையும் படியுங்கள் ⇒ இளமை குறையாமல் என்றென்றும் முகம் அழகாக இருக்க இதை ட்ரை பண்ணுங்க ..!
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |