வெள்ளை முடியை கருப்பாக மாற்றுவது எப்படி.?
உடலில் இருக்கும் பிரச்சனைகளில் நரைமுடியும் ஒரு பிரச்சனை. நரைமுடி வந்தாலே வயதான தோற்றத்தை கொடுத்துவிடும். இதனால் ஒரு நரை முடி எட்டி பார்க்கும் போதே அதனை எப்படி சரி செய்வது என்று யோசிப்பீர்கள். அதிகமாக நரை முடி இருப்பவர்கள் நிறைய ஹேர் டையை பயன்படுத்திருப்பார்கள். அந்த ஹேர் டை அனைத்தும் பயன்படுத்தும் போது நல்ல பலனை கொடுத்திருந்தாலும் கொஞ்ச நாள் கழித்து வெள்ளை முடி வந்துவிடும். இதற்கான நிரந்தர தீர்வை இந்த பதிவில் மூலம் தெரிந்து கொள்வோம்.
ஹேர் டை தயாரிக்கும் முறை:
முதலில் அடுப்பில் கடாய் வைத்து அதில் 3 தேக்கரண்டி நெல்லிக்காய் பவுடர் சேர்த்து வதக்குங்கள். முக்கியமாக அடுப்பை குறைந்த தீயிலே வைத்து வதக்க வேண்டும். அடுத்து 6 தேக்கரண்டி மருதாணி பவுடர், கடுக்காய் பவுடர் 1/2 தேக்கரண்டி சேர்த்து வதக்கவும்.
இதையும் படியுங்கள் ⇒ ஹர் டையை தூக்கி போடுங்க.! இயற்கையான முறையில் வெள்ளை முடியை கருப்பாக மாற்றலாம் 100% ரிசல்ட்
சிவந்த நிறம் வந்தவுடன் சிறிதளவு வெந்நீர் சேர்க்கவும். இந்த கலவை கெட்டியான பதம் வரை வரைக்கும் கொதிக்க விடுங்கள். அதாவது ஹேர் டை பதம் வந்ததும் அடுப்பை அணைத்து விடுங்கள். இந்த கலவையை கடாய் முழுவதும் பரப்பி விடுங்கள். இது அப்படியே 12 மணி நேரம் அப்படியே இருக்கட்டும்.
12 மணி நேரம் கழித்தததும் அதில் சிறிதளவு தண்ணீர், அவுரி பொடி சேர்த்து கலந்து கொள்ளுங்கள். அவ்ளோ தாங்க இயற்கையான முறையில் ஹர் டை ரெடி.!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
அப்ளை செய்யும் முறை:
இந்த ஹேர் டையை பயன்படுத்துவதற்கு முன் உங்கள் தலையில் அழுக்குகள் மற்றும் எண்ணெய் பிசுபிசுப்பு இல்லாமல் இருக்க வேண்டும். தலை குளிப்பதற்கு முன்பு இந்த ஹேர் டை அப்ளை செய்து சிறிது நேரம் வைத்திருந்து தலையை குளித்து விடுங்கள். முக்கியமாக இந்த குறிப்பை பயன்படுத்தியதும் எந்த விதமான ஷாம்பையும் பயன்படுத்த கூடாது வெறும் தண்ணீரில் தான் தலையை அலச வேண்டும். இதை பயன்படுத்தியதும் உடனே ரிசல்ட் கிடைக்க கடையில் விற்கும் ஹேர் டை இல்லை நண்பர்களே.! இயற்கையான முறையில் செய்த ஹர் டை அல்லவா.! இரண்டு அல்லது மூன்று தடவை அப்பளை செய்தவுடன் ரிசல்ட் கிடைத்துவிடும் அதுவும் நிரந்தரமான கருப்பாக மாற்றலாம்.
இதையும் படியுங்கள் ⇒ வெள்ளையாக இருக்கும் தலை முடியில் இதை மட்டும் தடவுங்க அப்புறம் எப்படி இருக்குனு பாருங்க
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |