உங்கள் சரும வகையை கண்டுபிடிப்பது எப்படி ?

how to find my skin type in tamil

How to Find My Skin Type in Tamil

சரும பிரச்சனைகளுக்கு பல வழிகளை மேற்கொண்டும் பயன் இல்லை என்று கவலைபடுகிறீர்களா? கவலை வேண்டாம். முதலில் உங்களுடைய சருமம் என்ன வகை என்று உங்களுக்கு தெரியுமா? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஸ்கின் வகைகள் இருக்கின்றன. அதனை தெரிந்துக்கொண்டால் மட்டுமே நீங்கள் பயன்படுத்துகின்ற அழகு குறிப்புகள் முதல் அழகுசாதன பொருட்கள் வரை உங்களுக்கு பலனை கொடுக்கும்.

உங்கள் சரும வகையை கண்டறிந்து அதற்கேற்ப சிகிச்சைகள் மற்றும் அழகுசாதன பொருட்களை பயன்படுத்த வேண்டும்.அப்போதுதான் உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். உங்கள் சரும வகையினை அறியாமல் சரும பிரச்சனைகளுக்கு என்ன செய்தாலும் சரி கட்டாயம் பலன் கிடைக்காது. எனவே ஒவ்வொருவரும் தனக்கு என்ன சரும வகை என்பதை கட்டாயம் அறிந்திருக்க வேண்டும். பலருக்கு அவர்களின் சரும வகை என்ன என்பதனை கூட தெரியாமல் இருக்கின்றன. சரும வகையினை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பதனை பற்றி உங்களுக்கு தெரியுமா? அதனை பற்றித்தான் இப்பதிவில் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

சரும வகைகள்:

நம் இந்தியர்களுக்கு 5 வகையான சரும வகைகள் இருக்கின்றன.

சரும வகைகள் 
1 உலர்ந்த சருமம் Dry Skin
2 எண்ணெய் சருமம் Oil  Skin
3 காம்பினேஷன் சருமம் Combination Skin
4 இயல்பான சருமம் Normal Skin
5 உணர்திறன் சருமம் Sensitive Skin

 

skin types

இதையும் படியுங்கள்=>1 பொருள் போதும் முகத்திற்கு மூன்று விதமாக பயன்படுத்தி முகத்தை இளமையாக வைக்கலாம்…!

ஒவ்வொரு வகை சருமமும் ஒவ்வொரு தனிப்பட்ட பிரச்சனையை நமக்கு தருகிறது. முதலில் உங்களுக்கான சரும வகையை கண்டுபிடிங்கள். அப்போதுதான் உங்கள் சரும பிரச்சனைகளுக்கு சரியான சிகிச்சையை செய்ய முடியும்.

சரும வகையை கண்டுபிடிப்பது எப்படி?

மற்ற சரும வகைகளை காட்டிலும் காம்பினேஷன் ஸ்கின் மற்றும் ஆயில் ஸ்கின் இவற்றை கண்டுபிடிப்பதில்தான் பலரும் அதிக குழப்பம் அடைகின்றனர்.

ஸ்டேப் 1:

உங்கள் சரும வகை என்ன என்பதை கண்டுபிடிக்க முகத்தில் மேக்கப், கீரிம் அப்ளை செய்து இருந்தால் முதலில் அதனை சுத்தமாக நீக்க வேண்டும். பின் குளிர்ந்த நீரால் முகத்தினை சுத்தமாக கழுவ வேண்டும்.

ஸ்டேப் 2:

பிறகு அரைமணிநேரம் முகத்தினை எவ்வித அழகுசாதன பொருட்களும் அப்ளை செய்யமால் அப்படியே காற்றோட்டமாக விட வேண்டும். அப்போது சருமமானது நன்கு சுவாசம் பெறும்.

இதையும் படியுங்கள்=>பனிக்காலத்தில் ஏற்படும் அனைத்து சரும பிரச்சனைகளுக்கும் இந்த டிப்ஸ் மட்டும் போதும்..!

ஸ்டேப் 3:

normal skin

ஒரு மணி நேரம் கழித்து உங்கள் முகத்தினை கண்ணாடியில் பார்க்கும்போது முகமானது பிரெஷாக காணப்பட்டால் உங்களுடைய சருமம் நார்மல் ஸ்கின் வகையை சார்ந்தது.

ஸ்டேப் 4:

oil skin

முகமானது பளபளப்பாக , பிசு பிசு என்று முகத்தில் எண்ணெய் வழிவது போன்று இருந்தால் உங்கள் சருமம் ஆயில் ஸ்கின் வகையை சார்ந்தது.

ஸ்டேப் 5:

combination skin

முகத்தில் நெற்றி, மூக்கு, தாடை ஆகிய பகுதிகளில் மட்டும் எண்ணெய் வடிந்து மற்ற பகுதிகள் வறண்டு அல்லது சாதாரணமாக இருந்தால் உங்கள் சரும வகை காம்பினேஷன் ஸ்கின் வகையை சார்ந்தது.

ஸ்டேப் 6:

dry skin

முகமானது வறண்டு, கரடு முரடாக சோர்வாக, வறட்சியுடன் காணப்பட்டால் உங்கள் சருமம் வறண்ட சரும வகையை சார்ந்தது.

ஸ்டேப் 7:

sensitive skin

ஏதேனும் அழகுசாதன பொருட்களை பயன்படுத்தும் பொது முகமானது சிவந்து, அரிப்பு, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் அது உணர்திறன் வாய்ந்த சருமமாகும்.

இதையும் படியுங்கள்=>முகத்தில் பருக்கள் வர காரணம் என்ன?

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil