முடி உதிர்வதை தடுக்க | Hair Growth Hair Pack
முடி அதிகமாக இருக்க வேண்டும் என்பது பெண்களின் ஆசையாக இருக்கிறது. இன்னும் சில பெண்கள் இருக்கின்ற முடி கொட்டாமல் இருந்தாலே போதுமானது என்று நினைப்பார்கள். முடி உதிர்வு பிரச்சனையை சரி செய்வதற்காக கடைகளில் விற்கும் கெமிக்கல் நிறைந்த பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். இதனால் நாளடைவில் உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதனால் இயற்கை முறையில் முடி உதிர்வை நிறுத்தி முடி வளர்ச்சியை ஏற்படுத்தும் ஹேர் பேக் தயாரிப்பது எப்படி என்று இந்த பதிவின் மூலமாக படித்து தெரிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
ஹேர் ஆயில் செய்ய தேவையான பொருட்கள்:
- வெங்காயம் –4
- நெல்லிக்காய் –2
- கறிவேப்பிலை – 1கைப்பிடி
- பூண்டு –10 பல்
- வெந்தயம் – 2 தேக்கரண்டி
- தேங்காய் எண்ணெய் –3/4 லிட்டர்
- விளக்கெண்ணெய் – 50 ML
- கருஞ்சீரகம் – 2 தேக்கரண்டி
ஹேர் ஆயில் செய்முறை:
கறிவேப்பிலை முடி கருப்பாக வளர உதவுகிறது, பெரிய வெங்காயத்தில் இருக்கும் வைட்டமின் சி முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. வெந்தயத்தில் ஆக்சைடு, வைட்டமின் A, K, C மற்றும் பொட்டாசியம் அதிகம் நிறைந்துள்ளதால் முடி வளர்ச்சிக்கும், பொடுகு வராமலும் பாதுகாக்கிறது. கருஞ்சீரகத்தில் சிங்க்,மெக்னீசியம், அயர்ன், வைட்டமின் A,B,C போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளதால் முடி உதிர்வை நிறுத்தி, நரை முடி வராமலும் பாதுகாக்கிறது.மிக்சி ஜாரில் வெங்காயம், நெல்லிக்காய், கறிவேப்பிலை சேர்த்து கொரகொரவென்று அரைத்து கொள்ளவும்.
கருஞ்சீரகம் மற்றும் வெந்தயம் தனியாக அரைத்து கொள்ளவும்.
அடுப்பில் பாத்திரத்தை வைத்து 3/4 லிட்டர் தேங்காய் எண்ணெய் ஊற்றவும்.
இதையும் படியுங்கள் ⇒ தலைமுடி பளபளப்பாகவும், அடர்த்தியாகவும் இருக்க வெந்தயம், கற்றாழை மட்டும் போதும்..!
எண்ணெய் மிதமான சூடு வந்ததும் அரைத்த பொருட்களை சேர்த்து கிளறி விடவும். 10 நிமிடம் கொதித்த பிறகு வெந்தயம் அரைத்ததை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். பிறகு அடுப்பை அணைத்து விடவும்.
எண்ணெய் ஆறியதும் பாத்திரத்திலே இரவு முழுவதும் ஊற விடவும். மறுநாள் காலையில் செய்து வைத்துள்ள எண்ணெயை வடிகட்டி சக்கை இல்லாமல் எண்ணெயை மட்டும் வடிக்கட்டி கொள்ளவும்.
வடிகட்டிய எண்ணெயுடன் 50 ML விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளவும்.
இந்த எண்ணெயை தலையில் அப்ளை செய்து 3 மணி நேரம் கழித்து மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலை தேய்த்து குளிக்க விடவும்.
வாரத்தில் இரண்டு தடவை அப்ளை செய்து வாருங்கள் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.
இதையும் படியுங்கள் ⇒ நரை முடியை கருப்பாக மாற்றுவதற்கு இந்த ஹேர் டையை பயன்படுத்துங்க..!
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |