வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

முகத்தில் போகவே போகாதுனு இருந்த பருக்கள் உடனே போக இதை ட்ரை பண்ணுங்க…!

Updated On: June 3, 2024 6:26 PM
Follow Us:
how to remove pimples permanently in tamil
---Advertisement---
Advertisement

Home Remedy to Remove Pimples From Face

முகத்தில் பருக்க வந்தாலே சிலருக்கு பயமும் கூடவே சேர்ந்து வந்துவிடும். ஏனென்றால் முகத்தில் ஒரு முறை பருக்கள் வந்தால் அதுவே பழக்கமாக மாறிவிடும் மற்றும் அந்த பருக்கள் எளிதில் மறையாது என்ற ஒரு பெரிய பிரச்சனை ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் இதுநாள் வரையிலும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. ஆகையால் உங்களுடைய பிரச்சனையை சரிசெய்வதற்கு இந்த பதிவு மிகவும் உதவியானதாக இருக்கும். அதனால் இந்த பதிவை தொடர்ந்து படித்து முகத்தில் போகவே போகாதுனு நினைத்த பருக்களை போக்குவது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

முகத்தில் உள்ள பருக்கள் நீங்க:

முகத்தில் உள்ள பருக்களை நீக்குவதற்கு இயற்கையான முறையில் 2 குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அந்த மூன்று குறிப்புகளில் ஏதேனும் ஒன்றை பின்பற்றினால் போதும்.

குறிப்பு- 1

 முகத்தில் உள்ள பருக்கள் நீங்க

தேவையான பொருட்கள்:

  • வெள்ளரிக்காய்- சிறிய துண்டு 
  • ஓட்ஸ்- 1 கப் 
  • தயிர்- 1 தேக்கரண்டி

செய்முறை:

 வெள்ளரிக்காயில் உள்ள சத்துக்கள் முகத்தில் எண்ணெய் பசை ஏற்படுவதை தவிர்த்து முகத்தை குளிர்ச்சியாகவும் மற்றும் பருக்களை நீங்கவும் செய்கிறது. 

அதனால் சிறிய துண்டு வெள்ளரிக்காய் மற்றும் ஓட்ஸ் இரண்டையும் ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நன்றாக பேஸ்ட் போல அரைத்து ஒரு பவுலில் வைத்து விடுங்கள்.

அதன் பின்பு அந்த பவுலில் 1 தேக்கரண்டி தயிர் சேர்த்து நன்றாக 5 நிமிடம் கலந்து கொள்ளுங்கள். இப்போது பருக்களை நீக்குவதற்கான கிரீம் தயார் ஆகிவிட்டது.

அப்ளை செய்யும் முறை:

தயார் செய்து வைத்துள்ள Face பேக்கை முகத்தில் நன்றாக அப்ளை செய்து மசாஜ் செய்து வைத்து விடுங்கள். பின்பு 20 நிமிடம் கழித்து முகத்தை நன்றாக குளிர்ந்த நீரால் கழுவி விடுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் முகத்தில் உள்ள பருக்கள் விரைவில் மறைந்து விடும்.

இதையும் படியுங்கள்👇👇👇
இந்த ஒரு பொருள் இருந்தால் 5 நிமிடத்தில் நரை முடியை கருப்பாக மாற்றலாம்

குறிப்பு- 2

 home remedy to remove pimples from face in tamil

 மஞ்சள் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்க செய்து உடலை ஆரோக்கியமாக வைக்க செய்கிறது. அதுபோல மஞ்சளினை நம்முடைய முகத்திற்கு பயன்படுத்துவதன் மூலம் முகத்தில் பாக்டீரியாக்களை அழித்து பருக்கள் வராமல் செய்து பிரகாமாக இருக்க உதவுகிறது.  

தேவையான பொருட்கள்:

  • மஞ்சள்தூள்- 2 தேக்கரண்டி 
  • கொண்டைக்கடலை மாவு- 1/2 தேக்கரண்டி 
  • சந்தனத்தூள்- 1/2 தேக்கரண்டி 
  • பாதாம் எண்ணெய்- 1 தேக்கரண்டி

செய்முறை: 

ஒரு பவுலை எடுத்துக்கொண்டு அதில் எடுத்துவைத்துள்ள மஞ்சள்தூள், சந்தனத்தூள் மற்றும் கொண்டைக்கடலை மாவு ஆகியவற்றை சேர்த்து சிறிது நேரம் கலந்து கொள்ளுங்கள்.

சிறிது நேரம் கழித்த பிறகு பவுலில் இருக்கும் பொருட்களுடன் 1 தேக்கரண்டி பாதாம் எண்ணெய் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல நன்றாக கலந்து 10 நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள்.

அப்ளை செய்யும் முறை:

10 நிமிடம் கழித்து முகத்திற்கு தயார் செய்து வைத்துள்ள கிரீமை நன்றாக அப்ளை செய்து 2 நிமிடம் மசாஜ் செய்து 20 நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள்.

20 நிமிடம் கழித்த பிறகு முகத்தை வழக்கம் போல கழுவி விடுங்கள். இதனை மட்டும் செய்தால் போதும் முகத்தில் பருக்கள் போகவே போகாது என்று நினைத்தை பருக்கள் விரைவில் மறைந்து விடும்.

 உங்களுக்கு இது போன்ற முக்கிய தகவல்கள், அழகு குறிப்புகள், ஆன்மீக தகவல்கள்,சமையல் குறிப்புகள் போன்றவைற்றை தெரிந்துகொள்ள பொதுநலம் வலைத்தளத்தை பின்தொடருங்கள்.

இதையும் படியுங்கள்👇👇👇 கருவேப்பிலையில் இந்த எண்ணெயை கலந்தால் நரை முடி கருப்பாக மாறிவிடும்

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை