முடி உதிர்வு பிரச்சனைக்கு நல்ல Result கிடைக்க இதை Follow பண்ணி பாருங்களன்..!

Hair Fall Problem Solution

இதுநாள் வரையிலும் யாரும் எனக்கு இதுவரை முடி உதிர்வு பிரச்சனை என்பதே இல்லை என்று கூறியதும் இல்லை. அப்படி கூறுவதற்கான வாய்ப்பும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இத்தகைய முடி உதிர்வு பிரச்சனையானது தூக்கமின்மை, மனஅழுத்தம், உடல் சூடு மற்றும் உடல் நலக்குறைபாடு போன்ற விளைவுகள் காரணமாக முடி உதிர்வு பிரச்சனை வர காரணமாக அமைகிறது. அதனால் இத்தகைய பிரச்சனையை எப்படியாவது சரி செய்ய வேண்டும் என்று நிறைய தலைக்கு உபயோகப்படுத்தி இருப்பார்கள். ஆனால் அவை அனைத்தையும் விட உங்களுக்கு நல்ல Result கொடுக்கும் முடி உதிர்வு பிரச்சனையை சரிசெய்வதற்கான சில குறிப்புகள் பற்றி இன்றைய அழகுக்குறிப்பு பதிவில் படித்து செய்துபார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

How to Stop Hair Fall Permanently at Home:

முடி உதிர்வு பிரச்சனைக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தினால் போதும் நல்ல பலன் கிடைக்கும்.

குறிப்பு- 1

 hair fall problem solution in tamil

தேவையான பொருட்கள்:

  • வெந்தயம்- 1 தேக்கரண்டி
  • கருஞ்சீரகம்- 1 தேக்கரண்டி
  • ஆலிவ் எண்ணெய்- 1/2 கப் 

செய்முறை:

முதலில் அடுப்பை  பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி தண்ணீரை கொதிக்க விடுங்கள். பின்பு தண்ணீர் கொதித்ததும் அதன் மேலே ஒரு பீங்கான் பவுலை வைத்து கொள்ளுங்கள்.

இப்போது அந்த பவுலில் 1 தேக்கரண்டி வெந்தயம், 1 தேக்கரண்டி கருஞ்சீரகம் மற்றும் 1/2 கப் ஆலிவ் எண்ணெய் சேர்த்து 20 நிமிடம் கொதிக்க விடுங்கள்.20 நிமிடம் கழித்த பிறகு எண்ணெய் சூடானதும் அதனை வடிகட்டி வைத்து வடிகட்டிக்கொண்டு ஆற வைத்து விடுங்கள்.

எப்படி பயன்படுத்துவது..?

அதன் பின்பு அந்த எண்ணெயை தலையில் அப்ளை செய்து 30 நிமிடம் கழித்து குளிக்க வேண்டும்.

இவ்வாறு செய்வதன் மூலம் வெந்தயம் மற்றும் கருஞ்சீரகத்தில் உள்ள சத்துக்கள் உங்களுடைய முடியின் ஆழத்திற்கு சென்று முடி உதிர்வை தடுத்து முடிக்கு ஊட்டமளிக்கும். 

ஒரு ரூபாய் செலவு செய்யாமல் 2 நாட்களில் முகத்தில் உள்ள கரும்புள்ளியை சரி செய்ய செய்யலாம்

குறிப்பு- 2

முடி உதிர்வு நீங்க

 ஆமணக்கு எண்ணெயில் பாக்டீரியாவை எதிர்க்கும் பண்பு அதிகமாக இருக்கிறது. அதனால் இது முடி வளர்ச்சிக்கும் மற்றும் முடி உதிர்க்கும் நல்ல பலனை தரக்கூடியதாக இருக்கிறது.  

தேவையான பொருட்கள்:

  • ஆமணக்கு எண்ணெய்- 2 தேக்கரண்டி 
  • நெல்லிகாய் எண்ணெய்- 1 தேக்கரண்டி 
  • ரோஸ்மேரி எண்ணெய்- 2 சொட்டு 

செய்முறை:

எண்ணெய் தயார் செய்வதற்கு முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரத்தை வைத்து தண்ணீர் ஊற்றி மிதமான சூடு வருமாறு பார்த்து கொள்ளவும்.

அதன் பின்பு ஒரு பாத்திரத்தில் ஆமணக்கு எண்ணெய் 2 தேக்கரண்டி எடுத்துக்கொண்டு அதனை பாத்திரத்தில் உள்ள தண்ணீரின் மீது 2 நிமிடம் சூடு வரும் வரை வைக்க வேண்டும்.

2 நிமிடம் கழித்த பிறகு அந்த எண்ணெயுடன் நெல்லிக்காய் எண்ணெய் 1 தேக்கரண்டி மற்றும் ரோஸ்மேரி எண்ணெய் 2 சொட்டு சேர்த்து அடுப்பில் 10 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.

எப்படி பயன்படுத்துவது..?

10 நிமிடம் கழித்த தயார் செய்து வைத்துள்ள எண்ணெயை ஆறவைத்து கொள்ளுங்கள். இந்த எண்ணெயை தலையில் நன்றாக அப்ளை செய்து 20 நிமிடம் மசாஜ் எய்து விட்டு குளிக்க வேண்டும்.

இதுபோல செய்வதன் மூலம் முடி உதிர்வு குறைந்து மீண்டும் முடி வளரும். 

சருமம் எப்போதும் அழகாகவும் பளபளப்பாகவும் இருக்க இந்த Home Rremedy ட்ரை பண்ணுங்க ..!

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil