நரை முடியை கருமையாக மாற்ற இந்த மூன்று பொருட்களை கலந்து முடியில் அப்ளை செய்தால் போதும் ..!

Advertisement

நரை முடி கருப்பாக மாற

நரை முடி பிரச்சனை முந்தைய காலங்களில் வயதானவர்களுக்கு மட்டும் தான் இருக்கும். ஆனால் இப்போது அதற்கு எதிர் மாறாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் என அனைவருக்கும் அதிகமாக வருகிறது. நாம் தினமும் சாப்பிடும் உணவில் வைட்டமின் B காம்ப்ளெக்ஸ் இல்லாத உணவுகளை அதிகமாக சாப்பிடுவதும் மற்றும் அதிக ரசாயனம் கலந்து பொருட்களை தலைக்கு பயன்படுத்துவதனாலும் தான் நரை முடி பிரச்சனை வருகிறது. இப்படிப்பட்ட இந்த நரை முடி பிரச்சனையை எப்படி தான் சரி செய்வது என்பது பலருடைய புலம்பலாக இருக்கிறது. அதனால் நரை முடி பிரச்சனையை மிகவும் எளிமையான முறையில் வீட்டில் எளிதாக கிடைக்கும் பொருட்களை வைத்து சரி செய்வது எப்படி என்று தெரிந்த்துகொள்வோம் வாருங்கள்.

How to Turn Grey Hair Black Naturally:

நரை முடியை கருமையாக்க முதலில் ஒரு Hair Pack தயார் செய்ய வேண்டும். அதன் பிறகு ஒரு ஜூஸினை செய்து அதனை குடிக்க வேண்டும்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

தேவையான பொருட்கள்:

  1. வெள்ளரிக்காய்- 2
  2. நெல்லிக்காய்- 5
  3. கருவேப்பிலை- 1 கைப்பிடி அளவு
  4. கற்றாழை- சிறிய துண்டு 
  5. நெல்லிக்காய் பவுடர்- 1 தேக்கரண்டி 
  6. தேங்காய் எண்ணெய்- 1 தேக்கரண்டி 

நரை முடி கருப்பாக ஜூஸ்:

நரை முடி கருப்பாக மாற

Step- 1:

முதலில் ஒரு பவுலில் 2 வெள்ளரிக்காய் எடுத்துக்கொண்டு அதன் மேலே சிறிதளவு உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் ஊற வைத்து கொள்ளுங்கள்.

Step- 2:

10 நிமிடம் கழித்த பிறகு தண்ணீரில் ஊற வைத்துள்ள வெள்ளரிக்காயை எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள்.

Step- 3:

அடுத்து எடுத்துவைத்துள்ள நெல்லிக்காயை அதன் உள்ளே இருக்கும் கொட்டையினை நீக்கி விடுங்கள். இப்போது ஒரு மிக்சி ஜாரில் நறுக்கி வைத்துள்ள வெள்ளரிக்காய், நெல்லிக்காய் மற்றும் சிறிதளவு கருவேப்பிலை இவை அனைத்தையும் நன்றாக ஜூஸ் போல அரைத்து விடுங்கள்.

Step- 4:

இப்போது நீங்கள் தயார் செய்து வைத்துள்ள ஜூஸை வடிகட்டி அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து குடித்து விடுங்கள். இந்த ஜூஸை குடிப்பதன் மூலம் நமது உங்களுடைய முடிக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைத்து நரை முடியும் கருப்பாக மாறிவிடும் மற்றும் முடி நீளமாகவும் வளரும்.

 இதையும் படியுங்கள்⇒ பாலை முகத்தில் இப்படி அப்ளை செய்தால் இவ்வளவு அதிசயம் நடக்குமா.!

நரை முடி கருப்பாக மாற என்ன செய்ய வேண்டும்:

கற்றாழை ஜெல் தயாரித்தல்:

முதலில் எடுத்துவைத்துள்ள கற்றாழையை சுத்தமான தண்ணீரில் அலசி கொண்டு அதில் இருந்து ஜெல்லை எடுத்து கொள்ள வேண்டும். அதன் பிறகு அந்த ஜெல்லை மிக்சி ஜாரில் போட்டு அரைத்து கொள்ளுங்கள். 

கருவேப்பிலை பவுடர் தயாரித்தல்:

 கருவேப்பிலையில் கால்சியம், மெக்னீசியம் மற்றும் நார்சத்து போன்ற சத்துக்கள் இருக்கிறது. இந்த சத்துக்கள் அனைத்தும் முடியை கறுப்பகவும் மற்றும் நீளமாகவும் வளர செய்யும்.  

அதனால் 1 கைப்பிடி அளவு கருவேப்பிலை எடுத்துக்கொண்டு அதனை வெயிலில் நன்றாக காய வைத்து கொள்ளுங்கள். பின்பு அந்த கருவேப்பிலையை மிக்சி சேர்த்து தண்ணீர் இல்லாமல் பவுடர் போல அரைத்து கொள்ளுங்கள். 

பவுலில் பொருட்களை சேர்த்தல்:

அடுத்து ஒரு பவுலில் தேங்காய் எண்ணெய் 1 தேக்கரண்டி, கருவேப்பிலை பவுடர் 1 தேக்கரண்டி, கற்றாழை ஜூஸ் 2 தேக்கரண்டி மற்றும் நெல்லிக்காய் பவுடர் 1 தேக்கரண்டி இவை அனைத்தையும் நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

சருமம் எப்போதும் அழகாகவும் பளபளப்பாகவும் இருக்க இந்த Home Rremedy ட்ரை பண்ணுங்க ..!

அப்ளை செய்யும் முறை:

 நரை முடி கருப்பாக

5 நிமிடம் கழித்து கலந்து வைத்துள்ள Hair Pack-கை தலையில் நன்றாக அப்ளை செய்து மசாஜ் செய்து கொண்டு 20 நிமிடம் கழித்து தலை குளித்து விடுங்கள்.

நீங்கள் முதலில் ஜூஸை குடித்து அதன் பிறகு இடைவெளி விட்டு இந்த ஹேர் பேக்கை தலையில் அப்ளை செய்து குளித்தால் போதும் நரை முடியும் கருப்பாக மாறிவிடும் மற்றும் முடி நீளமாக வளரும். 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement