15 நாளில் கொட்டிய முடி வளர இத மட்டும் செய்ங்க | Karisalankanni Oil For Hair Growth in Tamil

karisalankanni oil for hair growth in tamil

மூலிகை எண்ணெய் தயாரிப்பது எப்படி? | How to Make Karisalankanni Oil For Hair in Tamil

தலை முடி வளர்ச்சி அடைவதற்கு நாம் நிறைய வழிகளை பின்பற்றுகிறோம். முடி நன்றாக வளர்ச்சி அடைவதற்கும், அதனுடைய வலிமைக்கும் எண்ணெய் மிகவும் முக்கியமான ஒன்று. நாம் தினமும் உபயோகபடுத்தும் பொருளில் தேங்காய் எண்ணெய் முக்கிய பங்காற்றுகிறது என்று தான் சொல்ல வேண்டும். எண்ணெய் தேய்ப்பதனால், முடியின் வேர்க்கால்கள் குளிர்ச்சியடைந்து பலமாகின்றன. அந்த வகையில் முடியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும் மூலிகை எண்ணெய் வீட்டிலேயே எப்படி தயார் செய்யலாம் என்று இந்த தொகுப்பில் படித்து தெரிந்துகொள்வோம் வாங்க.

வெள்ளையாக இருக்கும் தலை முடியில் இதை மட்டும் தடவுங்க அப்புறம் எப்படி இருக்குனு பாருங்க

தேவையான பொருட்கள்:

 1. கரிசலாங்கன்னி – தேவையான அளவு
 2. கருவேப்பிலை – சிறிதளவு
 3. நெல்லிக்காய் – பத்து
 4. நல்லெண்ணெய் – 1 லிட்டர்

செய்முறை:

how to make karisalankanni oil for hair in tamil

ஸ்டேப்: 1

 • தேவையான அளவு கரிசலாங்கன்னியை எடுத்து அதை நன்கு ஊறவைத்து கழுவி கொள்ளவும். அதேபோல் கருவேப்பிலை சிறிதளவு, நெல்லிக்காய் பத்து இரண்டையும் கழுவி எடுத்து கொள்ளவும்.

ஸ்டேப்: 2

 • பின்னர் நெல்லிக்காய், கரிசலாங்கன்னி, கருவேப்பிலை மூன்றையும் தண்ணீர் சேர்க்காமல் பேஸ்ட் போல நன்றாக அரைத்து கொள்ளவும்.

ஸ்டேப்: 3

 • ஒரு இரும்பு வாணலியில் 1 லிட்டர் சுத்தமான நல்லெண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் வைத்து சூடாக்கவும். பின்னர் அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் விழுதை சேர்த்து கிளறவும். இதை 20 நிமிடம் வரை காய்ச்சவும்.
 • இதை நன்றாக வடிகட்டி ஒரு பாட்டிலில் ஊற்றி கொள்ளவும். அவ்வளவு தான் சூப்பரான ஒரு மூலிகை எண்ணெய் தயார். இதில் இருக்கும் கருவேப்பிலை இள நரையை தடுப்பதற்கும், முடி வளர்ச்சிக்கும் பெரிதும் உதவியாக இருக்கும்.

பயன்படுத்தும் முறை:

 • எண்ணெயை தலையில் ஊற்றி கை விரல்களால் உச்சந்தலையில் நன்றாக மசாஜ் செய்யவும். மசாஜ் செய்து விட்டு நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பூவல் தலையை அலசி கொள்ளலாம்.
 • இந்த எண்ணெயை நீங்கள் தினமும் அல்லது வாரத்திற்கு ஒரு முறை கூட உபயோகபடுத்தலாம். இதனை தினமும் பயன்படுத்துவதால் முடிகள் உடைவது குறைக்கப்படும்.
 • உடல் சூடு அதிகம் உள்ளவர்கள் இரவில் இந்த எண்ணெயை தலையில் தடவி மறு நாள் காலையில் தலை குளித்து விடலாம்.

பயன்கள்:

 • பொடுகு தொல்லையை நீக்க பெரிதும் உதவுகிறது.
 • உச்சந்தலையில் ஏற்படும் அரிப்பு மற்றும் வறட்சி இவற்றை போக்க உதவுகிறது. இந்த எண்ணெய்யை கொண்டு தலையில் மசாஜ் செய்யும் போது எளிதில் ஊடுருவி கூந்தலுக்கு தேவையான ஈரப்பதத்தை வழங்குகிறது.
 • கரிசலாங்கண்ணி முடிக்கு மட்டுமல்ல உடலுக்கும் பல விதமான நன்மைகளை தரக்கூடியது. இந்த எண்ணெய் மன அழுத்தத்தால் ஏற்படும் தலைவலியில் இருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது.
 • மக்னீசியம் இந்த எண்ணெயில் இருப்பதால் மன நிலை மற்றும் தூக்க முறைகளை மேம்படுத்த உதவியாக இருக்கிறது.
ஒரு கை முளைக்கட்டிய வெந்தயம் போதும் 18 நாளில் உங்கள் முடி இப்படி வளரும்!

 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tami