தேங்காய் எண்ணெய்க்கு பதிலாக இந்த எண்ணெய் தடவி பாருங்கள் எப்படி முடி வளருதுனு

Advertisement

முடி கருமையாக வளர எண்ணெய்

அனைத்து நல்லுள்ளங்களுக்கும் அன்பான வணக்கங்கள் இன்று வரை அனைவருக்கும் இருக்கும் பிரச்சனை என்னவென்றால் தலை முடி உதிர்வு இளநரை இதுபோன்ற நிறைய பிரச்சனைகள் இருந்து வருகிறது. தினம்தோறும் முடி உதிர்வதை தடுக்க மருத்துவ ரீதியாக நிறைய வகையாக எண்ணெய்களை அறிமுகப்படுத்தி வருகிறார்கள். அதனை தடவி வருவதால் இப்போது முடி உதிர்வை தடுக்கும் பக்க விளைவுகள் எப்படி இருக்கும் என்று யாருக்கும் தெரியாது. அதனால் இன்றைய பதிவில் வீட்டில் இயற்கையான முறையில் தயாரிக்கும் எண்ணெயை பற்றி பார்பபோகிறோம்.

கறிவேப்பிலை எண்ணெய் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:

  • 1 லிட்டர் தேய்காய் எண்ணெய்
  • அதற்கு தகுந்த கருவேப்பிலை
  • வெந்தயம் – 50

இந்த மூன்று பொருட்கள் மட்டும் போதுமானது உங்களுக்கு கிடைக்கும் என்றால் அதில் செம்பருத்தி, 2 பெரியநெல்லிக்காய், கையாந்தரை இலை கொஞ்சம், கீழாநெல்லி  இதில் உங்களுக்கு கிடைக்கும் பொருட்களை சேர்த்துக்கொள்ளலாம்.

செய்முறை:

முதலில் கருவேப்பிலையை கொஞ்சம் வாடும் வரை காயவிடவும். அதன் பின் வெந்தயத்தை நன்கு காயவைக்க வேண்டும். இரண்டும் நன்றாக காயவைத்தால்  பொடியாக அரைப்பதற்கு சுலபமாக இருக்கும்.

இப்போது காயவைத்த இரண்டையும். எடுத்து மிக்சி ஜாரில் வெந்தயத்தை முதலில் போட்டு அரைவேண்டும். பின் அதன் கூடவே கருவேப்பிலை போட்டு நன்றாக அரைக்கவேண்டும்.

கடைசியில் மேல் கொடுக்கப்பட்ட பொருட்களை காயவைத்து எடுத்து வைத்திருந்தால் அதனையும் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

இப்போது ஒரு கடாயில் ஒரு லீட்டர் தேங்காய் எண்ணெய் ஊற்றி நன்றாக காயவிடவும். காய்ந்த பின் அதில் நீங்கள் அரைத்து பொடியாக வைத்த பொருட்களை சேர்த்து அதில் போட்டு அடுப்பை நிறுத்திடவும் பின் அது 10, 20 நிமிடம் ஊறவிடவும்.

நன்றாக அதில் சாயம் இறங்கிய பின் அதனை ஒரு துணியில் வடிகட்டி கொள்ளவும். சூடு ஆறிய பின் கடைசியில் வடிகட்டினால் போதும் அது தூளாக இருக்கும். உங்களுக்கு அது தேவையில்லை என்றால் அதனை வடிகட்டி கொள்ளலாம்.

இந்த தேய்காய் எண்ணெயை தினமும் தலையில் தடவி பாருங்கள் 100% சதவீதம் உங்களுக்கு முடி உதிர்வு மற்றும் இளம் நரை, முடி கருமையாக மாறுவது உறுதி. கண்டிப்பாக இந்த எண்ணெயை செய்து தடவி பாருங்கள்.

அப்படி எண்ணெய் பிடிக்காது என்றால் இதை தடவி குளித்து பாருங்கள் ⇒ முழு பதிவுகளை தெரிந்துகொள்ள   ⇒ White Hair Solution

இதுபோன்று புது புது அழகு குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty tips in tamil
Advertisement