கேரளா பெண்களின் சருமம் பளபளப்பாக இருப்பதற்கான ரகசியம்..!

Advertisement

கேரள பெண்களின் அழகு குறிப்புகள் | Kerala Tips for Glowing Skin in Tamil

Kerala Tips For Glowing Skin: வணக்கம் நண்பர்களே இன்றைய அழகு குறிப்பு பகுதியில் கேரளா பெண்களின் பொலிவான சருமத்திற்கு அவர்கள் பயன்படுத்தும் Face pack என்னவென்று தெரிந்து கொள்ளலாம் வாங்க. பெண்கள் என்றாலே அழகு தான், அதிலும் கேரளத்து பெண்கள் என்றால் சற்று கூடுதலான அழகு என்றே சொல்லலாம். இவர்கள் தங்களுடைய சருமத்தை பராமரிப்பதற்கு தேவையற்ற எந்த ஒரு இரசாயனம் கலந்த கிரீம்களையும் பயன்படுத்த மாட்டார்களாம். சரும அழகை பராமரிக்க எப்பொழுதும் இயற்கைப் பொருட்களையே பயன்படுத்துவார்களாம், அவர்கள் அப்படி என்ன அழகு சாதன பொருட்கள் பயன்படுத்துகிறார்கள் என்று பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

Kerala Tips for Glowing Skin in Tamil

  1. அஸ்வகந்தா பவுடர் – 2 டேபிள் ஸ்பூன்
  2. தயிர் – 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை – Kerala Tips for Glowing Skin in Tamil:

டிப்ஸ்: 1

  • Kerala Tips for Glowing Skin in Tamil: ஒரு சுத்தமான பௌலில் 2 டேபிள் ஸ்பூன் அஸ்வகந்தா பவுடர், 2 டேபிள் ஸ்பூன் சுத்தமான தயிர் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும். பின் இதை முகத்தில் தடவி அரை மணி நேரம் காய வைக்கவும். அரைமணி நேரம் கழித்து குளிர்ந்த நீரினால் முகத்தை கழுவி விடவும்.
  • இந்த முறையை நீங்கள் தினமும் செய்து வந்தால் சருமத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், பருக்கள் அனைத்தும் நீங்கி முகம் பொலிவாக இருக்கும்.

டிப்ஸ்: 2

  • Kerala Ayurvedic Beauty Tips in Tamil: ஒரு சிலருக்கு நெற்றி, மூக்கு மற்றும் வாயை சுற்றி கருமையாக இருக்கும் அதையெல்லாம் இதில் இருக்கும் அஸ்வகந்தா பவுடர் முழுமையாக நீக்கி சருமத்தை வெள்ளையாக மாற்றி விடும்.
  • சளி மற்றும் சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் தயிருக்கு பதிலாக ரோஸ் வாட்டர் அல்லது சாதாரண தண்ணீரை பயன்படுத்தி கொள்ளலாம்.

தேவையான பொருட்கள் – Kerala Tips for Glowing Skin in Tamil:

கேரள பெண்களின் அழகு குறிப்புகள்

  1. பாசிப்பயறு – 1 கப்
  2. மைசூர் பருப்பு (Masoor Dal) – 1 கப்
  3. பாதாம் –  4
  4. Red Sandal Powder – 1 டேபிள் ஸ்பூன்
  5. ரோஜா இதழ்கள் – சிறிதளவு (காய வைத்தது)
  6. கடலை மாவு – 1 கப்
  7. அரிசி மாவு – அரை கப்
  8. குங்குமப்பூ – சிறிதளவு

செய்முறை – முகம் பொலிவு பெற என்ன செய்வது?

டிப்ஸ்: 1

  • Kerala Tips for Glowing Skin in Tamil: ஒரு கப் பாசிப்பயறு, 1 கப் மைசூர் பருப்பு (Masoor Dal), பாதாம் 4, 1 டேபிள் ஸ்பூன் Red Sandal Powder (ரெட் சாண்டலுக்கு பதிலாக சாதாரண சந்தனம் சேர்த்து கொள்ளலாம்), காய வைத்த ரோஜா இதழ்கள் சிறிதளவு (ரோஸ் பவுடர்), கடலை மாவு 1 கப், அரை கப் அரிசி மாவு, சிறிதளவு குங்குமப்பூ சேர்த்து பவுடர் போல அரைத்து கொள்ளவும்.

டிப்ஸ்: 2

  • Kerala Ayurvedic Beauty Tips in Tamil: பின் இந்த பவுடருடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல செய்து கொள்ளவும். பின் இந்த பேஸ்டை முகத்தில் தடவி 20 நிமிடம் காயவைத்து பின்னர் நீரால் கழுவி விடலாம், சோப்பை உபயோகப்படுத்த கூடாது.
  • இந்த பவுடரை நீங்கள் குளியல் பவுடராகவும் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த முறையை நீங்கள் தினமும் செய்து வந்தால் சருமத்தில் இருக்கும் தழும்புகள், தேவையற்ற ரோமங்கள், Black heads, முகச்சுருக்கம் நீங்கி இயற்கையாகவே பொலிவான சருமத்தையும், அழகான சருமத்தையும் பெறலாம்.
கருமையான கைகளை வெள்ளையாக மாற்ற வேண்டுமா?

 

 இயற்கை அழகு குறிப்புகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Natural Beauty Tips
Advertisement