ஸ்ட்ரெய்டனிங் செய்வதற்கு இனி 1 ரூபாய் கூட செலவு இல்லாமல் வீட்டிலே செய்யலாம்..!

Advertisement

ஸ்ட்ரெய்டனிங் செய்வது எப்படி

ஹேய் நண்பர்களே..! இன்றைய பதிவில் எல்லோருக்கும் பிடித்த அழகு குறிப்பு பற்றி தான் பார்க்கப்போகிறோம். தலையில் உள்ள முடி எவ்வளவு நீளமாக இருந்தாலும் பார்லருக்கு சென்று மேலும் அழகு சேர்க்கின்றனர். ட்ரெண்டிங் என்னவோ அதை தான் அனைவரும் விரும்புகின்றனர். அதற்காக பணத்தை செலவு செய்து வருகின்றனர். இனி 1 ரூபாய் கூட செலவு இல்லாமல் வீட்டில் இருந்த படியே ஸ்ட்ரெய்டனிங் செய்வது எப்படி என்று படித்து பயன்பெறுவோம் வாங்க..!

தலை முடிக்கும், முகத்திற்கும் நன்மைகளை அள்ளி தருகிறதாம் இந்த வெற்றியிலை..!

முடி ஸ்ட்ரெய்டனிங் செய்ய:

பெண்களுக்கு அழகு சேர்ப்பது என்றாலே ரொம்ப பிடிக்கும். அந்த அழகை கூட்டுவதற்கு வீட்டில் சமையலுக்கு பயன்படும் வெண்டைக்காய் மட்டும் போதும். . உங்கள் முடி இயற்கை அழகிலேயே கூந்தலை நேராகவும், மிருதுவான வைக்க  செய்யவும் தேவையான மூலக்கூறு வெண்டைக்காயில் இருக்கிறது.

ஸ்டேப் -1

முடி ஸ்ட்ரெயிட்டனிங் செய்வதற்கு 4 வெண்டைக்காய் இருந்தால் போதும். அந்த வெண்டைக்காய் முற்றலாக இருக்க கூடாது. அது மாதிரி ரொம்ப பிஞ்சாகவும் இருக்க கூடாத. இரண்டிற்கும் இடைப்பட்ட சுத்தமான வெண்டைக்காயாக இருக்க வேண்டும். பிறகு அந்த 4 வெண்டைக்காயையும் மேல் மற்றும் அடிப்பகுதியை நீக்கிவிட்டு சிறிய சிறிய துண்டாக நறுக்கி கொள்ளவும்.

ஸ்டேப் -2

நறுக்கி வைத்துள்ள வெண்டைக்காயை அடுப்பில் ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி  வெண்டைக்காயை நன்றாக கொதிக்க விடவும். கொதித்து சுருங்கிய பிறகு அடுப்பை அணைத்து விட்டு தனியாக வெண்டைக்காயை ஆற வைக்க வேண்டும்.

ஸ்டேப் -3

வெண்டைக்காய் தண்ணீரில் நன்றாக ஆரிய பிறகு மிக்சி ஜாரில் போட்டு நைசாக அரைத்து கொள்ளுங்கள். அதன் பிறகு அரைத்த வெண்டைக்காய் ஜெல்லை தலை முழுவதும் தடவி 1/2 மணிநேரம் அப்படியே வைத்து இருக்கவேண்டும்.

ஸ்டேப்-4

கடைசியாக 1/2 மணிநேரம் களித்த பிறகு நீங்கள் தலை அலசி குளித்துவிடுங்கள். தலை நன்றாக காய்ந்த பிறகு உங்களுடைய முடி கெரட்டின் ட்ரீட்மென்ட் செய்தது போல இருக்கும். அதுமட்டுமல்லாம் கண்டிஷனிங் செய்தது போல முடி மிருதுவாக இருக்கும்.

இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty tips in tamil

 

Advertisement