வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

உங்கள் முடிக்கு இந்த எண்ணெயை மட்டும் தடவி பாருங்க..! நீங்களே போதும் போதும்னு சொல்ற அளவுக்கு முடி வளர்ந்துவிடும்..!

Updated On: February 28, 2023 6:50 AM
Follow Us:
Long Hair Growth Oil At Home in Tamil
---Advertisement---
Advertisement

Long Hair Growth Oil At Home

ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருமே முடி உதிர கூடாது என்று நினைப்பார்கள்.  பெண்கள் முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் ஆண்கள் இருக்கின்ற முடி கொட்டாமல் இருந்தாலே போதும் என்று சொல்வார்கள். ஆனால் பெண்களுக்கு அப்படி கிடையாது. எவ்வளவு முடி வளர்ந்தாலும் அவர்களின் ஆசை குறையவே குறையாது.

அதற்காக அவர்கள் கடைகளில் கெமிக்கல் சேர்க்கப்பட்டு விற்கப்படும் எண்ணெய்கள் மற்றும் ஷாம்புக்களை வாங்கி பயன்படுத்துவார்கள். இதனால் இருக்கின்ற முடியும் கொட்ட ஆரம்பித்து விடும். அதனால் கடைகளில் கிடைக்கும் எண்ணெய்களை வாங்கி பயன்படுத்துவதை விட உங்கள் வீட்டிலேயே இயற்கையான பொருட்களை கொண்டு எண்ணெய் தாயர் செய்து முடிக்கு தடவலாம். முடியை அடர்த்தியாகவும் நீளமாகவும் வளர செய்யும் எண்ணெய் எப்படி தயார் செய்வது என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Long Hair Growth Oil At Home in Tamil:

  1. தேங்காய் எண்ணெய் – 1 லிட்டர்
  2. வெந்தயம் – 3 டேபிள் ஸ்பூன்
  3. கடுகு – 1 டேபிள் ஸ்பூன்
  4. கிராம்பு – 8
  5. நெல்லிக்காய் – 4
  6. சின்ன வெங்காயம் – 6
  7. மருதாணி இலை – சிறிதளவு
  8. செம்பருத்தி இலை – 1 கைப்பிடி அளவு
  9. செம்பருத்தி பூ – 20
  10. துளசி – 1 கைப்பிடி அளவு
  11. கருவேப்பிலை – 1 கைப்பிடி அளவு
  12. அருகம்புல் – 1 கைப்பிடி அளவு
போதும் போதும் என்று சொல்ற அளவுக்கு முடி வளர வேண்டுமா..? அப்போ இந்த எண்ணெயை தடவுங்க..!

கடாயை அடுப்பில் வைக்கவும்:

கடாயை அடுப்பில் வைக்கவும்

முதலில் ஒரு இரும்பு கடாயை அடுப்பில் வைக்கவும். பின் அதில் 1 லிட்டர் அளவிற்கு தேங்காய் எண்ணெய் ஊற்ற வேண்டும். பின் எண்ணெய் சூடானதும் அடுப்பை குறைத்து வைத்து கொள்ளவும். பிறகு அதில் கடுகு 1 டேபிள் ஸ்பூன், வெந்தயம் 3 டேபிள் ஸ்பூன், 8 கிராம்பு சேர்த்து கலந்து விடவும்.

அடுத்து 4 நெல்லிக்காய் மற்றும் சின்ன வெங்காயம் 6 இவற்றை தனித்தனியாக மிக்சி ஜாரில் போட்டு அரைத்து எண்ணெயில் சேர்த்து கலந்து விட வேண்டும்.

Long Hair Growth Oil

அடுத்து அதில் மருதாணி இலை, செம்பருத்தி இலை 1 கைப்பிடி அளவு, செம்பருத்தி பூ, துளசி 1 கைப்பிடி அளவு, கருவேப்பிலை 1 கைப்பிடி அளவு மற்றும் அருகம்புல் 1 கைப்பிடி அளவு சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.

ஒரு வாரத்தில் 3 நாட்கள் மட்டும் இதை செய்தால் புதுமுடி வளர Help பண்ணும்..!

 

Long Hair Growth Oil in tamil

பின் இதை 15 லிருந்து 20 நிமிடம் வரை நன்றாக கொதிக்க விட வேண்டும். எண்ணெயில் சேர்த்த பொருட்களின் நிறம் மாறியதும் அடுப்பில் இருந்து இறக்கி ஆறவிட வேண்டும்.

எண்ணெய் ஆறியதும் அதை வடிகட்டி ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்து கொள்ளவும்.  இந்த எண்ணெயை தினமும் நீங்கள் தலையில் தடவி வந்தால் ஒரு மாதத்தில் உங்கள் முடியின் வளர்ச்சியை நீங்களே காண்பீர்கள். இதில் சேர்க்கப்பட்டிருக்கும் பொருட்கள் அனைத்தும் முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்தும். அதனால் இந்த எண்ணெயை நீங்கள் தடவினால் நீங்களே போதும் போதும் என்று சொல்கின்ற அளவிற்கு முடி வளர்ந்து விடும்.  

இதையும் படியுங்கள் ⇒ முகத்தில் எண்ணெய் பசை நீங்கி, பருக்களை நீக்க இந்த ஒரு பொருள் போதும்..! 

 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

hair oil

5 மடங்கு முடி அடர்த்தியாக வளர இந்த எண்ணெய் போதும்..!

How to Remove Dark Spots on Men's Face in Tamil

ஆண்களின் முகத்தில் உள்ள கருமையை நீக்க இந்த டிப்ஸ் மட்டும் Follow பண்ணுங்கள்..!

ஆண்கள் முடி உதிர்வை தடுக்க இதோ சில வழிகள்..!

How to Control Hair Fall in Tamil

7 நாட்களில் முடி உதிர்ந்த இடத்தில் புதிய முடி வளர இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்..!

1 மணிநேரத்தில் உங்க தலையில் உள்ள அனைத்து நரைமுடிகளும் கருப்பாக மாற இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்..!

கை விரல்கள் அழகாக இருக்க சில அழகு குறிப்புகள்..!

Wrinkles Hands Home Remedy in Tamil

இத மட்டும் தடவுங்க ஐந்தே நிமிஷத்துல கை சுருக்கம் காணாம போகும்..

Dandruff treatment in tamil

100% பொடுகு நீங்க எளிய வழிகள்..! Dandruff Tips..! Dandruff treatment in tamil..!

 Hair Oil For Hair Growth Homemade Tamil

இந்த ஹேர் ஆயிலை 1 வாரம் மட்டும் பயன்படுத்தி பாருங்கள்..! நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு முடி வளரும்..!