30 நாள் Challenge முடி உதிர்வை நிறுத்தி முடி அடர்த்தியாக வளர முருங்கைக்கீரை ஹேர் பேக் பயன்படுத்துங்க…!

mudi uthirvathai thadukka

முடி உதிர்வதை குறைக்க

அனைவருக்கும் முடி உதிர்வு பிரச்சனை அதிகமாக இருக்கிறது. அத்தகைய முடி உதிர்வை குறைப்பதற்கு நாம் நிறைய முயற்சி செய்தாலும் நாளுக்கு நாள் முடி உதிர்வு அதிகமாகி கொண்டிருக்கிறது என்பது தான் பலருடைய கருத்தாக இருக்கிறது. அதனால் நீங்கள் எந்த வித செலவும் செய்யாமல் வீட்டில் இருந்த படியே முடி உதிர்வை நிறுத்தி இழந்த முடியை 30 நாட்களில் வளர செய்யலாம். ஆஹா அது எப்படி முடியும் இது கொஞ்சம் புதுசா இருக்கே அப்படி என்று அதிகமாக யோசிக்க வேண்டாம். ஆகையால் இன்றைய பதிவில் 30 நாள் Challenge ஆக சொல்லும் அந்த ஹேர் பேக் எப்படி தயார் செய்து முடிக்கு அப்ளை செய்வது என்று பதிவை தொடர்ந்து படித்து தெரிந்துக்கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்⇒ நரை முடியை நிரந்தரமாக கருப்பாக மாற்ற இந்த ஒரு எண்ணெயை மட்டும் பயன்படுத்துங்க..!

முடி உதிர்வதை தடுக்க அடர்த்தியாக முடி வளர:

முடி உதிர்வதை தடுக்க அடர்த்தியாக முடி வளர

தேவையான பொருட்கள்:

  • ஆளி விதை- 5 ஸ்பூன் 
  • அரிசி- 1 கப் 
  • முருங்கை கீரை- 2 கைப்பிடி அளவு 

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

ஸ்டேப்- 1

முதலில் எடுத்து வைத்துள்ள அரிசியை ஒரு கிண்ணத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் ஊற வைத்து விடுங்கள்.

ஸ்டேப்- 2

இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரத்தில் 2 டம்ளர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி ஊற வைத்துள்ள அரிசியை போட்டு நன்றாக 5 நிமிடம் கொதிக்க விடுங்கள்.

ஸ்டேப்- 3

5 நிமிடம் கழித்த பிறகு அடுப்பில் இருக்கும் அரிசியுடன் 5 ஸ்பூன் ஆளி விதியினை போட்டு மீண்டும் நன்றாக கொதிக்க விடுங்கள். அதன் பிறகு ஆளி விதை மற்றும் அரிசி இரண்டும் சேர்ந்து ஜெல் போன்ற பதத்திற்கு வந்துவுடன் அடுப்பை அணைத்து விட்டு ஜெல்லை இறக்கி விடுங்கள்.

ஸ்டேப்- 4

இப்போது நீங்கள் தயாரித்த ஜெல் சிறிது நேரம் ஆறியவுடன் அதனை வடிகட்டி ஒரு பாத்திரத்தில் வைத்து விடுங்கள்.

ஸ்டேப்- 5

அடுத்து 2 கைப்பிடி அளவு முருங்கைக் கீரை எடுத்துக்கொண்டு அதனை தண்ணீரில் சுத்தமாக அலசி மிக்சி ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 6

நீங்கள் அரைத்த முருங்கீரையை ஒரு காட்டன் துணியில் வடிகட்டி கொள்ளுங்கள். அதன் பிறகு வடிகட்டிய அந்த முருங்கைக்கீரை ஜூஸை ஆற வைத்து ஆளி விதை பேஸ்டுடன் சேர்த்து கலந்து 5 நிமிடம் அப்படியே வைத்து விடுங்கள்.  இப்போது உங்களுடைய முடிக்கு ஹேர் பேக் தயார் ஆகிவிட்டது. 

ஸ்டேப்- 7

5 நிமிடம் கழித்த பிறகு உங்களுடைய தலையில் நன்றாக தேங்காய் எண்ணெய் அப்ளை செய்து விட்டு அதன் பிறகு தயார் செய்து வைத்துள்ள ஹேர் பேக்கை முடியின் அனைத்து இடங்களிலும் அப்ளை செய்து 20 நிமிடம் கழித்து தலை குளித்து விடுங்கள். 

நீங்கள் தலை குளித்த மறுநாள் முடிக்கு நன்றாக தேங்காய் எண்ணெய் தடவி விடுங்கள். வாரத்திற்கு ஒரு முறை இது மாதிரி செய்தால் முடி உதிர்வு குறைந்த முடி அடர்த்தியாக வளரும். 

இதையும் படியுங்கள்⇒ வெறும் 5 நிமிடத்தில் முகத்தை Glowing Skin போல மாற்ற இதை Follow பண்ணி பாருங்க…!

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil