முகம் எப்பொழுதும் பொலிவுடன் இருக்க அழகு குறிப்புக்கள்
அன்பு நெஞ்சம் கொண்ட பொதுநலம்.காம் நேயர்களே..! இன்று நாம் பார்க்க இருப்பது மிகவும் சுலபமான மற்றும் மிகவும் எளியமுறையில் முகத்தை பொலிவடைய செய்வது எப்படி என்று தான் தெரிந்து கொள்ள போகின்றோம். அதுவும் நமது முகத்தை எப்படி எப்பொழுதும் பொலிவுடன் மற்றும் மினுமினுப்புடன் வைத்திருப்பது என்பதற்கான இரண்டு டிப்ஸ் பற்றித்தான் பார்க்க போகின்றாம். இன்றைய காலகட்டத்தில் நாம் வீட்டை விட்டு வெளியே சென்றாலே நமது சுற்றுச்சூழலில் உள்ள தூசுக்கள் மற்றும் புகைகளால் நமது முகம் பொலிவிழந்து காணப்படுகிறது.
அதனை போக்குவதற்கு இந்த பதிவில் உள்ள 2 டிப்ஸை மட்டும் பின்பற்றிப்பாருங்கள். நீங்களே உங்கள் முகத்தில் பொலிவு ஏற்படுவதை காண்பீர்கள் . சரி வாங்க அது என்ன டிப்ஸ் என்று பார்க்கலாம்.
முகம் எப்பொழுதும் பொலிவுடன் இருக்க டிப்ஸ் :
டிப்ஸ் -1:
முதலில் இந்த டிப்ஸிற்கு தேவையான பொருட்களை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
- சோம்பு – 1 டேபிள் ஸ்பூன்
- ஓட்ஸ் மாவு – 1 டீஸ்பூன்
- கடலைமாவு – 1 டீஸ்பூன்
- தண்ணீர் – தேவையான அளவு
முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் நாம் எடுத்து வைத்திருந்த 1 டேபிள் ஸ்பூன் சோம்பு சேர்த்து அதனுடன் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்கவிடவும்.
பிறகு தண்ணீர் கொதித்தவுடன் அதனை அடுப்பிலிருந்து இறக்கி சூடு ஆறியவுடன் ஒரு கிண்ணத்தில் வடிக்கட்டி அதனுடன் 1 டீஸ்பூன் ஓட்ஸ் மாவு, 1 டீஸ்பூன் கடலைமாவு சேர்த்து நன்கு கலந்த பிறகு நமது முகத்தில் தடவி வந்தால் நமது முகம் எப்பொழுதும் மிகவும் பொலிவுடன் காணப்படும்.
டிப்ஸ் -2:
தேவையான பொருட்கள்:
- கடுக்காய் – 5 காய்
- முல்தானி மெட்டி – 2 டேபிள் ஸ்பூன்
- தண்ணீர் – 100 மி.லி
முதலில் நாம் எடுத்துவைத்திருந்த கடுக்காய்களை ஒன்றும் இரண்டுமாக உடைத்து கொள்ளவும். பின்னர் அதனை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதனுடன் 100 மி.லி தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்க விடவும். பிறகு தண்ணீர் கொதித்தவுடன் அதனை அடுப்பிலிருந்து இறக்கி சூடு ஆறியவுடன் ஒரு கிண்ணத்தில் வடிக்கட்டி அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டியை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பிறகு அதனை நமது முகத்தில் தடவி வந்தால் நமது முகம் எப்பொழுதும் பொலிவுடனும், மற்றும் மினுமினுப்புடன் மாறுவதை நீங்களே காணலாம்.
இதையும் படியுங்கள் => ஒரே வாரத்தில் முகம் பளபளப்பாக இருக்க டிப்ஸ்
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |