அரிசி மாவை இப்படி ஒரு முறை அப்ளை செய்து பாருங்கள் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்…!

Advertisement

முகத்தில் எண்ணெய் பசை நீங்க

ஹாய் நண்பர்களே..! இன்றைய அழகு குறிப்பு பதிவில் முகத்தில் எண்ணெய் பசை நீங்கி முகம் வெள்ளையாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தெரிந்துகொள்ள போகிறோம். அரிசி மாவில் அப்படி என்ன இருக்கும் என்று அனைவரும் யோசிக்காதீர்கள். இன்றைய பதிவை படித்து அரிசி மாவை ஒரு முறை இப்படி அப்ளை செய்து பாருங்கள் ஒரே வாரத்தில் நீங்கள் ஆச்சரியப்படும் அளவிற்கு முகத்தில் எண்ணெய் பசை நீங்கி முகம் வெள்ளையாக மாறிவிடும். வாங்க நண்பர்களே பதிவை தொடர்ந்து படித்து தெரிந்துகொள்ளலாம்.

இதையும் படியுங்கள்⇒ ஒரே வாரத்தில் முடி உதிர்வை தடுத்து முடி அடர்த்தியாக வளர இதை ட்ரை செய்யுங்கள்…!

முகத்தில் எண்ணெய் பசை குறைய:

முகத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்கி முகம் வெள்ளையாக இரண்டு குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

குறிப்பு- 1

ஸ்டேப்- 1

முதலில் உங்கள் முகத்தை சுத்தமாக சோப்பு போட்டு கழுவி விடுங்கள். அதன் பிறகு ஒரு கிண்ணத்தை எடுத்து கொண்டு அதில் 2 ஸ்பூன் அரிசி மாவு மற்றும் 2 ஸ்பூன் காய்ச்சாத பால் இரண்டையும் சேர்த்து பேஸ்ட் போல் செய்து கொள்ளுங்கள்.

இப்போது தயார் செய்த பேஸ்டை முகத்தில் எல்லா இடங்களிலும் அப்ளை செய்து கொள்ளுங்கள். அதனை 10 நிமிடம் முகத்தில் மசாஜ் செய்து அதன் பிறகு முகத்தை கழுவி விடுங்கள்.

குறிப்பு- 2

அடுத்தது இரண்டாவது செய்முறையை செய்வதற்கு முதலில் ஒரு Face Pack தயார் செய்ய வேண்டும். அதை பற்றி விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

Face Pack தயார் செய்ய தேவையான பொருட்கள்:

  • அரிசி மாவு- 1 ஸ்பூன் 
  • முல்தானி மெட்டி- 1 ஸ்பூன் 
  • காப்பித்தூள்- 2 ஸ்பூன் 
  • ரோஸ் வாட்டர்- 2 ஸ்பூன் 

ஸ்டேப்- 1

முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து கொண்டு அதில் 1 ஸ்பூன் அரிசி மாவு மற்றும் முல்தானி மெட்டி- 1 ஸ்பூன் சேர்த்து இரண்டையும் நன்றாக பேஸ்ட் போல் கலந்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 2

அதன் பிறகு கலந்து வைத்துள்ள பேஸ்டுடன் 2 ஸ்பூன் அளவு காப்பித்தூள் சேர்த்து மீண்டும் நன்றாக கலந்து 5 நிமிடம் அப்படியே வைத்து விடுங்கள்.

ஸ்டேப்- 3

5 நிமிடம் களித்து கலந்து வைத்துள்ள பேஸ்டுடன் 2 ஸ்பூன் ரோஸ் வாட்டர் அல்லது 2 ஸ்பூன் காய்ச்சாத பால் சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள். அவ்வளவு தான் உங்கள் முகத்திற்கு Face Pack தயாராகி விட்டது.

ஸ்டேப்- 4

கடைசியாக உங்களுடைய முகத்தில் நீங்கள் தயார் செய்த Face Pack முகத்தில் அனைத்து இடங்களிலும் அப்ளை செய்து 20 நிமிடம் அப்படியே வைத்து அதன் பிறகு உங்களுடைய முகத்தை கழுவி விடுங்கள். இப்போது உங்களுடைய முகத்தை பாருங்கள் அரிசிமாவில் ஒளிந்து இருக்கும் அதிசயம் உங்களுக்கு புரியும்.

வாரத்திற்கு 1 முறை இது மாதிரி செய்து வந்தால் உங்கள் முகத்தில் இருக்கும் எண்ணெய் பசை நீங்கி முகம் வெள்ளையாக இருப்பதை கண்டு ஆச்சரியப்படுவீர்கள்.

தலையில் எப்போதும் நரை முடி வராமல் முடி கருகருவென்று இருக்க இதை பாருங்கள்..!

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil

 

 

Advertisement