முன் நெற்றியில் முடி வளர
சிலருக்கு முடிய வளரவில்லை என்ற பிரச்சனை இருந்து வருகிறது. ஆனால் இன்னும் சிலருக்கு முன் நெற்றியில் உள்ள முடி அனைத்தும் கொட்டி கொண்டே போகிறது என்ற பிரச்சனை உள்ளது. அதுவும் இத்தகைய பிரச்சனை ஆனது பெரும்பாலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் என அனைவருக்கும் இருந்து கொண்டு தான் உள்ளது. இதற்காக கடையில் விற்கும் பொருட்களை நாம் வாங்கி பயன்படுத்தினாலும் கூட முழுமையான பலனை அடைய முடியாது. ஆகவே நீங்கள் இவற்றை எல்லாம் நினைத்து கவலை பட வேண்டாம். ஏனென்றால் இன்றைய பதிவில் முன் நெற்றியில் முடி உதிர்ந்த இடத்தில் மீண்டும் எப்படி புதிய முடி வளர செய்வது என்று பார்க்கப்போகிறோம்.
முன் நெற்றியில் முடி வளர என்ன செய்வது:
எந்த விதாமான செயற்கை பொருட்களும் பயன்படுத்தாமலும் முற்றிலும் இயற்கை பொருட்களை மட்டும் வைத்து எப்படி முன் நெற்றியில் எப்படி புதிய முடியினை வளர செய்வது என்று விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:
- ஆளிவிதை- 2 ஸ்பூன்
- செம்பருத்தி பூ- 10
- கற்றாழை ஜெல்- 1 ஸ்பூன்
How to Increase Frontal Hair Growth:
ஸ்டேப்- 1
ஆளிவிதையில் முடி வளர்ச்சியினை அதிகரிக்க கூடிய நிறைய சத்துக்கள் உள்ளது. அதனால் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அதனுடன் 2 ஸ்பூன் ஆளிவிதை சேர்த்து நன்றாக கொதிக்க விடுங்கள்.
ஸ்டேப்- 2
செம்பருத்தி பூவானது முடி உதிர்ந்த இடத்தில் மீண்டும் புதிய முடியினை வளர செய்யும். அதனால் ஆளிவிதையுடன் எடுத்துவைத்துள்ள செம்பருத்தி பூவினை சுத்தம் செய்து அடுப்பில் கொதித்துள்ள ஆளிவிதை தண்ணீருடன் சேர்த்து 3 நிமிடம் வரை கொதிக்க விட்டு பின்பு இறக்கி விடுங்கள்.
ஸ்டேப்- 3
இப்போது பாத்திரத்தில் உள்ள ஜெல்லினை வடிகட்டி வைத்து நன்றாக வடிகட்டி விடுங்கள். பின்பு அதனுடன் 1 ஸ்பூன் கடையில் விற்கும் கற்றாழை ஜெல்லினை சேர்த்து மீண்டும் ஒரு 2 நிமிடம் கலந்து கொள்ளுங்கள். கடையில் விற்கும் ஜெல்லினை பயன்படுத்தினால் தான் நாம் தயாரிக்கும் ஜெல் வீணாகாமல் இருக்கும்.
இப்போது முன் நெற்றியில் முடி வளர வைக்கக்கூடிய ஜெல் தயார்.
இதையும் படியுங்கள்⇒ உங்க உதடு எவ்வளவு கருமையாக இருந்தாலும், அதில் இதை மட்டும் தடவி பாருங்க..
அப்ளை செய்யும் முறை:
நீங்கள் இந்த ஹேர் ஜெல்லினை இரவு மட்டும் தான் பயன்படுத்த வேண்டும். அதனால் தயார் செய்து வைத்துள்ள ஜெல்லினை உங்களுடைய தலையில் எங்கு அப்ளை செய்ய வேண்டுமோ அந்த இடத்தில் எல்லாம் பொறுமையாக அப்ளை செய்து கொள்ளுங்கள்.
இவ்வாறு நீங்கள் ஒரு 10 நாட்கள் செய்தால் போதும் முடி வளர்ந்து விடும்.
இதையும் படியுங்கள்⇒ இரண்டு நாட்களில் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை மறைக்க உருளைக்கிழங்கு மட்டும் போதும்..
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |