முகத்தில் எண்ணெய் வழிகிறது என்று கவலைப்படாதீர்கள்.! இந்த டிப்ஸை மட்டும் Follow பண்ணா முகம் பிரகாசிக்கும்

oily skin home remedies in tamil

முகத்தில் எண்ணெய் பசை நீங்க

ஆயில் ஸ்கின் உள்ளவர்கள் எவ்வளவு தான் மேக்கப் போட்டாலும் கொஞ்ச நேரத்திற்கு மட்டும் தான் முகம் அழகாக இருக்கும். சிறிது நேரம் கழித்து பார்த்தால் முகத்தில் எண்ணெய் வலிந்து கொண்டே இருக்கும். முக்கியமாக ஆயில் ஸ்கின் உள்ளவர்கள் அடிக்கடி முகத்தை கழுவ வேண்டும். முகத்தை கழுவுவதால் 50 % ஆயில் ஸ்கின் சரி ஆகிவிடும்.முழுமையாக ஆயில் ஸ்கினை மாற்றுவதற்கு இந்த பதவில் கூறியுள்ள டிப்ஸை மட்டும் Follow பண்ணுங்க நண்பர்களே.!

முட்டை வெள்ளை கரு:

முட்டை வெள்ளை கரு

ஒரு கிண்ணத்தில் முட்டையின் வெள்ளை கரு, எலும்பிச்சை சாறு 1 தேக்கரண்டி சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். பின் இந்த கலவையை  முகத்தில் அப்ளை செய்து 10 நிமிடம் கழித்து முகத்தை கழுவி விடுங்கள். இந்த குறிப்பை வாரத்தில் 2 அல்லது 3 முறை அப்ளை செய்யுங்கள்.

இதையும் படியுங்கள் ⇒ முகத்தில் எண்ணெய் பசை நீங்கி, பருக்களை நீக்க இந்த ஒரு பொருள் போதும்

தேன் | எலும்பிச்சை சாறு:

முகத்தில் எண்ணெய் பசை நீங்க

ஒரு கிண்ணத்தில் ஓட்ஸ் 2 தேக்கரண்டி, தேன் 1 தேக்கரண்டி, எலும்பிச்சை சாறு 1 தேக்கரண்டி சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். பின் இந்த கலவையை முகத்தில் அப்பளை செய்து 10 நிமிடம் வைத்திருந்து பிறகு முகத்தை கழுவவேண்டும். இந்த பேக்கை வாரத்தில் 2 முறை அப்ளை செய்யுங்கள். இதில் பயன்படுத்தியிருக்கும் பொருட்கள் அனைத்தும் முகத்தில் உள்ள ஆயிலை குறைத்து மிருதுவாக வைத்து கொள்ள உதவுகிறது.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

கற்றாழை ஜெல்:

கற்றாழை ஜெல்

கற்றாழையை சீவி அதில் உள்பகுதியில் இருக்கும் ஜெல்லை மட்டும் எடுத்து கொள்ளவும். இரவு தூங்குவதற்கு முன் கற்றாழை ஜெல்லை முகத்தில் அப்ளை செய்து காலையில் முகத்தை கழுவ வேண்டும்.

முல்தானி மெட்டி:

முல்தானி மெட்டி

ஒரு கிண்ணத்தில் முல்தானி மெட்டி, தக்காளி சாறு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த பேக்கை அப்ளை செய்து 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவி விடுங்கள். இந்த குறிப்பை தினமும் பயன்படுத்தி வந்தால் விரைவில் ஆயில் ஸ்கின் மாறிவிடும்.

இதையும் படியுங்கள் ⇒ முகத்தில் எண்ணெய் வழியாமல் இருக்க தீர்வு

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil