Regrow Hair Naturally in 3 Weeks at Home
முடி அதிகமாக இருக்க வேண்டும் என்று தான் அனைவரும் ஆசைப்படுகின்றோம். ஆனால் முடி உதிர்ந்து கொண்டே இருந்தால் எப்படி முடி அடர்த்தியாகவும், நீளமாகவும் இருக்கும். நம் முன்னோர்கள் காலத்தில் வயதான பிறகு முடி உதிர்வு பிரச்சனை ஏற்பட்டது,. ஆனால் இன்றைய கால கட்டத்தில் இளம் வயதினருக்கே முடி உதிர்வு பிரச்சனை ஏற்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் மன அழுத்தம், உணவு முறை, தூக்கமின்மை போன்ற காரணங்களினால் முடி உதிர்வு பிரச்சனை ஏற்படுகிறது.
3 வாரங்களில் முடி வளர உதவும் எண்ணெய்கள்:
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
மிளகுக்கீரை எண்ணெய்:
மிளகுக்கீரை எண்ணெய் முடி வளர்ச்சியை தூண்டும். இதை பயன்படுத்திய இரண்டு வாரங்களிலே முடி வளர்வதை நீங்களே காணலாம்.
ஒரு கிண்ணத்தில் தேங்காய் எண்ணெய் 2 தேக்கரண்டி, பாதாம் எண்ணெய், மிளகுக்கீரை எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த பேக்கை வாரத்திற்கு 2 முறை தலை முடி முழுவதும் தடவி 20 நிமிடம் வைத்திருந்து பிறகு தலை தேய்த்து குளிக்கவும்.
இந்த மூன்று எண்ணெய்களில் ஏதவாது ஒரு எண்ணெயை பயன்படுத்தினாலே நினைத்து பார்க்காத அளவிற்கு முடி வளரும்
வெங்காய சாறு:
உங்கள் முடிக்கு தேவையான மாவு வெங்காயத்தை எடுத்து கட் செய்து அதிலிருந்து சாறாக எடுத்து கொள்ளவும். வெங்காய சாற்றில் ஒரு முட்டையை உடைத்து இரண்டையும் ஒன்றாக கலந்து கொள்ளவும். இந்த பேக்கை தலை முடி முழுவதும் தடவி 30 நிமிடம் வைத்திருந்து ஷாம்பு பயன்படுத்தி தேய்க்க வேண்டும்.
கருவேப்பிலை மற்றும் தேங்காய் எண்ணெய்:
உங்கள் முடிக்கு தேவையான கருவேப்பிலை எடுத்து 100 தேங்காய் எண்ணையில் சேர்த்து கொதிக்க விடவும். இலையின் சாயம் எண்ணெயில் இறங்கியதும் அடுப்பை அணைத்து விடவும். ஆறியதும் சக்கை இல்லாமல் வடிக்கட்டி எண்ணெயை மட்டும் ஸ்டோர் செய்து வைத்து கொள்ளலாம். இந்த பேக்கை வாரத்திற்கு இரண்டு முறை தலை முடி முழுவதும் தடவி 1/2 மணி நேரம் வைத்திருந்து பிறகு தலை தேய்த்து குளிக்கவும்.
7 நாட்களில் முடி அசுர வளர்ச்சி அடைய இந்த ஹேர் பேக் ட்ரை பண்ணுங்க போதும்
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |