உங்க முகம் நாள் முழுவதும் பளப்பளப்பாக இருக்க அரிசிமாவுடன் இதை மட்டும் கலந்து போட்டால் போதும்..!

Advertisement

Rice Powder Face Pack in Home in Tamil

அனைவருமே முகத்தை பளபளப்பாகவும் அழகாகவும் வைத்திருக்க வேண்டும் என்று ஆசை படுவோம். ஆனால் பருக்கள், தூசி, கரும்புள்ளி போன்றவற்றால் முகம் பொலிவிழந்து காணப்படும். எனவே முகத்தை பளப்பளவென்று வைத்திருக்க மாதம் மாதம் பார்லருக்கு செல்வார்கள். ஆனால் பார்லருக்கு போகாமலே இயற்கையாகவே முகத்தை எப்போதும் அழகாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்க சில வழிகள் உள்ளன. அந்த வகையில் முகத்தை நாள் முழுவதும் பளபளப்பாகவும் அழகாவும் வைத்திருக்க நினைக்கும் அனைத்து நபர்களுக்கும் இப்பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதாவது வீட்டில் இருக்கும் அரிசி மாவு ஒன்று போதும் உங்கள் முகத்தை அழகாக்க. இதற்காக நீங்கள் பார்லருக்கு செல்ல வேண்டிய தேவையில்லை. வீட்டில் இருந்தே உங்கள் முகத்தை பளபளப்பாக்கலாம். ஓகே வாருங்கள் அரிசி மாவை முகத்திற்கு எப்படி பயன்படுத்துவது என்று இப்பதிவில் பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Multani Mitti Rice Flour Face Pack in Tamil:

 rice flour face pack for skin whitening in tamil

அரிசிமாவு பேஸ் பேக் செய்ய தேவையான பொருட்கள்:

  • அரிசிமாவு- 2 ஸ்பூன் 
  • பால்- தேவையான அளவு 
  • முல்தானி மெட்டி- 1 ஸ்பூன் 
  • காபி பவுடர்- 1/2 ஸ்பூன்
  • ரோஸ் வாட்டர்- தேவையான அளவு 

அரிசி மாவு பேஸ் பேக் செய்யும் முறை:

 multani mitti rice flour face pack in tamil

முதலில் ஒரு சுத்தமான கிண்ணத்தில் 1 ஸ்பூன் அரிசி மாவு எடுத்து கொள்ளுங்கள். அதனுடன் 1 ஸ்பூன் முல்தானி மெட்டி மற்றும் 1/2 ஸ்பூன் காபி பவுடர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

பிறகு தேவையான அளவு ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

இப்போது அரிசி மாவு பேஸ் பேக் ரெடி.!

தக்காளியுடன் இதை கலந்து போட்டால் போதும் நீங்களே ஆச்சரிப்படும் அளவிற்கு முகம் பளப்பளப்பாகும்..!

அப்ளை செய்யும் முறை:

முதலில் உங்கள் முகத்திற்கு Cleansing செய்து கொள்ளுங்கள். அதாவது ஒரு கிண்ணத்தில் சிறிதளவு அரிசிமாவு மற்றும் பால் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

இதை உங்கள் முகத்தில் அப்ளை செய்து 2 நிமிடம் வரை நன்றாக தேய்த்து விடுங்கள். பின்னர் முகத்தை தண்ணீரால் நன்றாக கழுவி துடைத்து விடுங்கள்.

இனி அரிசி கழுவிய தண்ணீரை பயன்படுத்தி சரும அழகை பாதுகாக்கலாம்..!

 

இப்போது உங்கள் முகத்தில் தயார் செய்து வைத்துள்ள அரிசிமாவு பேஸ் பேக்கை முகம் முழுவதும் அப்ளை செய்து கொள்ளுங்கள். பிறகு 15 நிமிடம் கழித்து முகத்தை தண்ணீரால் நன்றாக கழுவி விடுங்கள்.

இவ்வாறு நீங்கள் வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், அழுக்குகள் எல்லாம் நீங்கி முகம் நாள்முழுவதும் பளபளப்பாகவும் அழகாவும் இருக்கும்.

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement