தலை தேய்த்து குளிக்கும் போது இப்படி தான் ஷாம்பு போடுகிறீர்களா..! அப்போ ஏன் முடி உதிராது.?

Advertisement

ஷாம்பு போட்டு குளித்தால்

வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் தலையில் ஷாம்பு தேய்த்து குளிக்கும் முறையை பற்றி தான் தெரிந்துகொள்ள போகிறோம். இன்றைய காலத்தில் அனைவரும் ஷாம்பு போட்டு தான் தலை தேய்க்கிறோம். அந்த காலத்தில் உள்ளவர்கள் சீகக்காய் தேய்த்து குளிப்பார்கள். சீகக்காய் தேய்க்கும் போது அதில் தண்ணீரோ அல்லது சாதம் வடித்த கஞ்சியோ சேர்த்து கலந்து தேய்ப்பார்கள். இதனால் தான் நம் முன்னோர்களின் முடி நீளமாகவும், அடர்த்தியாகவும் இருந்தது. இப்போது சீயக்காய் என்றாலே பலருக்கும் தெரிவதில்லை. ஏனென்றால் ஷாம்புவை தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். இந்த ஷாம்புவை எப்படி அப்பளை செய்ய வேண்டும் என்று படித்து தெரிந்துகொள்வோம் வாங்க..

இதையும் படியுங்கள் ⇒ பொடுகு பிரச்சனை நீங்கி முடி அடர்த்தியாக வளர அட்டகாசமான டிப்ஸ் உங்களுக்காக..!

ஷாம்பு அப்ளை செய்யும் முறை:

நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பு எதுவாக இருந்தாலும் Direct-ஆ  தடவும் போது தலையில் அந்த இடத்தில் மட்டும் தான் அழுக்கு போகும். மற்ற இடத்தில் உள்ள அழுக்குகள் போகாது. அதுமட்டுமில்லாமல் இப்படி செய்வதினால் தலை முடி கொட்டும்.

 நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பு தலையில் தேய்ப்பதற்கு முன் ஷாம்புவை தண்ணீரில் கலந்து தேய்க்கவும். இல்லையென்றால் சாதம் வடித்த கஞ்சியில் கலந்து தேய்க்கலாம். இப்படி தேய்க்கும் தலை முடி உதிராது. அதோடு தலையில் எல்லா இடத்திலும் ஷாம்புவை அப்ளை செய்யும் போது அழுக்குகள் இருக்காது.  

தலைக்கு தேய்க்கும் போது அவசரம் அவசரமாக தேய்க்க கூடாது. மெதுவாக தலையை தேய்க்க வேண்டும். வேகமாக தேய்த்தால் தலை முடி உதிரும்.

தலை தேய்த்து குளிப்பதற்கு முன்பு தலையில் உள்ள சிக்குகளை எடுத்து விட்டு குளியுங்கள். சிக்கோடு குளித்தால் தலை தேய்க்கும் போது அப்படியே சிக்கு உள்ள முடி கொட்டும்.

அதே போல் வாரத்தில் ஏழு நாட்களும் தலை தேய்த்து குளித்தால் ஷாம்பு அப்ளை செய்யாதீர்கள். தொடர்ந்து ஷாம்பு அப்ளை செய்தால் அதிகமான முடி உதிரும். அதனால் இந்த தவறினை செய்யாதீர்கள்.

முக்கியமாக பெண்கள் மாதவிடாய் நேரத்தில் தொடர்ந்து தலை குளிப்பார்கள். அப்பொழுது தினமும் ஷாம்பு தேய்த்து தலை குளிப்பதை தவிர்த்து விடுங்கள். தொடர்ந்து ஷாம்பு போட்டு தலை குளித்தால் தலையில் உள்ள ஈரப்பதம் நீங்கிவிடும்.

நம் முன்னோர்கள் மாதவிடாய் நேரத்தில் தினமும் ஷாம்பு போட்டு தலை குளிக்காமல் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குளிக்க ஷாம்பு போட சொல்வார்கள். அதே போல் மூன்றாவது நாள் எண்ணெய் தேய்த்து குளிக்க சொல்வார்கள். இப்படியெல்லாம் நம் முன்னோர்கள்  செய்வதனால் தான் அவர்கள் முடி முழங்காலுக்கு கீழே இருந்தது. இந்த காலத்தில் உள்ளவர்கள் மாதத்தில் ஒரு தடவை கூட எண்ணெய் தேய்த்து குளிப்பதில்லை.

மேல் கூறப்பட்டுள்ளது போல் ஷாம்புவை அப்ளை செய்து தலை முடி உதிராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tami

 

Advertisement