முடி கொட்டுவதை நிறுத்தி முடி அடர்த்தியாக வளர தேங்காய் எண்ணெயை இப்படி பயன்படுத்துங்கள்.!

Advertisement

முடி அடர்த்தியாக வளர எண்ணெய்

பொதுவாக ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி முடி அடர்த்தியாகவும், நீளமாகவும் இருக்க வேண்டும் என்று தான் நினைப்பார்கள். பெண்களுக்கு முடி கொட்டினால் அடர்த்தியும், நீளமும் குறையும். அதுவே ஆண்களுக்கு கொட்டினால் தலையில் சொட்டை விழுந்து வயதான தோற்றம் போல் காட்சியளிக்கும். உங்களின் முடி அடர்த்தியாக வளருவதற்கு இதுவரை நீங்கள் பல குறிப்புகளை பயன்படுத்தியும் எந்த Improvement இல்லை என்று கவலைப்படுகிறீர்களா.! இனிமேல் முடி வளரவில்லை என்று கவலைப்படாதீர்கள்.! ஏன் இப்படி சொல்கிறீர்கள் என்று தானே யோசிக்கிறீர்கள். உங்களின் முடி உதிராமலும், அடர்த்தியாகவும் வளருவதற்கு இந்த குறிப்பை மட்டும் பயன்படுத்துங்கள். முடி தாறுமாறாக வளரும்.

இதையும் படியுங்கள் ⇒ அரிசி கழுவிய தண்ணீரை இப்படி ஒரு முறை பயன்படுத்தினால் நீங்களே ஆச்சரியபடும் அளவிற்கு முடி வளரும் 

முடி வளர எண்ணெய் தயாரிப்பது எப்படி.?

தலைமுடிக்கு வளர்ச்சியை கொடுப்பது தேங்காய் எண்ணெய். இந்த தேங்காய் எண்ணெயில் கூட சில பொருட்களை சேர்த்து மூலிகை எண்ணெய் தயார் செய்வோம். இந்த எண்ணெய் தயார் செய்வதற்கு கறிவேப்பிலை, செம்பருத்தி இலை, வெந்தயம், தேங்காய் எண்ணெய்  போன்றவை தேவையான பொருட்களாகும். 

ஸ்டேப்:1

முதலில் 10 செம்பருத்தி இலை, 1 கைப்பிடி அளவு கறிவேப்பிலை எடுத்து சுத்தமாக கழுவி காய வைத்து கொள்ளுங்கள். பின் 1 தேக்கரண்டி வெந்தயம் ஊற வைத்து எடுத்து  கொள்ளுங்கள்.

ஸ்டேப்:2

அடுத்து ஒரு மிக்சி ஜாரில் 10 செம்பருத்தி இலை, 1 கைப்பிடி அளவு கறிவேப்பிலை, ஊறிய வெந்தயம் மூன்றையும் சேர்த்து அரைத்து கொள்ளுங்கள். ரொம்ப பேஸ்ட்டாக அரைத்து கொள்ளாமல் கொஞ்சம் கொர கொரவென்று அரைத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்:3

பின் அடுப்பை பற்ற வைத்து கனமான கடாயை வைக்க வேண்டும். அதில் தேங்காய் எண்ணெய் 300 ml ஊற்றுங்கள். எண்ணெய் சூடானதும் அடுப்பை  மிதமான தீயிலே வைக்க  வேண்டும்.

ஸ்டேப்:4

பின்பு அரைத்து வைத்த கலவையை கொதிக்கின்ற  எண்ணெயில் சேருங்கள். எண்ணெயில் சேர்த்த பிறகு  ஐந்து நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விடுங்கள். காய்த்த எண்ணெய் சூடு ஆறியதும் ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து வைக்கவும். அவ்வளவு  தான் முடி உதிராமல் இருப்பதற்கும், முடி வளருவதற்கும் , உதிர்ந்த இடத்தில் புதிய முடி வளருவதற்கு எண்ணெய் ரெடி..! 

ஸ்டேப்:5

இந்த எண்ணெயை நீங்கள் தேங்காய் எண்ணெய் எப்படி தடவுவீர்களோ அதே போல் தினமும் தினமும் தடவுங்கள். விரைவிலே நல்ல மாற்றத்தை நீங்களே காண்பீர்கள்.

இதையும் படியுங்கள் ⇒ நீங்களே ஆச்சிரியப்படும் அளவிற்கு அடர்த்தியான முடி வேண்டுமா.! அப்போ இதை செய்யுங்கள்.!

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil

 

Advertisement