வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

நரை முடியை கருப்பாக மாற்றுவதற்கு இந்த ஹேர் டையை பயன்படுத்துங்க..!

Updated On: January 4, 2023 7:45 AM
Follow Us:
White Hair to Black Hair Dye Homemade
---Advertisement---
Advertisement

நரை முடி கருப்பாக மாற டை | White Hair to Black Hair Dye Homemade

ஆண்கள், பெண்கள் இருவருக்கும் இருக்கும் பிரச்சனையில் ஒன்று தான் நரைமுடி. முன்பெல்லாம் வயதானவர்களுக்கு மட்டும் தான் நரைமுடி பிரச்சனை வரும். இப்போது இளம் வயதினருக்கே நரை முடி பிரச்சனை வருகிறது. இந்த பிரச்சனையை சரி செய்ய வேண்டும் என்பதற்காக கடையில் விற்கும் கெமிக்கல் நிறைந்த டையை வாங்கி பயன்படுத்துகின்றனர். இதனால் நாளடைவில் உடலில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதனால் இந்த பதிவில் இயற்கையான முறையில் ஹேர் டை தயாரிப்பது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

ஹேர் டை தயாரிக்க தேவையான பொருட்கள்:

  1. மருதாணி பவுடர் –  1 தேக்கரண்டி
  2. நெல்லிக்காய் பவுடர் – 1 தேக்கரண்டி
  3. டீத்தூள் – 1/2 தேக்கரண்டி
  4. தண்ணீர் – தேவையான அளவு
  5. இரும்பு கடாய் – 1

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

ஹேர் டை செய்முறை:

White Hair to Black Hair Dye Homemade

ஹேர் டை தயார் செய்வதற்கு முதலில் டீ டிகாஷன் தயார் செய்து வைக்கவும்.

அடுப்பில் இரும்பு கடாய் வைத்து 1 தேக்கரண்டி நெல்லிக்காய் பவுடர் சேர்த்து வதக்கவும். கருப்பு நிறம் வந்ததும் மருதாணி பவுடர் 1 தேக்கரண்டி சேர்த்து கருப்பு நிறம் வர வரைக்கும் வதக்கவும். பின் அதில் டீ டீகாஷனை சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு கலந்து கொள்ளவும். பின் அடுப்பை அணைத்து விடவும். இந்த ஹேர் டை கடாயிலே இரவு முழுவதும் இருக்கட்டும்.

மறுநாள் காலையில் இந்த ஹேர் டையில் 1 தேக்கரண்டி அவுரி பொடி சேர்த்து டீ டீகாஷனை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு கலந்து விடவும்.

இந்த ஹேர் டையை தலையில் அப்ளை செய்வதற்கு முன் தலையில் எண்ணெய் பிசுபிசுப்பு இருக்க கூடாது. அப்போது தான் ஹேர் டை தலையில் ஓட்டும். இந்த ஹேர் டையை தலை முடி முழுவதும் அப்ளை செய்து 2 மணி நேரம் கழித்து தலை தேய்த்து குளிக்கவும்.

இந்த ஹேர் டையை தொடர்ந்து அப்ளை செய்து வாருங்கள். விரைவில் நரை முடி கருப்பாக மாறிவிடும்.

இதையும் ட்ரை பண்ணுங்க ⇒ வீட்டில் உள்ள இரண்டு பொருட்களை வைத்து முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்தலாம்..!

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now