கல் உப்பு மகிமை | Kal Uppu Magimai in Tamil
வணக்கம் நண்பர்களே இன்றைய ஆன்மிகம் பகுதியில் கல் உப்பில் எந்த பொருட்களை போட்டு வைத்தால் வீட்டில் பணம் பற்றாகுறை வராது என்பதை தெரிந்து கொள்ளலாம். நாம் நிறைய பணக்காரர்களை பார்த்திருப்போம், அவர்கள் என்ன தொழில் செய்கிறார்கள், எந்த வேலை செய்ததால், அவர்களுக்கு இப்படி, எப்படி கோடி கோடியாக பணம் வருகிறது என்ற கேள்விக்கு பலருக்கும் விடை தெரியாது. பணக்காரர்கள் எப்போதும் அவர்களுக்கு எந்த வழியில் பணம் வருகிறது என்பதை வெளியில் தெரியாமல் பார்த்து கொள்வார்கள். நீங்களும் பணக்காரர்கள் ஆவதற்கு வசம்பு மற்றும் கல் உப்பு வைத்து ஒரு பரிகாரம் இருக்கிறது இந்த பரிகாரத்தை செய்தால் உங்களுக்கும் பணம் பல வழிகளில் வந்து பணப்பெட்டியை நிரப்பும். வாங்க அது என்ன பரிகாரம் என்று பார்க்கலாம்.
Kal Uppu Magimaigal in Tamil:
- இந்த பரிகாரத்தை ஆண்கள், பெண்கள் இருவரும் செய்யலாம். பெண்கள் மாதவிலக்கு முடிந்து ஒரு 8 நாட்கள் கழித்து செய்ய வேண்டும்.
வசம்பு பரிகாரம்:
- இந்த பரிகாரத்திற்கு வசம்பு தேவைப்படும். வசம்பை நீங்கள் பணம் கொடுத்து வாங்க கூடாது, இதை இலவசமாக கடையில் வாங்கி கொள்ளவும்.
- பச்சை கற்பூரம் மற்றும் பத்து ரூபாய் Coin 10 எடுத்து கொள்ளவும் அதை கழுவி வைத்து கொள்ளுங்கள்.
- பின்னர் இந்த வசம்பை பச்சை கற்பூரத்தில் கரி பிடிக்காமல் எரிய விட்டு கொள்ளவும் பின் அதில் நெய்யை முழுவதுமாக தடவி கொள்ளவும். அதன் பிறகு இந்த வசம்பில் நாம் எடுத்து வைத்திருக்கும் பத்து ரூபாய் Coin-ஐ நூல் வைத்து கட்டி கொள்ளவும் (துணி உபயோகபடுத்த கூடாது)
- சந்தனத்தை பன்னீரில் கலக்கி கட்டிய வசம்பு மற்றும் Coin-ஐ அதில் ஊற விடவும். பின்னர் இதை நிழலில் வைத்து காய வைக்கவும் (ஈரப்பதம் இல்லாமல் இருப்பது மிகவும் அவசியம்)
உப்பு தாந்திரீகம்:
- Kal Uppu Magimai in Tamil: உங்களின் இஷ்ட தெய்வத்தை நினைத்து பூஜை அறையில் வைத்து பூஜை செய்யவும். பின்னர் கல் உப்பை மண் பாத்திரம் அல்லது பீங்கான் ஜாடியில் போட்டு அதற்கு அடியில் நாம் பூஜை செய்து வைத்த வசம்பு மற்றும் பத்து ரூபாய் Coin-ஐ வைக்கவும்.
- இந்த பரிகாரத்தில் நாம் பயன்படுத்தும் வசம்பு நேர்மறை ஆற்றலை தன் வசப்படுத்தி கொள்ளக் கூடியது. மகாலட்சுமி அம்சம் பொருந்திய கல் உப்பில் இந்த வசம்பை வைக்கும் போது, நம் வீட்டிற்குள் மகாலட்சுமி வசியம் ஆகிவிடுவாள்.
- இதை நீங்கள் Purse-ல் அல்லது பீரோலில் வைக்கலாம். இதை நீங்கள் எங்கு வைத்தாலும் யார் கண்ணிலும் படாதவாறு (உங்கள் கண்ணில் கூட படாதவாறு) வைக்கவும்.
- இந்த பரிகாரத்தை நீங்கள் செய்தால் பணம் பெறுகும், உங்களின் அந்தஸ்தும் உயரும். நம் முன்னோர்கள் பின்பற்றி வந்த முறையில் இதுவும் ஒன்று.
கேட்டது கிடைக்கும் கல் உப்பு பரிகாரம் |
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |