Bero Vaikum Thisai in Tamil
மக்கள் எல்லோரிடமும் கடவுள் நம்பிக்கை அதிகமாக உள்ளது. அதிலும் வாஸ்து சாஸ்திரம் முக்கிய பங்கு வகிக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். மனை வாங்கும் போது பூஜை அறை, சமையல் அறை, கடிகாரம், பீரோ எந்த திசையில் இருக்க வேண்டும் என்பதையெல்லாம் வாஸ்து பார்த்து தான் வைக்கிறார்கள்.
அதிலும் முக்கியமாக பணத்தை சேமித்து வைப்பதற்கு அடித்தளமாக இருக்கும் பீரோவை அனைவரும் வாஸ்து சாஸ்திர முறைப்படி தான் வீட்டில் வைக்கிறார்கள். அந்த வகையில் நாம் இந்த தொகுப்பில் பீரோவை எந்த திசையில் வைத்தால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.
மேற்கு பார்த்த வீடு வாஸ்து சாஸ்திரம் |
பீரோ வைக்கும் திசை எது?
- Bero Vaikum Thisai in Tamil: தென்மேற்கு திசையை பார்த்தபடி பீரோ அல்லது நீங்கள் பணத்தை சேகரிக்கும் பெட்டியை வைத்தால் உங்களுக்கு செல்வம் பெருகும். பீரோவின் பின்புறம் தென்திசையை நோக்கியும், கதவு பகுதி வடக்கு திசை நோக்கியும் இருக்க வேண்டும்.
- உங்களுடைய வருமானம் அதிகரிக்க வேண்டும் மற்றும் சேமிப்பு உயர வேண்டும் என்று நினைப்பவர்கள் குபேரனுக்கு உகந்த திசையாக இருக்கும் மேற்கு திசை பார்த்து பீரோவை வைப்பது நல்லது.
பீரோ வைக்கும் திசைகள் – Bero Vaikum Thisai in Tamil:
- சுவரின் நான்கு மூலைகளிலும் சற்று இடைவெளி விட்டு பீரோவை வைக்க வேண்டும். ஏனெனில் அந்த இடைவெளியில் வாயுபகவான் ஊடுருவி செல்வார். இடைவெளி இல்லாமல் சுவரை ஒட்டி பீரோவை வைத்தால் பணத்தடை ஏற்படும் மற்றும் சேமிக்க முடியாத சூழ்நிலை உருவாகும்.
- நீங்கள் பணத்தை வைக்கும் மணிபர்ஸ், பூஜை அறை, பீரோ, பணப்பெட்டி போன்றவற்றை உதாசீனப்படுத்த கூடாது. பணத்தை உதாசீனப்படுத்தினால் மகா லட்சுமி உங்கள் வீட்டில் தங்கமாட்டாள் என்பது ஐதீகம்.
வடக்கு பார்த்த வீடு வாஸ்து சாஸ்திரம் |
வடமேற்கு மூலையில் பீரோ வைக்கலாமா?
- வடமேற்கில் பீரோ இருந்தால் செலவுகள் இருந்து கொண்டே இருக்கும், சேமிக்க முடியாத நிலையும், கடன் வாங்குவதற்கான சூழ்நிலையும் ஏற்படும்.
- தென் கிழக்கில் பணப்பெட்டி இருந்தால் வீண் செலவுகள் ஏற்பட்டு கொண்டே இருக்கும்.
பீரோ வைக்கும் திசை – Bero Vaikum Thisai:
- தெற்கு மூலையில் பீரோவை வைக்க முடியாதவர்கள் பீரோவின் பின்புறம் மேற்கு பக்கமும், அதன் முன்புறம் கிழக்கு நோக்கி பார்த்தபடி வைக்கலாம். இதனால் உங்கள் வீட்டில் எதிர்மறை ஆற்றல் நீங்கி, நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். வீண் செலவுகளும் குறையும்.
- மேலே கூறப்பட்டுள்ள முறையில் நீங்கள் பீரோ அல்லது பணத்தை சேகரிக்கும் பெட்டியை வைத்தால் உங்களின் செல்வ நிலை அதிகரித்து எவ்வித பண கஷ்டமும் இல்லாமல் வாழலாம். கஷ்டப்பட்டு, நேர்மையான முறையில் சம்பாதிக்கும் நம்முடைய செல்வத்தை தக்க வைத்து கொள்ள முயற்சி செய்வது நமது கடமையாகும்.
தெற்கு பார்த்த வீட்டில் பீரோ வைக்கும் திசை:
தெற்கு பார்த்த வீட்டில் தென்மேற்கு திசையில் பீரோவை வைக்க வேண்டும். இந்த மூலையை நைருதி மூலை ள்ளது குபேர மூலை என்று கூறுவார்கள். இந்த மூலையில் வைப்பது சிறந்தது.
மேற்கு பார்த்து பீரோ வைக்கலாமா:
மேற்கு திசையில் பார்த்தவாறு வைப்பது நல்லது. அதாவது கிழக்கு திசையில் பீரோவை வைத்து மேற்கு திசையில் பார்த்தவாறு பீரோவை வைக்க வேண்டும்.
வடக்கு பார்த்த வீட்டில் பீரோ வைக்கும் திசை:
வடக்கு பார்த்த வீட்டில் பீரோவை வடக்கு அல்லது கிழக்கு திசையை பார்த்தவாறு பீரோவை வைக்க வேண்டும்.
வடகிழக்கில் பீரோ வைக்கலாமா:
வடகிழக்கு திசையில் பீரோவை வைக்க கூடாது.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |