பொறாமை குணம்
வணக்கம் ஆன்மிக நண்பர்களே..! தாய் தந்தைக்கு பிறகு வெளிப்படையாக பேச நினைக்கும் ஒருவர் தான் நண்பர். நண்பர்கள் கடவுளுக்கே கிடைக்காத வரம். நமது வெற்றியில் சந்தோசப்பட கூடியவர்களில் முக்கியமாக இருப்பது நண்பர்கள் தான். ஆனால் ஜோதிட சாஸ்திரத்தில் சில ராசிக்காரர்கள் நண்பர்களின் வெற்றியை கண்டு பொறாமை அடைவார்களாம். அவை எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.!
இதையும் படியுங்கள் ⇒ இந்த ராசிக்காரர்கள் மற்றவர்களை பார்த்து பொறாமை பட மாட்டார்கள்..! இதில் உங்கள் ராசி இருக்கா..!
கடகம் ராசிக்காரர்கள்:
கடக ராசிக்காரர்கள் பொறாமை குணத்தை மற்றவர்களிடம் வெளிப்படுத்த மாட்டார்கள். மனதிலே பொறாமை குணத்தை மறைத்து வைத்திருப்பார்கள். இவர்கள் தங்களின் நிலையை அறிய மாட்டார்கள். இவர்களின் நண்பர்கள் எந்த செயலையும் செயலை சிறப்பாக செய்தால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இவர்கள் எந்த உணர்வுகளையும் வெளிப்படுத்தமாட்டார்கள். இவர்கள் நல்ல நண்பனாக இருந்தாலும் வெற்றியை பார்த்து பொறாமை படுவார்கள்.
விருச்சிகம் ராசி:
இவர்கள் தங்களின் நண்பர்கள் மகிழ்ச்சியாக இருக்கும் போது அதில் பங்கேற்க மாட்டார்கள். நண்பர்கள் தொழில்களில் வெற்றி அடையும் போது தங்களை இழிவாக நினைத்து கொள்கிறார்கள். இவர்களிடம் அமைதியான உணர்வு குறைந்து காணப்படும். நண்பர்களின் மகிழ்ச்சியை கண்டு பொறாமை படுவார்கள்.
சிம்மம் ராசி:
சிம்ம ராசிக்காரர்கள் உயர்ந்த இடத்தில் இருந்தாலும் தங்களின் நண்பர்களின் வெற்றிகளை பார்க்கும் போது அவர்களின் மதிப்பை குறைத்து எடை போடுவார்கள். தங்களின் நண்பர்கள் மகிழ்ச்சியாக இருந்தாலும் இவர்களால் திருப்தியாக இருக்க முடியாது.
மேஷம் ராசி:
மேஷம் ராசிக்காரர்கள் எந்த நேரமும் கோபம் குணத்தோடு தான் இருப்பார்கள். இவர்கள் தங்களின் நண்பர்கள் சிறப்பாக செயல்படுவதை கண்டு பொறாமை அடைவார்கள். இவர்கள் தங்களின் மதிப்பை குறைத்து எடை போடுவார்கள். இவர்கள் பொறாமையாக இருந்தாலும், கோவமாக இருந்தாலும் மற்றவர்களிடம் வெளிப்படுத்துவிடுவார்கள்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |