வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

பிப்ரவரி 18 முதல் இந்த 3 ராசிக்கு அதிஷ்டம் தான்..! இதில் உங்கள் ராசி இருக்கா..?

Updated On: February 13, 2023 8:59 AM
Follow Us:
From February 18 Onwards These 3 Signs Have Yoga in Tamil
---Advertisement---
Advertisement

From February 18 Onwards These 3 Signs Have Yoga in Tamil

புது வருடம் பிறந்துவிட்டது என்றால்..! அனைவருக்கும் இந்த வருடம் நமக்கு எப்படி இருக்கும். லாபம் கிடைக்குமா அல்லது நஷ்டம் கிடைக்குமா என்று ஒரே கேள்வியாக இருக்கும்..! அல்லது இந்த வருடம் எப்படி இருக்கும் என்று ஒவ்வொரு ஜோதிடராக தேடி சென்று வாழ்க்கை எப்படி என்று கேட்பீர்கள் அல்லவா..? அந்த வகையில் ஒரு ராசியில் மாற்றம் ஏற்படுவதால் மற்ற ராசிக்கும் மாற்றம் ஏற்படும். அந்த வகையில் இன்று கும்ப ராசியில் திரிகிரக யோகம் ஏற்படுவதால் 3 ராசிக்கு பெரிய யோகம் கிடைக்கும்..! வாங்க அதனை பற்றி தெரிந்துகொள்வோம்..!

பிப்ரவரி 18 முதல் இந்த 3 ராசிக்கு அதிஷ்டம் தான்:

ஒவ்வொரு மாதமும் கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படும். ஆகவே இந்த மாதம் கும்ப ராசியில் திரிகிரக யோகம் உருவாகியுள்ளது. இந்த யோகம் உருவாகும் போது மற்ற மூன்று ராசிக்கும் சேர்த்து யோகத்தை அளிக்கும். சரி அது எந்த 3 ராசி என்று தெரிந்து கொள்வோம்..!

மகரம் ராசி:

From February 18 onwards, these 3 signs have yoga in tamil

மகரராசிக்கு 2 ஆம் வீட்டில் திரிகிரக யோகம் உருவாகியுள்ளது. இது செல்வம் தரும் வீடாக உருவாகியுள்ளது. ஆகவே உங்களுக்கு பெரிய மாற்றத்தை அளிக்கும். அதுவும் பணவரவு மற்றும் குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் வரும். இந்த யோகத்தால் பண கஷ்டம் ஏற்படாது. வியாபாரத்தில் ஏற்பட்டிருந்த நஷ்டம் இந்த யோகத்தால் திரும்ப கிடைக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
2023 ஆம் ஆண்டு அடுத்த சனி பெயர்ச்சி யாருக்கு? சனி பெயர்ச்சி இருந்து விடுபடுபவர் ராசி எது ?

ரிஷபம் ராசி:

From February 18 onwards, these 3 signs have yoga in tamil

ரிஷப ராசிக்கு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலைகள் கிடைக்கும். மேலும் ரிஷப ராசிக்கு 10 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகியுள்ளது. இந்த காலத்தில் தொழிலதிபர் ஆவதற்கான நல்ல யோகம் அதிகமாக இருக்கும். அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். தந்தையுடன் உறவு பலப்படும். அதுபோல் வியாபாரத்தில் உள்ளவர்கள் கடையை முன்னேற்றமாக நடத்தலாம்.

மேஷம் ராசி:

மேஷம் ராசி

வருமானம் மற்றும் லாபத்திற்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மேலும் மேஷம் ராசிக்கு 11 ஆம் வீட்டில் திரிகிரக யோகம் உருவாகியுள்ளது. 11 ஆம் வீடு என்பது நிதி சார்பான வீடாக கருதப்படுகிறது. உங்கள் பணியிலும் தொழிலும் நல்ல வருமான உயர்வை காண்பீர்கள். புதிய வழிகள் மூலம் பணத்தை சம்பாதிக்க முடியும். உங்களின் ஆசைகள் நிறைவேறும். அதேபோல் தொழிலில் புதிய முயற்சியை முயற்சித்தால் நல்ல லாபம் கிடைக்கும்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 சனி பெயர்ச்சி 2023 எப்போது? யாருக்கெல்லாம் நன்மை? யாருக்கெல்லாம் தீமை?

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement

Suvalakshmi

எனது பெயர் சுவலட்சுமி. Pothunalam.com இணையதளத்தில் Senior Content Writer ஆக பணியாற்றுகிறேன். அழகுக்குறிப்பு, ஆன்மீகம், தொழில் போன்ற செய்திகளில் தொடர்ந்து இந்த தளத்தில் எழுதி வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now