இனி ஏப்ரல் முதல் குருவின் பார்வையால் இந்த ராசிக்காரர்களுக்கு எல்லாம் ஜாக்பாட் தான்…! உங்க ராசி இருக்கா இதுல…!

Guru Peyarchi Palangal 

ஆன்மீகத்தில் சனி பகவானை போலவே குரு பகவானும் முக்கிய பங்கு வைக்கிறார். இத்தகைய குரு பகவானுக்கு உகந்த நாள் என்றால் அது வியாழக்கிழமை தான். ஒவ்வொரு வியாழக்கிழமை எப்படி சிறப்பாக இருக்கிறது அதுபோன்றே குரு பெயர்ச்சி என்பது மிகவும் முக்கியமானதாகவும் மற்றும் சிறப்பானதாகவும் இருக்கிறது. ஏனென்றால் இத்தகைய குரு பெயர்ச்சி முடிந்த பிறகு காலச்சக்கரத்தில் உள்ள 12 ராசிகளுக்கும் ஒவ்வொரு மாதிரியான பலன்கள் கிடைக்கும். அந்த வகையில் குரு பெயர்ச்சி காரணமாக ஏப்ரல் மாதம் முதல் அதிர்ஷ்ட மழையில் நனையப்போகும் ராசிகள் சில உள்ளதாக ஆன்மீகத்தில் கூறப்படுகிறது. ஆகையால் அத்தகைய ராசி எது எதுவென்று இன்றைய ஆன்மீக பதிவில் தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்⇒ மீனத்தில் உருவாகும் மாற்றத்தால் இந்த 3 ராசிக்கு தான் நல்ல காலம்

குரு பார்வை பலன்கள்:

குரு பகவான் மேஷ ராசிக்கு பெயர்ச்சி அடைந்தாலும் கூட அந்த இடத்தில் இருந்து கொண்டு 5 ராசிகளின் மீது பார்வை இடுகிறார். ஆகாயல் அந்த ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் எதிர்பாராத பண அதிர்ஷ்டம் கிடைக்க போவதாகவும் கூறப்படுகிறது. ஆகவே அந்த 5 ராசிகள் எதுவென்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சிம்ம ராசி:

சிம்ம ராசி

சிம்மம் போன்ற அமைப்பினை கொண்டு காலச்சக்கரத்தில் 5-வதாக உள்ளது தான் சிம்ம ராசி. இத்தகைய ராசியின் மீது குருவின் பார்வை படுவதால் தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் காணப்பட்டு வாழ்க்கையில் பண வரவு அதிகரித்து மகிழ்ச்சி உண்டாகும் என்று ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது.

மேஷ ராசி:

மேஷ ராசி

குரு பகவான் மேஷ ராசிக்கு செல்வதால் அந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகத்தை பெறுவதற்கான வாய்ப்பினை அளிக்க உள்ளதாக இருக்கிறது என்று ஆன்மீகத்தில் கூறப்படுகிறது.

அதுமட்டும் இல்லாமல் தீராத கடனும் தீர்ந்து முன்னேற்றம் அடைந்து விடுவீர்கள்.

மீன ராசி:

மீனம் ராசி

காலச்சக்கரத்தில் கடைசியாக அமைந்துள்ள ராசி என்றால் அது மீன ராசி தான். இத்தகைய மீன ராசிக்காரர்களுக்கு குருவின் பார்வையால் தொழில் எதிர்பாராத பதவிகள் கிடைக்கும் மற்றும் நிதிநிலை நிலை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என்று ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது.

மீன ராசியில் புதனின் சேர்க்கையால் அமோகமான அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா..?

மிதுன ராசி:

மிதுன ராசி

குருவின் பார்வை படுவதால் மிதுன ராசிக்காரர்களுக்கு இதுநாள் வரையிலும் இருந்த கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி மகிழ்ச்சியாக வாழ்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மேலும் எடுக்கும் புதிய முயற்சியில் வெற்றி கிடைக்கும் என்றும் பண வரவு சிறப்பானதாக இருக்கும் என்று ஆன்மீகத்தில் கூறப்படுகிறது.

கன்னி ராசி:

கன்னி ராசி

இரண்டு கன்னி பெண்களை அடையமாக கொண்டுள்ளது தான் கன்னி ராசி. இத்தகைய கன்னி ராசிக்காரர்களுக்கு இனி வரும் காலங்கள் இனிப்பானதாக இருக்கும் என்றும் திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் ஆகும் என்று கூறப்படுகிறது.

மேலும் புதிய வேலை வாய்ப்பு தேடி வரும் என்றும் ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்