தெரியாதவர்கள் கனவில் வந்தால் என்ன பலன் என்று உங்களுக்கு தெரியுமா..?

If Unknown Person Comes In A Dream in Tamil

If Unknown Person Comes In A Dream in Tamil

அன்பு நேயர்களுக்கு வணக்கம்..! இன்றைய ஆன்மீகம் பதிவில் முன் பின் தெரியாதவர்கள் கனவில் வந்தால் என்ன பலன் என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். நாம் ஆழ்ந்து உறங்கும் நம்முடைய ஆழ்மனதில் ஏற்படும் ஒரு பிம்பம் தான் கனவுகள். கனவுகள் அனைவருக்குமே வரும். பிறந்த குழந்தை முதல் அனைவருக்குமே கனவுகள் வரும். பிறந்த குழந்தை கூட தூக்கத்தில் கனவு கண்டு அழும், சிரிக்கும். அதை நாம் பார்த்திருப்போம். இப்படி பலவிதமான கனவுகள் வரும். அந்த வகையில் இன்று நாம் இந்த பதிவின் மூலம் தெரியாதவர்கள் கனவில் வந்தால் என்ன பலன் என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

இதையும் கிளிக் செய்து படியுங்கள்–> கனவு பலன்கள்..!

தெரியாதவர்கள் கனவில் வந்தால் என்ன பலன்..? 

பொதுவாக நாம் தூங்கும் போது உறவினர்கள், நண்பர்கள் என்று தெரிந்தவர்கள் தான் கனவில் வருவார்கள். அதுபோல சிலருக்கு யாரென்று தெரியாதவர்கள் கூட கனவில் வருவார்கள். முன் பின் தெரியாதவர்கள் கனவில் வந்தால் அது நம் அனைவருக்குமே குழப்பமாக இருக்கும்.

நாம் அவர்களை நம் வாழ்வில் பார்த்திருக்க கூட மாட்டோம். ஆனால் அவர்கள் நம் கனவில் அடிக்கடி வருவார்கள். அதற்கு என்ன காரணம் என்று நமக்குள் பல கேள்விகள் இருக்கும்.

அதற்கு காரணம்,  யாரென்று தெரியாதவர்கள் உங்கள் கனவில் வந்தால் அவர்கள்  பூர்வ ஜென்மத்தில் உங்களுடைய உறவாக இருக்கலாம். பூர்வ ஜென்மத்தில் உங்களுடன் இருந்த உறவினராக, நண்பராக, இரத்த சொந்தமாக அல்லது தெரிந்தவர்களாக கூட இருக்கலாம்.  

பூர்வ ஜென்மத்தில் உங்களுடன் வாழ்ந்தவர்களின் பிம்பம் தான் அடிக்கடி உங்கள் கனவில் வருகிறது. போன ஜென்மத்தில் உங்களுக்கும் அவர்களுக்கும் உள்ள உறவு இந்த ஜென்மத்திலும் தொடர வேண்டும் என்பதை கூறுவதற்கே யாரென்று தெரியாத அந்த நபர் உங்கள் கனவில் தோன்றுகிறார்.

அதுபோல உங்களின் பூர்வஜென்ம ஆசைகளை அவர்கள் உங்களிடம் கூற நினைக்கிறார்கள் என்று அர்த்தம். அதனால் தான் அவர்கள் அடிக்கடி உங்கள் கனவில் வருகிறார்கள்.

முன் பின் தெரியாதவர்கள் கனவில் வந்தால் உங்கள் வீட்டில் ஏதேனும் ஒரு நல்ல விஷயம் நடக்க போகிறது என்று அர்த்தம். அதுபோல, உங்களின் ஆசைகள் நிறைவேறும் என்று சொல்லப்படுகிறது.

இறந்து போவது போல் கனவு வந்தால் என்ன பலன்..?
வானில் பறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன் தெரியுமா..?

 

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்