இறந்தவர்களின் வீட்டில் ஒரு வருடம் இதை செய்யலாம் செய்யக்கூடாது..!

iranthavarkalin veetil ithai seiya koodathu

இறந்த வீட்டில் செய்யக்கூடாதவை

நண்பர்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம்..! இந்த பதிவின் மூலம் அனைவரின் கேள்விகளுக்கான பதிலாக இது இருக்கும்..! அப்படி என்ன என்று யோசிப்பீர்கள். இறப்பு என்பது இயற்கையான ஒன்று அப்படி இருக்கு பட்சத்தில் இறப்பு நடந்த வீட்டில் சில விஷயங்களை செய்யக்கூடாது என்று சம்பிரதாயம் உண்டு அதனை வாழையடி வாழையாக பின்பற்றி வந்து கொண்டிருந்தார்கள் ஆனால் இந்த காலத்தில் அதனை அனைத்தையும் பின்பற்றி வருகிறார்களா என்றால் அது ஆச்சரியம் தான். சிலர் பின்பற்ற வேண்டிய பல விஷயங்களை மட்டும் செய்ய மறந்துவிடுவார்கள் அல்லது அது அனைத்தும் அந்த காலம் என்று சொல்லி செய்ய மறுத்துவிடுவார்கள்.

இறந்த வீட்டில் செய்யக்கூடாதவை:

இறந்த வீட்டில் சில விஷயங்களை செய்யவேண்டும். சில விஷயங்கள் செய்யக்கூடாது என்று நிறைய இருக்கிறது, அதனை செய்வதால் இறந்தவர்களும், உயிரோடு இருக்கும் நபருக்கும் பல கஷ்டங்கள் வந்து சேரும் ஆகையால் துக்கம் நடந்த வீட்டில் இதனை மட்டும் செய்யாதீர்கள்.

இறந்தவர்களின் சொந்தமானவர்கள் இறந்த நாட்களிருந்து 30 நாட்கள் எந்த கோவிலுக்கும் செல்லக்கூடாது. அதேபோல் 31 நாள் அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவருமே ஒரு கோவிலுக்கு ஒரு நாள் முழுவதும் தங்கி வந்தால் மிகவும் நல்லது.

அதேபோல் வீட்டில் கணவரை இறந்த பின் அவருடைய மனைவி கோவிலுக்கு சென்று தங்கி வருவது காலம் காலமாக பின்பற்றி வருகிறார்கள்.

30 நாட்களுக்கு பிறகு அனைத்து கோவிலுக்கும் செல்லலாம் ஆனால் தலை திவசம் முடியும் வரை எந்த காரணத்தை கொண்டும் தேங்காய் உடைத்து கற்புரம் காட்டி வழிபட கூடாது. அதே போல் மாலை சாற்றி வழிபடவும் கூடாது.

முக்கியமாக குலதெய்வ கோயிலுக்கு செல்ல கூடாது.  எந்த மலையும் ஏறக்கூடாது. மொட்டை போட்டு கொள்ள கூடாது.

ஒருவர் இறந்த வீட்டில் இன்னொருவருக்கு திவசம் செய்யக்கூடாது. அமாவாசை அன்று இலை போட்டு படையல் வைக்கக்கூடாது.

அமாவாசை அன்று கோலம் இடக்கூடாது. அது போல் மரணத்தீட்டு இருக்கும் வீட்டில் இரண்டு கோலம் இடவேண்டும். தீட்டு இல்லாதவர்கள் வீட்டில் 4 கோடுகள் இடவேண்டும்.

தீட்டு உள்ள வீட்டில் தானம் தர்மம் செய்யக்கூடாது. திதி கொடுக்கும் போது தானம் தர்மம் செய்யலாம் முதலில் தானம் செய்து பிராமணர்களுக்கு கொடுக்க வேண்டும் அதன் பின் யாருக்கு வேண்டுமானாலும் தானம் கொடுக்கலாம்.

குறிப்பு: ⇒ இறந்தவர்கள் வீட்டில் திருமணம் செய்யவேண்டும் என்று நினைத்தால் நிச்சயம் திருமணம் செய்யலாம் ஆனால் திருமணம் ஆகியவர்கள் கருமம் காரியங்களில் பங்களிக்கக்கூடாது.  இறந்தவீட்டில் 3 மாதங்களில் கூட செய்யலாம் அதில் ஒன்றும் தவறு இல்லை. 

இறந்தவர்களில் திதி எப்போது கொடுக்கவேண்டும் தெரியுமா?

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆன்மிக தகவல்கள்