உழைப்பே உயர்வு கவிதை
மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் உழைப்பு என்பது மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. நாம் அனைவரும் உழைத்தால் தான் பணத்தை சம்பாதிக்க முடியும். தன்னுடைய வாழ்நாள் முழுவதும் மனிதர்கள் அனைவருக்கும் உழைப்பு என்பது இருந்து கொண்டே இருக்கும். அப்படி உழைக்கும் அனைவரையும் போற்றப்படும் நாள் தான் உழைப்பாளர்கள் தினம். இந்த உழைப்பாளர் தினமானது வருடந்தோறும் 1-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு உழைப்பாளர் தின வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வீர்கள். இந்த பதிவில் உழைப்பே உயர்வு கவிதை பற்றி இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம் வாங்க..
Ulaipe Uyarvu Quotes in Tamil
உளி கூட தேயும்
உண்மையான உழைப்பால்!
கற்கள் கூட நொறுங்கும் நன்கு
கடமையாற்ற!
புல்லும் மறைந்து நெல் விளையும்
நல் வயலில்!
மூங்கில் கூட
இசை கொடுக்கும்
புல்லாங்குழலால் !
கால் வீங்கி
கை நடுங்கி முதுகெலும்பு தேய்ந்து போக!
நாட்கள் எல்லாம் நீண்ட நேரம் உழைக்கும் நல்லவர்கள்!
வாடிய முகமும் தேடிய உழைப்பும் நாடிய பணியும்
நலம் பெறவே!
பிறர் பொருள் பெற்று வாழ்ந்தவர்களை
விட!
உழைப்பை கொடுத்து உழைத்தவர்களே !
வேர்வை மண்ணில்
வியர்த்து வழிய உழைக்கும்உழைப்பே
உயர்வு தரும்!
உழைப்பே உயர்வு கவிதை
விளையாத விதை இல்லை
முடியாதது எதுவும் இல்லை
முன்னேற எதுவும் தடை இல்லை
பரந்த பூமியில் நீ சிறகடித்து பறக்க
உன் லட்சிய பாதை அமைக்க
நம்பிக்கை துணை இருக்க
எழுந்து வரவேண்டும் எல்லை இல்லாத
உன் கனவுக்கு உயிர் தர வேண்டும்
உழைத்து வாழ வேண்டும்
ஊர் வாயை மூட வேண்டும்
பட்ட நிலம் பயிராகும்
பருவத்தில் நீ உழைப்பது
உன்னை அழகாகும்
ஆசையை உரம் ஆக்கும்
ஆழ்மனதில் நீ விதைத்த
உன் லட்சியம் வெளியாகும்
உன் அஸ்திவாரம் இன்னும் பலமாகும்
படித்ததற்கு தகுந்த வேலை இல்லை
என்பது விதியாகும்
கிடைத்த வேலை செய்வது
உழைப்பாகும்
நீயே ஒரு தொழிலை உருவாக்குவது
மிக உயர்வாகும்
போராடுவது வாழ்க்கை ஆகும்
நீ நேர்கொண்ட பார்வையில் நடந்தால்
நன்மையாகும்
நல்லவனாக இருப்பது மிக கடினமாகும்
நீதி,நேர்மையே துணையாகும்
உழைக்கும் கரங்கள் கடவுள் ஆகும்
துப்புரவு தொழில் செய்யும் மனிதர்கள்
கடவுள் ஆகும் அவர்கள் இல்லை
என்றால் வாழ்க்கை நரகம் ஆகும்
கொரோனா காலகட்டத்தில் நாம் பெற்ற
பாடம் அதிகமாகும் அவர்கள் அருமை
புரிந்தது ஆகும்
உழைப்பே உயர்வாகும் செய்யும்
தொழில் தெய்வம் ஆகும்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |