அம்மா கவிதை 2 வரிகள் | Amma Kavithai in Tamil 2 Lines
இவ்வுலகில் நமக்கு தீங்கு நினைக்காத ஒரு உயிர் என்றால், அது அம்மாவாக தான் இருக்கும். இப்படி ஒவ்வொரு அன்னையையும் போற்றும் விதமாக தான் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 12 ஆம் தேதி அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதுபோல நாமும் நம் பதிவின் வாயிலாக அணையை போற்றும் விதமாக பல பதிவுகளை பதிவிட்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று நம் பதிவின் மூலம் அம்மா கவிதை 2 வரிகளில் தான் பார்க்கப்போகின்றோம். அதனால் இப்பதிவை முழுதாக படித்து அம்மா கவிதைகளை அறிந்து மகிழுங்கள். அதற்கு முன் மனதை தொட்ட அம்மா கவிதை வரிகள் பற்றி தெரிந்து கொள்ள நினைத்தால் கீழ் இருக்கும் லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.
அம்மா கவிதை 2 வரிகள்:
♦ அம்மாவின் கைக்குள் இருந்த வரை,
உலகம் அழகாகத் தான் தெரிந்தது..!
♦ இறைவன் எனக்கு கொடுத்த
முதல் முகவரி உன் முகம் தான் அம்மா..!
♦ நீ ஊட்டிய நிலாச்சோற்றை காட்டிலும்,
வேறு அமிர்தம் நான் கண்டதில்லை அம்மா.!
♦ தூக்கத்தில் உன்னைப் பற்றி நினைப்பவள் காதலி..
தூங்காமல் கூட உன்னையே நினைப்பவள் தாய்..!
♦ நம் உள்ளத்தின் உள்ளே வாழும்
ஓர் உன்னதமான தெய்வம் அம்மா..!
♦ கல்லறையில் உறங்க சொன்னால் கூட உறங்குவேன்..!
அம்மா நீ வந்து தாலாட்டு பாடினால்..!
♦ உலகிலேயே சிறந்த தெய்வம் தாய் மட்டுமே..!
உலகிலேயே மிகச் சிறந்தவர்கள் தாயை நேசிப்பவர்கள் மட்டுமே..!
♦ முகத்தை காணும் முன்பே
நேசிக்க தெரிந்தவள் தாய் மட்டுமே..!
♦ நான் பார்த்த முதல் அழகியும் அவளே..
எனது உலக அழகியும் அவளே என் அம்மா..!
♦ உலக அதிசயம் காண ஆர்வமில்லை..
அன்னையே உன்னை கண்ட பின்..!
♦ அழுக்கு தேகம், கலைந்த கூந்தல், கிழிந்த சேலையிலும்
கடவுளாக தோன்றுகிறாள் அம்மா..!
♦ குழந்தைகளின் அழுகுரலுக்கு
அர்த்தம் தெரிந்த அகராதி அம்மா தான்..!
♦ பூமியில் எத்தனை பெண்கள் இருந்தாலும்
நம்மை நேசிப்பது பெற்ற தாய் மட்டுமே..!
♦ இந்த உலகில் பாசம் எனும் தீராத ஒளி பரவி நிற்க
அம்மா எனும் தீபம் தான் காரணம்..!
♦ ஆயிரம் உறவுகள் இருந்தாலும் அன்னை என்றொரு
உறவு இல்லாவிடில் அனாதை தான் அனைவருமே..!
♦ கருவறை துவங்கி கல்லறை வரைக்கும் நமக்காக
துடிக்கும் ஓர் உன்னத உள்ளம் அம்மா மட்டுமே..!
அம்மா கவிதை 1 வரிகள்:
♦ நேசிக்கும் உறவுகள் யாவும் நம் அம்மா ஆக முடியாது..!
♦ துன்பங்கள் வரும் தருணம் தாயின் மடி சொர்க்கம்..!
♦ கோடிகளாலும் வாங்க முடியாத ஒரே விசயம் அம்மாவின் அன்பு..!
♦ உனக்காக உண்மையான அன்பைத் தரவல்ல ஒரே ஜீவன் அம்மா மட்டுமே..!
♦ வயிற்றில் சுமந்து தோளில் சுமந்து மடியில் சுமந்து மார்பிலும் சுமப்பவள் அன்னை மட்டுமே!
♦ கோடி உறவு உடன் இருந்தாலும் அன்னையை மிஞ்சிய உறவொன்று இல்லை..!
♦ இவ்வுலகில் கலப்படம் இல்லாதது தாய்ப்பாலும் தாய்ப்பாசமும் மட்டுமே..!
♦ வேண்டாமலேயே வரம் கொடுக்கும் ஒரே தெய்வம் அம்மா..!
♦ ஆழ்ந்த உறக்கத்தின் அஸ்திவாரம் அம்மாவின் தாலாட்டு..!
அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்..!
இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> | QUOTES IN TAMIL |