செவிலியர் பற்றிய கவிதைகள் | Seviliyar Kavithai in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் கருணையே உருவாக அன்பே மொழியாக பணிமேல் பக்தி கொண்டு அயராது சேவை செய்யும் செவிலியர்களுக்கான கவிதைகள் பற்றி பார்க்கலாம் வாங்க. செவிலியர் பணி என்பது மிகவும் உன்னதமான பணி என்பது நம் அனைவருக்கும் தெரியும். இப்படி உன்னத பணியாற்றி வரும் செவிலியர்களை போற்றும் வகையில், ஒவ்வொரு வருடமும் மே 12 ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அவர்களின் உன்னத சேவையை (செவிலியர் பற்றிய கவிதைகள்) கவிதைகள் மூலம் பார்க்கலாம்.
சர்வதேச செவிலியர் தின வாழ்த்துக்கள் 2024
செவிலியர் பற்றிய கவிதை:
தாய்போல் அன்பு செய்வர் நோய் கொண்டவர் மீண்டெழவே..
ஓய்விற்கு ஓய்வு கொடுப்பர் நோயுற்றவர் சுகம் பெறவே..
பணிசெய்து இன்புறுவர் பிணியுற்றோர் நலம் பெறவே
அன்பினாலே நெய்த உள்ளம்
அருவருப்பு காண்பதில்லை
கழிவிரக்கம் கொண்ட கண்ணில்
கண்ணுறக்கம் கொள்வதில்லை.
பிணிநீக்கும் பணித்தனிலே
தன்னலத்தை பார்ப்பதில்லை
பிறர் வலி துரத்தும் செயலினிலே
சோர்வதும் தெரிவதில்லை
எங்கும் செய்யும் தொழில் தெய்வமாகும்
இங்கு தெய்வமே வந்து தொழில் செய்யும்

செவிலியர் பணி கவிதைகள்:
அன்னையின் அன்பு கண்களில்
ஆறுதல் அவர்கள் மொழியினில்
இன்சொல் கனிவும் பேசினில்
ஈடில்லா சேவை உணர்வு நெஞ்சினில்
உறக்கம் துறப்பு விழிகளில்
ஊக்கமும் உறுதியும் உழைப்பினில்
எழுச்சி அன்றாட செயலினில்
ஏற்றமாய் பிணியாளர் வாழ்வினில்
ஐயமின்றி பொதுநலம் மனதினில்
ஒப்பில்லா அர்ப்பணிப்பு தொழினில்
ஓய்வு இல்லை களப்பணியில்
ஒளடதமாய் மருத்துவ உலகினில்
எஃகு போல்வர் நம் செவிலியர்.!
நலமோடும் வளமோடும் வாழ்கவே.!
உலகில் அவர் புகழ் நிறைகவே..!

உலக செவிலியர் தினம் கவிதை:
உறவுகளை மறந்து விட்டோம் விலைமதிப்பற்ற
உயிர் காக்க பிறந்து விட்டோம்
தூக்கத்தை கண்டதில்லை எமனிடம் தோற்றதில்லை
துயரத்தில் வந்தவர்களை வார்த்தைகளால் மறக்கடிப்போம்
உயிர் போகும் நேரத்தில் வந்தவர்களையும்
உயிர் நாடி உயர்த்திடவே அயராது
சிகிச்சையில் நலம் பெரும்வரை போரடுவோம்
செய்திடும் பணியை சிறப்பாக செய்திடுவோம்
தன்னலமற்ற உழைப்பில் பிறர் நலத்தை
தெய்வமாக இருந்து பிணியின்றி காத்திடுவோம்
செவிலியர் தினம் கவிதை:
பகல் இரவு தூக்கத்தை இழந்து
தன்னுடைய ஆசைகள் எல்லாம் மறந்து
தனக்குள் ஆயிரம் வலிகள் இருந்தாலும்
அதயெல்லாம் மறந்து மற்றவர்களின் வலிக்கு மருந்து போடுவாள்.
| இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> | QUOTES IN TAMIL |














