Seviliyar Ponmozhigal in Tamil
செவிலியர் என்றால் யார் என்று நம் அனைவருக்குமே தெரியும். உயிர்களை காக்கும் கடவுளாக செயல்படுபவர்கள். செவிலியர் பணி என்பது மிகவும் உன்னதமான பணி என்று போற்றும் அளவுக்கு உயிர்களை காத்து வருகின்றனர். பொதுவாக இவ்வுலகில் உள்ள பணிகளில் மிகவும் சிறப்பான பணி மருத்துவ பணி என்றே கூறலாம். மருத்துவ துறையில் செவிலியர் பணி என்பது மிகவும் முக்கியமான பணி ஆகும்.
செவிலியர் என்பவர் மருத்துவர்களுக்கு உதவியாக நோயாளிகளை பார்த்து கொள்பவராக இருக்கிறார்கள். இப்படி உயிர்களை காக்கும் செவிலியர்களை போற்றும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மே 12 -ஆம் தேதி உலக நாடுகள் அனைத்தும் செவிலியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. ஆகவே நாம் இந்த பதிவின் வாயிலாக செவிலியரை போற்றும் பொன்மொழிகள் பற்றி பார்க்கலாம் வாங்க..!
செவிலியர் பொன்மொழிகள்:
♦ தெய்வங்களும் பணிவிடை செய்து வரம் அருளும்..! பிணி நீக்கும் கடவுளுக்கு..!
♦ செவிலியர்கள் நிகழ்காலத்தில் வாழும் தேவதைகள்..!
♦ படைப்பவனை இறைவன் என்கிறோம்..! அப்போ காப்பவன் கடவுள் தானே..!
♦ தன்னலம் கருதாமல் மக்களுக்கு சேவை செய்யும் தேவதைகள் தான் செவிலியர்கள்.
♦ என் தாய் என்னை தூக்கி ஆர தழுவும் முன் எந்தன் ஸ்பரிசத்தை தீண்டியவள் தான் செவிலித்தாய்.
♦ “ஒரு உயிரைக் காப்பாற்றினால் நீங்கள் ஒரு ஹீரோ. 100 உயிர்களைக் காப்பாற்றினால் நீங்கள் தான் செவிலியர்”.
♦ “செவிலியர்கள் என்பவர் ஆறுதல், இரக்கம் மற்றும் கவனிப்பு ஆகியவற்றை மருந்துச் சீட்டு இல்லாமல் வழங்குகிறார்கள்.” – Val Saintsbury
♦ “கவனிப்பு என்பது செவிலியத்தின் சிறப்பம்சம்.” – ஜீன் வாட்சன்
♦ “கடைசி மூச்சு விடும்போது செவிலியர்கள் இருக்கிறார்கள், முதல் மூச்சு விடும்போது செவிலியர்கள் இருக்கிறார்கள். ஆகவே பிறப்பைக் கொண்டாடுவது மிகவும் இன்பமாக இருந்தாலும், மரணத்தில் ஆறுதல் கூறுவதும் முக்கியம். – கிறிஸ்டின் பெல்லி
♦ “செவிலியர்கள் நமது மருத்துவ துறையின் இதயத் துடிப்பு.” -பராக் ஒபாமா
♦ “எல்லா தேவதைகளுக்கும் இறக்கைகள் இல்லை..! அப்படி இறக்கைகள் இல்லாத தேவதைகள் தான் செவிலியர்கள்”..!
♦ “அன்புடன் இருங்கள், ஏனென்றால் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொருவரும் ஒரு நோயால் போராடுகிறார்கள்.” – பிளேட்டோ.
♦ “செவிலியர்கள் சுகாதாரத்தின் இதயம்.” – டோனா வில்க் கார்டிலோ
♦ “நோயாளிகளுக்கு நம்பிக்கை தரும் தேவைதைகள் தான் செவிலியர்கள்.”
♦ “செவிலியர் ஒரு கலை மட்டுமல்ல, அதற்கு இதயமும் உண்டு. நர்சிங் என்பது ஒரு அறிவியல் மட்டுமல்ல, அதற்கு ஒரு மனசாட்சியும் உள்ளது.” – டோனா வில்க் கார்டில்லோ
சர்வதேச செவிலியர் தின வாழ்த்துக்கள் 2024
இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> | QUOTES IN TAMIL |