அட்சய திருதியை கவிதை
அட்சய திருதியை நாள் என்பது மிகவும் மங்களகரமான நாள். இந்நாளில் அனைவரும் பல சுப காரியங்களை செய்வார்கள். பொதுவாக அட்சய திரிதியை நாளில் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை வாங்கினால் அந்த ஆண்டு முழுவதும் செல்வம் நிலைத்து இருக்கும் என்பது அனைவரது நம்பிக்கையாக இருக்கிறது. இந்த நாள் எப்போது வரும் என்று ஆவலுடன் காத்து கொண்டிருப்பீர்கள். இந்த வருடத்தில் அட்சய திருதியை ஆனது வருகின்ற 10-ம் தேதி வருகின்றது. இந்நாளில் தங்களின் உறவுகள் மற்றும் நண்பர்களுக்கு அட்சய கவிதைகளை சென்ட் செய்வீர்கள். அவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க அட்சய திருதியை கவிதைகளை அறிந்து கொள்வோம் வாங்க..
Akshaya Tritiya Quotes in Tamil:
அட்சய திருதியைக்கு
உங்கள் வீட்டில்
தங்கம் வாங்குவதில்லையாமே?
நீ இருப்பதினால்!
Akshaya Tritiya Kavithai:
மாதத்தில்
இரண்டுமுறை
திருதியை வந்தாலும்
சித்திரை மாத
வளர்பிறை திருதியைக்கே
அட்சய திருதியை சிறப்பு!
Akshaya Tritiya Kavithai Lyrics:
அட்சயத் திருதியை அழிவில்லா நாள்,
அன்பும் அருளும் ஆனந்தக் காற்று தருவாள்
தங்கம் போல பொலிவே தரும்,
தரிசன நேரம் — நல்வாழ்வு வரும்!
நான்கு திசை நன்மை தேடி,
நவமணிகள் பொங்கி வீசும் போது
புனித தினம் புனித வணக்கம்,
பூஜையிலே பரிபூரண சமர்ப்பணம்.
விதை போல விதைத்த நற்பணி,
விருத்தியெனும் நறுமணம் தரும் கனி.
தாரகை போல ஒளிவீசும் நம்பிக்கை,
தங்கக் கதிராய் வாழ்வின் அச்சம் நீக்கி.
அட்சயம் – அவ்விதமே அருள் பெய்து,
அறம் வழியாக அடியெடுத்து நம்மைச் சேர்த்து,
தினமும் நலம் மலரட்டும் வாழ!
Akshaya Tritiya Quotes in Tamil:
இந்த அட்சய திருதியை நாளில் வாழ்க்கை எப்போதும்
ஏராளமான செழிப்பையும் மகிழ்ச்சியை
நிறைந்ததாக இருக்க லட்சுமி தேவியின்
பூரண அருள் கிடைக்கட்டும்..
Akshaya Tritiya Quotes in Tamil 2025:
இந்த நாளில் துன்பங்கள் அகல, இன்பங்கள் பெருகட்டும்
Akshaya Tritiya Kavithai 2025:
அட்சய திருதியையில்
தொடங்கும் செயல்கள்
வெற்றியில் முடிந்து
நல்ல பலனை தருமாம்!
என்னைக் காதலிக்கலாமா?
வேண்டாமா? என
குழப்பத்திலிருக்கும் நீயும்
இன்றிலிருந்தாவது
என்னைக்
காதலிக்க தொடங்கேன்!
இது போன்று பலவிதமான வாழ்த்துக்கள் images-ஐ டவுன்லோட் செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> | Wishes in Tamil |