Foxtail Millet in Tamil Uses
பொதுவாக, நமக்கு தெரியாத பல ஆரோக்கியமான உணவு பொருட்கள் உள்ளது. ஆனால், நாமோ ஆரோக்கியமான உணவு எது என்பதை அறிந்து கொள்ளாமல், ஆரோக்கியமற்ற துரித உணவுகளை தேடி தேடி சாப்பிட்டு வருகிறோம். இதனால், தான் பெரும்பாலும் உடலில் நோய் எதிர்ப்புசக்தி குறைந்து பல்வேறு விதமான நோய்கள் வருகிறது.
அக்காலத்தில், நம் முன்னோர்கள் அனைவரும் அரிசி, சோளம், தினை வகைகள், களி போன்ற உணவுகளையே அதிகம் சாப்பிட்டு வந்தார்கள். முக்கியமாக,சிறுதானிய உணவுகளை அதிகம் உணவில் சேர்த்து வந்தார்கள். ஆனால், இக்காலத்தில் உள்ள பலபேருக்கு ஆரோக்கியமான உனவுகளின் பெயர்கள் என்ன என்பதே தெரியாமல் இருக்கிறது. எனவே, அந்த வகையில், இப்பதிவில் Foxtail Millet என்றால் என்ன.? என்பதையும் அதனால் என்ன நன்மைகள் என்ன என்பதையும் தெரிந்து கொள்வோம் வாங்க.
Foxtail Millet in Tamil Name:

Foxtail Millet என்றால் தினை அரிசி ஆகும். இது சிறுதானிய வகைகளில் ஒன்றாகும். தினை அரிசி உணவுகளை நாம் தினமும் சாப்பிடுவதால் உடல் வலுப்பெறும். மேலும் இதில் பல்வேறு நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது.தினை வகைகளை நாம் தினமும் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் பல்வேறு நன்மைகளை பற்றி தெரிந்துகொள்வோம் வாருங்கள்.
100 கிராம் தினை அரிசியில் உள்ள சத்துக்கள்:
- தாது சத்துக்கள் – 3 கிராம்
- கொழுப்பு சத்து – 4.3 கிராம்
- சுண்ணாம்பு சத்து – 31 கிராம்
- புரதம் – 12.3 கிராம்
- நார் சத்து – 14 கிராம்
- மாவு சத்து – 60.9 கிராம்
Foxtail Millet Benefits in Tamil:
உடல் வலிமை:

தினை அரிசியை நாம் தினமும் சாப்பிட்டு வருவதனால் நம் உடலுக்கு வலிமை கிடைக்கும். உடல் சோர்வாக உள்ளவர்கள் தினை அரிசியை உங்கள் உணவில் சேர்த்துக்களுங்கள் உங்கள் உடல் வலுப்பெறும்.
திகட்டாத தினை அரிசியில் இவ்வளவு விஷயம் இருக்கிறதா..?
நோய் எதிர்ப்பு சக்தி:

தினை அரிசிக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் தன்மை உள்ளதால். ஆம் தினமும் இதை சாப்பிட்டு வருவதனால் நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும். மேலும் நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும்.
செரிமானம் :
தினை அரிசியில் அதிக நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் இது செரிமான பிரச்சனைக்கு உதவுகிறது. நம் உடலில் முல்லா செரிமான பிரச்சனை மற்றும் மலச்சிக்கலை மேம்படுத்துகிறது. மேலும் தினை அரிசியில் புரதச்சத்து அதிகமாக உள்ளதால் நம் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
உடல் பருமன் குறைய:

தினை அரிசியில் குறைந்த அளவே கலோரி உள்ளது. இதனால் உடல் பருமனை குறைக்கவும், உடல் பருமன் அதிகரிப்பதையும் தடுக்கிறது. ஆகையால், உடல் பருமன் உள்ளவர்களுக்கு தினை அரிசி ஒரு சிறந்த உணவு பொருளாகும். அதே நேரத்தில் நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. ஆகவே, நீரிழிவு நோயாளிகள் தினை அரிசி அன்றாடம் உணவில் சேர்த்து வருவது நல்லது.
மேலும், தினை அரிசி அளிக்கும் நன்மைகள் பின்வருமாறு:
- தினை அரிசி எலும்புகளை வலுப்படுத்துகிறது.
- நரம்புகளை வலுப்படுத்துகிறது.
- இதயத்தை ஆரோக்கியமாக வைத்து கொள்கிறது.
- தசைகளை பலப்படுத்துகிறது.
| இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health tips in tamil |














