கிராம்பு டீ குடிப்பதால் உடலிற்கு இவ்வளவு நன்மைகளா..!

Kirambu Tea Benefits in Tamil

Kirambu Tea Benefits in Tamil

டீயில் பலவகைகள் உள்ளது. ஒவ்வொரு டீயும் நமக்கு ஒவ்வொரு விதமான ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது. அந்த வகையில் பலபேர் விரும்பி சாப்பிடக்கூடிய கிராம்பு டீயின் நன்மைகள் பற்றித்தான் இப்பதிவில் பார்க்கப்போகிறோம். கிராம்பு ஒரு மருத்துவ மூலிகை பொருளாகும். இது சமையலில் நறுமண பொருட்களாக பயன்படுத்தப்படுகிறது. மேலும் கிராம்பை பயன்படுத்தி செய்யப்படும் டீயும் போடுவார்கள். எனவே இத்தகைய கிராம்பு டீயை குடிப்பதால் உடலிற்கு என்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை இப்பதிவில் பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

What are The Benefits of Clove Tea in Tamil:

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது:

 clove tea benefits in tamil

கிராம்பில் அதிக அளவில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. எனவே இதனை நாம் டீ போட்டு குடிப்பதன் மூலமாக உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து நோய் வராமல் தடுக்கிறது.

தினமும் புதினா டீ குடிப்பதால் உடலில் ஏற்படும் நன்மைகள்

காய்ச்சல் போக்கும்:

 what are the benefits of clove tea in tamil

கிராம்பில் வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் கே அதிக அளவில் உள்ளது. இது பாக்டீரியா தொற்றுக்கு எதிராக போராட உதவுகிறது. எனவே அதிக காய்ச்சலில் இருக்கும் போது கிராம்பு டீ செய்து அருந்தினால் காய்ச்சல் விரைவில் குணமாகும். மேலும், கிராம்பில் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் உள்ளது. எனவே சளி, இருமல் போன்றவற்றிற்கு கிராம்பு டீ நல்ல தீர்வாக இருக்கிறது.

உடல் எடையை குறைக்கிறது:

 what are the benefits of drinking clove tea in tamil

உடல் எடையை குறைக்கும் தன்மை கிராம்பு டீயிற்கு உண்டு. எனவே உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கிராம்பு டீயை தினமும் அருந்தி வரலாம். 

செரிமான பிரச்சனை நீங்க:

 what are the health benefits of cloves tea in tamil

கிராம்பு டீயை அருந்தி வருவதன் மூலம் செரிமான பிரச்சனை விரைவில் குணமாகும். எனவே செரிமான பிரச்சனைகள் உள்ளவர்கள் தினமும் கிராம்பு டீயை அருந்தி வரலாம்.

பல் ஈறு வலி குணமாக:

 what are the health benefits of drinking clove tea in tamil

பல் வலிக்கு கிராம்பு ஒரு நல்ல தீர்வு. கிராம்பில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் ஈறுகளில் ஏற்படும் வீக்கத்தை குறைத்து பல் வலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. எனவே கிராம்பு டீயை அருந்துவதன் மூலம் வாயில் உள்ள அனைத்து கெட்ட பாக்டீரியாக்களும் அழிந்து விடுகிறது.

மூட்டுவலி குணமாக:

 kirambu tea benefits in tamil

கிராம்பில் உள்ள பல்வேறு ஊட்டச்சத்துக்கள் மூட்டுகளில் ஏற்படும் வீக்கத்தை குறைத்து மூட்டுவலியை பிரச்சனையை போக்குகிறது. எனவே நாள்பட்ட மூட்டுவலி பிரச்சனை உள்ளவர்களுக்கு கிராம்பு டீ ஒரு நல்ல தீர்வாக அமைகிறது.

தினமும் ஒரே டீ குடிக்காமல் ஒவ்வொரு நாளும் வித்தியசமாக டீ போட்டு குடியுங்கள்

சைனஸ் பிரச்சனை தீர:

கிராம்பில் உள்ள யூஜெனால், சளியை போக்க உதவுகிறது. எனவே சைனஸ் பிரச்சனை உள்ளவர்களுக்கு கிராம்பு டீ சிறந்த மருந்தாக உள்ளது.

தோல் நோய்கள் குணமாக:

கிராம்பில் அதிக அளவில் கிருமிநாசினி உள்ளது. எனவே கிராம்பு டீ அருந்தி வருவதன் மூலம் தோல் சம்மந்தப்பட்ட நோய்கள் வராமல் இருக்கும்.

தினமும் இலவங்கப்பட்டை டீ குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health tips in tamil