ஒரு லிட்டர் டீசல் போட்டால் ரயில் எத்தனை கிலோ மீட்டர் வரை பயணிக்கும் தெரியுமா.?

Advertisement

How Many Kilometers Does a Train Travel Per Liter of Diesel in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் ஒரு லிட்டர் டீசலுக்கு ரயில் எத்தனை கிலோ மீட்டர் வரை பயணிக்கும் என்பதை அறிந்துகொள்வோம் வாங்க. பொதுவாக, நாம் அனைவருமே டூவீலர் வாங்கும்போது அதன் மைலேஜ் எவ்வளவு என்று தான் கேட்டு வாங்குவோம். அதிக மைலேஜ் கொடுக்கும் வண்டியை தான் வாங்க விரும்புவோம். அதாவது ஒரு லிட்டருக்கு எவ்வளவு கிலோமீட்டர் மைலேஜ் கொடுக்கிறது என்பதை அறிந்துகொண்டே அதிக மைலேஜ் கொடுத்தால் தான் வண்டியை வாங்குவோம். இது பைக், ஸ்கூட்டி மற்றும் கார் போன்றவற்றிற்கு பொருந்தும். அதுவே, ரயில், பேருந்து மற்றும் விமானம் போன்றவற்றின் மைலேஜ் எவ்வளவு என்று என்றாவது நீங்கள் யோசித்தது உண்டா.?

இவற்றில் ரயில் என்று எடுத்துக் கொண்டால் ஒரு லிட்டர் டீசலுக்கு எவ்வளவு தூரம் செல்லும் என்பதை நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, இப்பதிவின் வாயிலாக ரயில் ஒரு லிட்டர் டீசல் போட்டால் ரயில் எத்தனை கிலோ மீட்டர் வரை பயணிக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

ரயிலை கண்டுபிடித்தவர் யார் என்று உங்களுக்கு தெரியுமா

ஒரு லிட்டர் டீசல் போட்டால் ரயில் எத்தனை கிலோ மீட்டர் வரை பயணிக்கும்.?

ரயிலின் மைலேஜை பொறுத்தவரை, அது எத்தனை பெட்டிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பதை பொறுத்து தான் கணக்கிடப்படுகிறது. மைலேஜ் என்பது ஒரு வாகனத்தின் எரிபொருள் செயல்திறனைப் பற்றியதாகும். ரயிலின் மைலேஜ் என்பது பல காரணிகளைப் பொறுத்து அமைகிறது. இதனால் ஒரு ரயில் ஒரு லிட்டர் டீசலுக்கு இவ்வளவு தூரம் தான் செல்லும் என்று துல்லியமாக கணித்து கூறமுடியாது. ஏனென்றால் அதன் மைலேஜ் என்பது அதன் பாதை, எந்த வகையான ரயில் (பயணிகள் ரயில் – எக்ஸ்பிரஸ், அதிவிரைவு) மற்றும் அதில் உள்ள பெட்டிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து மாறுபடும் என்று கூறப்படுகிறது.

ஒரு லிட்டர் டீசல் போட்டால் ரயில் எத்தனை கிலோ மீட்டர் வரை பயணிக்கும்

ஒரு டீசல் இன்ஜினின் மைலேஜ் ஒரு மணி நேர அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. 24 முதல் 25 பெட்டிகள் கொண்ட ரயில்களின் எஞ்சின் ஒவ்வொரு 1 கிமீ தூரத்திற்கும் 6 லிட்டர் டீசலைப் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. பயணிகள் ரயில் என்ஜின்கள் ஒவ்வொரு 1 கிமீக்கும் 5-6 லிட்டர் டீசலைப் பயன்படுத்துகின்றன. பயணிகள் ரயில்கள் அதிக இடங்களில் நின்று செல்வதால் அதிக டீசல் எடுத்துக்கொள்கிறது.

ரயில் எத்தனை கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கிறது தெரியுமா?

 12 பெட்டிகளை கொண்ட எக்ஸ்பிரஸ் ரயில் ஆனது 1 கிமீ தூரம் பயணிப்பதற்கு குறைந்தபட்சம் 4.5 லிட்டர் வரை டீசல் எடுத்துக்கொள்கிறது. அந்த வகையில் ஒரு தோராயமாக பார்த்தால் சூப்பர் ஃபாஸ்ட் ரயில்கள் ஒரு லிட்டர் டீசலுக்கு 230 மீட்டர் தூரம் வரையிலும், பேசஞ்சர் ரயில்கள் 180 முதல் 200 மீட்டர் வரையிலும் பயணிக்கும் என்று கணிக்கப்படுகிறது.  
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK in Tamil
Advertisement