Gitanjali Book Author in Tamil
இவ்வுலகில் நாம் தெரிந்து கொள்வதற்கு எவ்வளவோ தகவல்கள் இருக்கின்றன. அப்படி இருக்கும் பயனுள்ள தகவல்களை நாமும் நம் பதிவின் வாயிலாக தினமும் அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவின் வாயிலாக கீதாஞ்சலி என்ற நூலை எழுதியவர் யார் என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ளப்போகின்றோம். சரி இதற்கான விடை உங்களுக்கு தெரியுமா..? நம்மில் பலரும் இந்த கேள்விக்கான விடையை தேடி இருப்போம். ஆகவே கீதாஞ்சலி என்னும் நூலை எழுதியவர் யார் என்பதை தெரிந்து கொள்ள நினைப்பவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும்..! சரி வாங்க நண்பர்களே அதை படித்தறிவோம்.
ரவீந்திரநாத் தாகூர் பற்றி உங்களுக்கு தெரியுமா
கீதாஞ்சலி நூலை எழுதியவர்:
பொதுவாக கீதாஞ்சலி என்ற நூலை நாம் அனைவருமே கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அதை எழுதியவர் யார் என்று நம்மில் சிலருக்கு தெரியாது.
எனவே கீதாஞ்சலி நூலை எழுதியவர் தான் ரவீந்திரநாத் தாகூர். அதாவது இந்தியக் கவிஞர் இரவீந்திரநாத் தாகூர் எழுதிய கவிதைத் தொகுப்பு தான் கீதாஞ்சலி நூல் ஆகும்.
ஆகவே கீதாஞ்சலி என்பது வங்காளக் கவிஞரான ரவீந்திரநாத் தாகூரின் கவிதைகளின் தொகுப்பாகும். இந்த கீதாஞ்சலி நூலானது வங்காள மொழியில் 157 பாடல்கள் கொண்ட இதன் மூலப் பதிப்பு ஆகஸ்ட் 14, 1910 அன்று வெளியிடப்பட்டது. மேலும் இந்த கீதாஞ்சலி நூல் உலகிலுள்ள பல மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
அரசியலை விட்டு விலகிய கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் அவர்கள், இலக்கிய வெறியோடு : கீதாஞ்சலி” என்ற உள்ளொளி நூலை எழுதினார். ஆனால், அதைத் தன் தாய்மொழியான வங்காள மொழியில் எழுதியதால், அதை வங்கப் பேரறிஞர்கள் மட்டுமே பாராட்டும் நிலை ஏற்பட்டது.
தாகூர் பிறந்தநாள் வாழ்த்துக்கள் மற்றும் பொன்மொழிகள்
கீதாஞ்சலி நோபல் பரிசு:
அதன் பிறகு ரவீந்திரநாத் தாகூர் தன்னுடைய உடல் நலக் குறைவால் அவரது கிராமம் ஒன்றிற்குச் சென்றார்.
உடல் சரியாகும் வரை சில நாட்கள் அந்த கிராமத்தில் ஓய்வெடுத்தார். அந்த நேரத்தில் “கீதாஞ்சலி” நூலை ஆங்கில மொழியிலே மொழி பெயர்த்தார். அப்படி பொழுது போக்கிற்காக செய்த இந்த மொழி மாற்றப் பணி, அவருடைய புகழை உலகமெல்லாம் பரப்பியது.
பொருளாதாரத்தில் நொடிந்து போயிருந்த அவரது வாழ்க்கை அந்த மொழி பெயர்ப்பால் நன்மை பெற்றது. பெரும்புகழைத் தேடித் தந்தது. உலக அறிஞர்கள் கவிஞர் தாகூரை வானளவாகப் புகழ்ந்து போற்றினார்கள். அவரை அறிவுலகம் தேடிவந்து அணைத்துக் கொண்டது.
ரவீந்திரநாத் தாகூர் எழுதிய நூல்கள்
அதன் பிறகு கவிஞர் தாகூர் அவர்கள் 1912-ஆம் ஆண்டில் லண்டன் மாநகர் சென்றார். அங்கு அவருடைய நண்பரை பார்த்தார். அந்த நண்பர் ஆங்கிலத்தில் அருமையாக மொழி பெயர்க்கப்பட்ட கீதாஞ்சலி நூலைப் படித்துப் பார்த்து மகிழ்ச்சியடைந்தார். அதிலுள்ள ஒவ்வொரு பாடலையும் அவர் திரும்பத் திரும்பப் படித்து, அதன் இனிமையை உணர்ந்தார்.
பின் லண்டன் நகரில் இருக்கும் நண்பர்கள் வட்டம் தாகூருக்கு விருந்தளித்துப் பாராட்டியது. புத்தகமாகிவிட்ட “கீதாஞ்சலி” நூல் இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளிலே அச்சிட்டுப் பரபரப்பாக விற்பனையானது. உலக நாடுகள் எல்லாம் தாகூரையும், அவரது எழுத்தாற்றலையும் புரிந்து கொண்டு பாராட்டப்பட்டது.
அதன் பின்னர் அமெரிக்காவிலே சொற்பொழிவாற்றி விட்டு மீண்டும் லண்டன் வந்தார் கவிஞர் தாகூர். பிறகு, நேராக 1913-நவம்பர் மாதத்தில் இந்தியா திரும்பினார்.
சாந்திநிகேதன் வந்து சேர்ந்த கவிஞர் தாகூருக்கு ஓர் அவசர தந்தி வந்தது. அதில், இரவீந்திர நாத் தாகூருக்கு இலக்கியத்துறை பிரிவு சார்பாக நோபல் பரிசு வழங்கப்பட்டிருப்பதாக செய்தி வந்தது.
பின் தாகூருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசானது 1913 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது. மேற்கத்தியர் அல்லாத ஒருவருக்கு நோபல்பரிசு வழங்கப்படுவது அதுவே முதல் முறையாகும்.
ரவீந்திரநாத் தாகூர் கல்வி சிந்தனைகள்
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |