Happy Mothers Day Wishes Quotes in Tamil
இந்த உலகத்தில் பிறந்த அனைத்து உயிர்களுக்கும் அம்மா என்றால் உயிர். அம்மா இல்லையெனில் இந்த உலகத்திற்கு வந்திருக்க முடியாது. நம்முடைய முகம் சிறியதாக வாடி இருந்தாலும் அதனை கண்டுபிடிப்பது அம்மா மட்டுமே. அது போல நமக்கு ஏதவாது கஷ்டமாக இருந்தாலும் அம்மா மடியில் சாய்ந்தால் அந்த கவலைகள் நீங்கும். ஒரு தாய்க்கு தன்னுடைய பிள்ளைக்கு எத்தனை வயதானாலும் அவளுக்கு தன் பிள்ளை குழந்தை தான்.
அம்மா தனது பிள்ளைகள் மீதும் தனது குடும்பத்தின் மீதும் அள்ளித் தரும் அளவிட முடியாத அன்பை, அவா்களின் ஒப்பற்ற பங்களிப்புகள் மற்றும் அவா்களின் தன்னலமற்றத் தியாகத்தை கொண்டாடுவதே அன்னையா் தினம் ஆகும். அம்மா என்ற சொல்லை உச்சாிக்கும் போது நம் அனைவருடைய உள்ளங்களும் உணா்ச்சி மிகுதியால் தத்தளிக்கின்றன. அன்னையின் அன்பு தனித்துவமானது, உண்மையானது மற்ற எவரோடும் அன்னையின் அன்பை ஒப்பிட முடியாது. அம்மாவின் அன்பையும், தியாகத்தையும் கூறுவதற்கு இந்த ஒரு பதிவு போதாது. அன்னையர் தினம் தன்னுடைய, தங்கைச்சி, தோழிகள், காதலி, மனைவி போன்றவர்களுக்கு வாழ்த்துக்களை கூற வேண்டும் என்று நினைப்பீர்கள். அவர்களுக்கு உதவிடும் வகையில் இந்த பதிவில் அன்னையர் தின வாழ்த்து கவிதைகளை Download செய்யும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை காண்போம் வாங்க..
Happy Mothers Day Wishes in Tamil Words:
வார்த்தைகளே இல்லாத வடிவம்
அளவுகோளே இல்லாத அன்பு
சுயநலமே இல்லாத இதயம்
வெறுப்பை காட்டாத இதயம்
அம்மா மட்டும் தான்
இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்
Mother’s Day Wishes From Daughter in Tamil:
குழந்தையாக இருக்கும் அவளே இன்னொரு குழந்தைக்கு தாயாக மாறிவிட்டால் என்றும் குழந்தை போல் இருக்கும் என் மகளுக்கு இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்
Mother’s Day Wishes to My Girlfriend in Tamil
இந்த உலகத்திற்கு நீங்கள் ஒரு நபராக இருக்கலாம், ஆனால் என்னைப் பொறுத்தவரை, நீங்கள்தான் என் உலகம்.! என்னவளுக்கு இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்
Heart Touching Mother’s Day Wishes Whatsapp Text in Tamil:
கோபம், வெறுப்பு, பிடிவாதம் என தன் பிள்ளைகள் எதை காட்டினாலும் உன் மீது அன்பு மட்டுமே செலுத்தும் ஒரே ஜீவன் அம்மா! அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்!
இது போன்று பலவிதமான வாழ்த்துக்கள் images-ஐ டவுன்லோட் செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> | Wishes in Tamil |