ரயிலை கண்டுபிடித்தவர் யார் என்று உங்களுக்கு தெரியுமா..?

Advertisement

 Who Invented Train in Tamil

வணக்கம் நண்பர்களே… நம் பொதுநலம்.காம் பதிவில் தினமும் அனைவருக்கும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொண்டு வருகிறீர்கள். அந்த வகையில் இன்று நாம் இரயிலை கண்டுபிடித்தவர் யார்..? அவரை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்து கொள்ள போகிறோம். தினமும் எதாவது ஒரு தகவலை தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கும் நண்பர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். வாங்க நண்பர்களே இந்த பதிவை படித்து பயன் பெறுவோம்.

ரயிலை கண்டுபிடித்தவர் யார்.?

இரயில் என்று சொன்னாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பிடிக்காதவர்கள் என்று யாரும் இருக்க முடியாது. பெரிய நீளமான இரயில்கள், எப்பொழுதும் ஓன்று சேராத தண்டவாளங்கள், நீண்டு கொண்டே செல்லும் இரயில் பாதைகள், இரயிலின் ஜன்னலோர காற்றுமற்றும் இரயிலின் ஓசைகள் என்று சொல்லிக்கொண்டே போகலாம். இரயில் என்று சொன்னாலே அனைவரும் விரும்ப கூடிய ஒரு விஷயம். இவ்வளவு அற்புதங்கள் நிறைந்த இரயிலை கண்டுபிடித்தவர் தான் ஜார்ஜ் ஸ்டீபென்சன். இவரை பற்றிய தகவல்களை தெரிந்துகொள்வோம் வாங்க..

இதையும் பாருங்கள் ⇒ பூஜ்ஜியத்தை கண்டுபிடித்தவர் யார் தெரியுமா

ஜார்ஜ் ஸ்டீபென்சன் வாழ்க்கை வரலாறு:

ஜார்ஜ் ஸ்டீபென்சன் 1781 ஆம் ஆண்டு ஜூன் 9 அன்று இராபர்ட் மற்றும் மேபல் என்ற தம்பதியருக்கு இரண்டாவது மகனாக பிறந்தார். இவர் இங்கிலாந்து நாட்டிலுள்ள நார்தம்பர்லேண்ட் என்ற பகுதியை சேர்ந்தவர். இவர் வைலம் என்னும் ஊரில் பிறந்தார். நிலக்கரி சுரங்கத்தில் இவருடைய தந்தை பணியாற்றி வந்தார். குடும்ப வறுமை காரணமாக இவரால் கல்வி கற்க முடியவில்லை.

சிறுவயதில் இருந்தே மாடு மேய்ப்பது இவருடைய பணியாக இருந்தது. இவர் 17 வயதில் தன் தந்தையுடன் நிலக்கரி சுரங்கத்தில் பணியாற்றினார். அங்கு கிடைத்த பணத்தை வைத்து இரவுப்  பள்ளியில் சேர்ந்து கல்வி கற்றார். பிறகு இவர் பிரான்சஸ் ஹென்டர்சன் என்ற மங்கையை 1802 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.  இவருக்கு 1803 ஆம் ஆண்டு இராபர்ட் என்ற மகன் பிறந்தான்.

உலகின் முதல் ரயில் 1804 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த ரயில் 25 டன் இரும்புப் பொருட்களையும் 70 பேரையும் 10 மைல் (16 கிலோமீட்டர்) தூரத்திற்கு சுமந்து சென்றது. 1853 ஆம் ஆண்டு ஜார்ஜ் ஸ்டீபென்சன் என்பவாரல் தொடர்வண்டி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இவர் “தொடர்வண்டி பாதையின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்”.

இவர் கல்வியறிவே இல்லாமல் நீராவிப் பொறியை கண்டுபிடித்த இங்கிலாந்தை  சேர்ந்த எந்திரப் பொறியாளர் மற்றும் கட்டுமானப் பொறியாளர் என்று அழைக்கப்படுகிறார். இவர் உலகின் முதல் பொது தொடர்வண்டிப்  பாதைக்கான தண்டவாளங்களை அமைத்தார். இவர் அமைத்த இரயில் பாதை இன்றும் இவருடைய பெருமையை போற்றி வருகின்றது. அந்த “இரயில் பாதைகள் ஸ்டீபென்சன் பாதை என்றும் அழைக்கப்படுகிறது”. இவர் அமைத்த இரயில் பாதை 4 அடி  8 1/2 அங்குலம், (1435 மிமீ) நீளத்தில் இன்றும் உலக தரமான பாதையாக உள்ளது.

மின்சாரத்தை கண்டுபிடித்தவர் யார்

 

கில்லிங்வொர்த் என்ற பகுதியில் வெஸ்ட்மூர் என்ற ஊரில் குடியேறினார். 1804 ஆம் ஆண்டு இவருக்கு ஒரு மகள் பிறந்து சிலவாரங்களில் இறந்து விட்டது. 1806 ல் இவருடைய மனைவியும் காலமானார். சில வருடங்கள் கழித்து சுரங்கத்தில் ஏற்பட்ட ஒரு விபத்தில் இவருடைய கண் பார்வை போனது. 1848 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி ஜார்ஜ் ஸ்டீபென்சன் இவ்வுலக வாழ்வை துறந்தார்.

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil
Advertisement