Womens Money Saving Ideas at Home in Tamil
பணத்தை சம்பாதிப்பதை விட அதனை சேமிப்பது தான் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இந்த பணத்தை எதில் முதலீடு செய்வது எதில் முதலீடு செய்தால் நல்லது என்றெல்லாம் தெரிவதில்லை. பணத்தை சம்பாதிக்கும் ஒவ்வொருவரும் அதனை சரியான முறையில் சேமிப்பது அவசியமானது. பணத்தை எப்படி சேமிக்க வேண்டும், எதில் சேமிக்க வேண்டும் என்று தெரியவில்லை என்றால் நம்முடைய பதிவில் நிறைய வகையான சேமிப்பு தகவலை பதிவிட்டுள்ளோம். அந்த வகையில் இன்றைய பதிவில் குடும்ப பெண்கள் பணத்தை சேமிப்பது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாங்க..
சேமிப்பு பழக்கம்:
வீட்டில் இருக்கும் பெண்களாக இருந்தாலும் சரி, வேலைக்கு செல்லும் பெண்களாக இருந்தாலும் சரி சேமிப்பு என்பதை உங்களின் அன்றாட வாழ்க்கையில் பழக்கமாக்கி கொண்டு வர வேண்டும். வீட்டில் செய்யும் அனாவசிய செலவுகள், அத்திவாசிய செலவுகள் என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
வீட்டில் செய்யும் செலவுகளை கண்காணித்து கொண்டே இருக்க வேண்டும். மேலும் வருமானம் எவ்ளளவு வருகிறதோ அதற்கு ஏற்றது போல நீங்கள் பணத்தை சேமிக்க வேண்டும். சேமிப்பு போக செலவு செய்ய வேண்டும் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.
அதற்காக 500, 1000 இருந்தால் தான் பணத்தை சேமிக்க வேண்டும் என்று இல்லை. சிறிய தொகையாக இருந்தால் கூட சேமிக்கலாம். வீட்டில் ஒரு உண்டியல் வைத்து கூட சேமிக்கலாம்.
காய்கறியில் சேமிப்பது:
வீட்டில் வாங்கும் காய்கறியை மொத்தமாக வாங்கி வைக்காதீர்கள். ஏனென்றால் எல்லா காய்கறியையும் ஒரே நாளில் சமைக்க மாட்டீர்கள். இதனால் காய்கறி வீணாகி விடும். காய்கறி மட்டுமில்லை உங்கள் பணமும் தான்.
நகை வாங்குவதற்கு பணத்தை சேமிப்பது எப்படி.?
பலருக்கும் நகை வாங்க வேண்டும் என்பது கனவாக இருக்கிறது. பெண்கள் அனைவருக்கும் நகை என்றால் மிகவும் பிடித்தமான ஒன்றாக இருக்கிறது. ஆசை இருந்தால் மட்டும் போதாது. அதற்கான முயற்சிகளையும் எடுக்க வேண்டும். அதற்கு உங்களின் வருமானத்திலிருந்து 1000 ரூபாயை சேமிக்க பழகுங்கள்.
மின்சாரத்தில் பணத்தை சேமிப்பது எப்படி.?
வீட்டில் இருக்கும் பெண்கள் அதிகமாக செலவிடுவது என்றால் மின்சாரத்தில் தான். மின்சாரத்தை தேவையானது போது மட்டும் பயன்படுத்துங்கள். எடுத்துக்காட்டிற்கு போனிற்கு சார்ஜ் போட்டு வைத்திருக்கிறீர்கள் என்று வைத்து கொள்வோம். போனை சார்ஜர்யிலிருந்து எடுத்து விடுவீர்கள். ஆனால் பட்டனை ஆப் பண்ண மறந்து விடுவார்கள். இது போல தேவையில்லாத நேரத்தில் பயன்படுத்தும் மின்சாரத்தை கட்டுப்படுத்துங்கள்.
மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | முதலீடு |