எல்ஐசியில் அம்ரித் பால் என்ற புதிய திட்டம் தொடக்கம் – LIC Amritbaal Plan Details in Tamil
பொதுநலம்.காம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம்.. தினமும் தங்களுக்கு பயனளிக்கும் வகையில் பலவகையான பதிவுகளை பதிவு செய்து வருகின்றோம், அந்த வகையில் இன்று நாம் ஒரு முதலீட்டு திட்டத்தை பற்றி தான் தெரிந்துகொள்ள போகிறான்.
குழந்தைகளின் உயர் கல்வி தொடர்பாக LIC-யில் புதிய அம்ரித் பால் என்ற முதலீட்டு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது அது குறித்த முழுமையான தகவல்களை இங்கு நாம் படித்து தெரிந்துகொள்வோம் வாங்க.
LIC Amritbaal Plan No 874 Insurance Plan for Children:
குழந்தைகளுக்காக எல்ஐசியில் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை மத்திய அரசு தொடக்கி வைத்துள்ளது. LIC-யின் அம்ரித் பால் திட்டம் ஒரு தனி நபர் சேமிப்பு ஆயுள் காப்பிட்டு திட்டம் என கூறப்படுகிறது.
மேலும் இத்திட்டம் குழந்தைகளின் உயர் கல்வி மற்றும் பிற தேவைகளை பூர்த்தி செய்ய ஏற்றதாக போதுமான தொகையை சேமிப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பாலிசியை தொடங்கப்பட்ட காலம் முதல் முதிர்வு காலம் வரை ஒவ்வொரு பாலிசி ஆண்டு முடிவிலும் ரூபாய் 1000 அடிப்படை காப்பீட்டு திட்டடு தொகைக்கு 80 ரூபாய் வீதம் உத்தரவாதமான தொகையாக வைக்கப்படும் என்றும், இந்த பாலிசி 30 நாட்கள் முதல் 13 ஆண்டுகள் வரை உள்ள குழந்தைகளுக்கு ஏற்ற திட்டம் என்றும் குறிப்பிடப்பட்டது.
ஆக உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு பணம் சேமிக்கும் வகையில் இந்த LIC பாலிசி திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
இத்திட்டத்தில் உங்கள் குழந்தைக்கு பாலிசி போட விரும்புகிறீர்கள் என்றால் குறிந்தபட்சம் 2 லட்சம் ரூபாய் முதல் காப்பீட்டு திட்டத்தை தொடங்கலாம். மேலும் ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் வரை குறுகிய பிரீமியம் வசதி உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் அதிகபட்ச காப்பீட்டுத் தொகைக்கு வரம்பு இல்லை.
நாம் கட்ட போகும் பிரீமியம் தொகையை Single அல்லது Regular பிரீமியமாக செலுத்தலாம். அதாவது நீங்கள் ஒரே ஒரு முறை மட்டும் முதலீடு செய்யலாம், மாதம்/ மூன்று மாதங்களுக்கு ஒரு முறை/ ஆறு மாதங்களுக்கு ஒரு முறை என்று தவணை முறையை பிரீமியம் தொகையை செலுத்தி வரலாம். பாலிசியின் முதிவு காலம் 18 முதல் 25 வருடம் வரை. இத்திட்டத்தை மத்திய நிதித்துறை செயலாளர் விவேக் ஜோஷி துவங்கி வைத்தார்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
செல்வமகள் சேமிப்பு திட்டம் வருடம் 5000
மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | முதலீடு |