Post Office Time Deposit Scheme Details in Tamil
நாம் அனைவருக்குமே இன்றைய சூழலில் மிக மிக அதிக அளவு தேவைப்படுவது பணம் தான். ஏனென்றால் இன்றைய சூழலில் அனைத்து இடங்களிலும் பணம் தான் அதிக அளவு தேவைப்படுகிறது. ஏன் நாம் நமது தேவையான ஒரு சிறிய பொருளை வாங்க வேண்டும் என்றாலும் அதற்கு கூட பணம் தான் தேவைப்படுகிறது. அதனால் அனைவருமே தங்களுக்கு தேவையான பணத்தை ஓடி ஓடி உழைத்து சம்பாதிக்கிறார்கள். அப்படி சம்பாதித்ததாலும் நமக்கு முக்கியமாக தேவைப்படும் நேரத்தில் நம்மிடம் பணம் இல்லை என்றால் நாம் மற்றவர்களிடம் சென்று கடன் பெற வேண்டும். அதனால் தான் அனைவருமே சேமிக்க வேண்டும்.
ஆனால் ஒரு சிலருக்கு இன்றும் சேமிப்பு பற்றிய சரியான புரிதல் இல்லை. அப்படிப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் தான் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு சேமிப்பு திட்டம் பற்றிய முழுவிவரங்களையும் பதிவிட்டு வருகின்றோம். அதேபோல் இன்றைய பதிவில் தபால் துறையின் Time Deposit சேமிப்பு திட்டம் பற்றிய முழுவிவரங்களை அறிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Post Office Time Deposit Scheme in Tamil:
தகுதி:
இந்த Time Deposit சேமிப்பு திட்டத்தில் நீங்கள் சேமிக்க வேண்டும் என்றால் நீங்கள் இந்திய குடிமக்களாக இருந்தால் மட்டும் போதும்.
சேமிப்பு தொகை:
நீங்கள் இந்த Time Depositசேமிப்பு திட்டத்தில் குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதல் அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமென்றாலும் சேமிக்கலாம்.
சேமிப்பு காலம்:
இந்த திட்டத்தில் நீங்கள் 1, 2, 3 மற்றும் 5 வருடம் ஆகிய நான்கு சேமிப்பு கால அளவு உள்ளது.
SIP-ல் வெறும் 200 ரூபாயை முதலீடு செய்து 1 கோடி வரை பெறலாமா அது எப்படி
வட்டி விகிதம்:
Time Deposit சேமிப்பு திட்டத்தில் உங்களுக்கு தோராயமாக 1 வருடத்தில் 6.8%, 2 வருடத்தில் 6.9%, 3 வருடத்தில் 7% மற்றும் 5 வருடத்தில் 7.50% ஆகிய வட்டிவிகிதங்கள் அளிக்கப்படுகிறது.
எவ்வளவு கிடைக்கும்:
நீங்கள் இந்த Time Deposit சேமிப்பு திட்டத்தில் 5 வருட கால அளவை தேர்வு செய்து 1,00,000 ரூபாயை முதலீடு செய்கிறீர்கள் என்றால் உங்களுக்கு 5 வருடத்திற்கு 44,829 ரூபாய் வட்டி தொகை கிடைக்கும்.
5 வருடத்திற்கு பிறகு நீங்கள் செலுத்திய தொகை மற்றும் வட்டி தொகை இரண்டினையும் சேர்த்து 1,44,829 ரூபாயினை பெறுவீர்கள்.
தபால் துறையின் FD திட்டத்தில் 20,000 முதலீடு செய்தால் எவ்வளவு வட்டி மற்றும் அசல் கிடைக்கும்
மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | முதலீடு |