இந்த நொடியை மகிழ்ச்சியாக வைத்து கொள்வதற்கு என்ன செய்வது

Advertisement

இந்த நொடியை மகிழ்ச்சியாக வைத்து கொள்வதற்கு என்ன செய்வது

இன்றைய காலத்தில் அனைவரும் பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஓடி ஓடி உழைக்கிறார்கள். ஆனால் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா என்று கேட்டால் நிச்சயம் இல்லை. மகிழ்ச்சியை தேடி கொண்டிருக்கிறார்கள். மகிழ்ச்சியை எங்கே தேடினாலும் கிடைக்காது அது உங்களிடம் தான் இருக்கிறது. இந்த பதிவில் இருக்கின்ற நொடியை மகிழ்ச்சியாக வைத்து கொள்வது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாங்க..

நடக்கும் விஷயம்:

நிகழ்காலத்தில் நடக்க கூடிய விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். உங்களை சுற்றியுள்ள விஷயங்களை ரசிக்க கற்று கொள்ளுங்கள். பிறருடன் பேசுவது, சிரிப்பது, இயற்கையை ரசிப்பது, பறவைகளின் ஒலியைக் கேட்பது போன்ற எல்லாத்தையும் ரசிக்க கற்று கொள்ளுங்கள். அப்போது தான் இதனை நீங்கள் கடைபிடிக்க ஆரம்பித்தால் அதுவே பழக்கமாகி விடும்.

கடந்த காலம் மற்றும் நிகழ் காலம்:

இந்த நொடியை மகிழ்ச்சியாக வைத்து கொள்வதற்கு என்ன செய்வது

தற்போது நடக்கும் விஷயங்களை நினைத்து வாழ்க்கையை மூவ் ஆன் செய்து கொள்ளுங்கள். நடந்த விஷயத்தையும் நினைக்காதீர்கள், நடக்க போகின்ற விஷயத்தையும் நினைக்காதீர்கள். இவை இரண்டையும் நினைத்தால் சந்தோசம் போகிவிடும்.எதுமே நிரந்தரம் இல்லை என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள். அப்போது தான் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ முடியும். மேலும் எந்த விஷத்தையும் எதிர்பார்க்காதீர்கள்.

உங்களுக்கு பிடித்தது:

உங்களுக்கு பிடித்த விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். இவை உங்களுக்கு பிடித்த நபராகவும் இருக்கலாம். பிடித்த விஷயம், பிடித்த வேலை போன்ற எதை வேண்டுமானாலும் செய்யுங்கள். உங்களுக்கு பிடித்த விஷயத்தை செய்யும் போது கண்டிப்பாக மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

வெற்றியை அடைவதற்கான 6 வழிகள்..

தாங்கியூ சொல்லுங்கள்:

வாழ்க்கையில் கிடைக்காத விஷயத்திற்காக நினைத்து கவலை அடைவதை விட, கிடைத்திருக்கின்ற விஷயத்திற்காக நன்றி சொல்லுங்கள் அல்லது மற்றவர்களை பாராட்டுங்கள். அதாவது உங்களுக்கு நல்ல உணவை சமைத்து கொடுக்கின்ற அம்மாவை பாராட்டுங்கள்.

எதுவும் நிரந்தமில்லை:

இந்த வாழ்க்கையில் எதுவுமே நிரந்தரமில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சில நபர்கள் வருவார்கள், சிலர் போவார்கள், சூழ்நிலைகள் மாறும், சில அழகான தருணங்கள் நினைவுகளாக மாறிவிடும். இப்படி நம் வாழ்க்கையில் எல்லாமே  நிரந்தரமற்றது. அதனால் எதையுமே அதிகமாக எதிர்பார்த்து கவலை நிலையுடன் இருக்காதீர்கள். அவற்றை ஏற்றுக் கொள்வதால் எதிர்காலம் பற்றிய பயத்திலிருந்து நீங்கள் எளிதாகக் கடந்து செல்ல முடியும்.

மேலும் இது போல இன்னும் பல தகவல்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.  பொதுநலம்.காம் 

 

 

Advertisement