வெற்றியை அடைவதற்கான 6 வழிகள்..

Advertisement

வெற்றியை அடைவதற்கான 6 வழிகள் 

நம் வீட்டில் உள்ள முன்னோர்கள் நாம் வளரும் போதே நல்லா படிக்கனும், நல்ல வேலைக்கு போகனும், கஷ்டப்பட்டு உழைக்கணும் அப்போது தான் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்று கூறுவார்கள். கஷ்டப்பட்டு உழைத்தால் மட்டும் வாழ்க்கையில் வெற்றியை அடைய முடியுமா என்றால் சந்தேகம் தான். ஏனென்றால் கடின உழைப்புடன் ஸ்மார்ட் ஆன சில வேலைகளையும் பார்க்க வேண்டும். அப்போது தான் வாழ்க்கையில் வெற்றியை அடைய முடியும். அந்த வகையில் இன்றைய பதிவில் வெற்றியை அடைவதற்கான 6 வழிகள் என்னவென்று அறிந்து கொள்வோம் வாங்க..

குறிக்கோள்:

வெற்றியை அடைவதற்கான 6 வழிகள் 

முதலில் உங்களின் வாழ்க்கையில் என்னவாக வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்பதை தெளிவாக முடிவு எடுத்து கொள்ள வேண்டும். இந்த குறிக்கோளை நீங்கள் எத்தனை வருடங்களில் அடைய விரும்புகிறீர்கள் என்பதையும் சரியாக முடிவு எடுத்து கொள்ள வேண்டும்.

பலம்:

உங்களுடைய பலம் மற்றும் பலவீனத்தை அறிந்து கொள்ளுங்கள். அது நீங்கள் யார் மாதிரி அடைய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அவர்களின் பலம் மற்றும் பலவீனத்தை தெரிந்து வைத்து கொள்ளுங்கள்.

30 வயதிற்குள் இதெல்லாம் செய்திடுங்க..

பிளான் 2:

வெற்றியை அடைவதற்கான 6 வழிகள் 

உங்களின் குறிக்கோளை எப்போதும் இரண்டு வைத்து கொள்ளுங்கள். ஏனென்றால் ஒரு குறிக்கோள் தோல்வியில் முடிந்தாலும் இன்னொரு குறிக்கோளை அடைவதற்கு நீங்கள் முயற்சி செய்யலாம்.

நீங்கள் வேலை பார்க்க இன்னைக்கு இஷ்டமில்லை, நாளைக்கு செய்து கொள்ளலாம் என்று எண்ணம் இருக்க கூடாது. உங்களின் குறிக்கோளை அடைவது வரைக்கும் வேறு ஏதும் விஷயங்களில் ஈடுபட கூடாது.

செயல்படுத்துதல்:

நீங்கசல் மதியம் மீன் குழம்பு, வறுவல் சாப்பிட வேண்டும். அப்படி என்று நினைத்தால் சாப்பாடு கைக்கு வராது. அதற்கான செயல்களையும் செய்ய வேண்டும். அது போல தான் உங்களுடைய திட்டங்களை தீட்டி வைத்தால் மட்டும் போதாது, அதற்கான செயல்களையும் செய்ய வேண்டும். அப்போது தான் அந்த செயலில் நீங்கள் வெற்றியை அடைய முடியும்.

பொறுமை அவசியம்:

வெற்றியை ஒரே நாளில் அடைய முடியாது. பல தோல்விகளை அடைந்த பிறகு தான் வெற்றியை அடைய முடியும். மன உறுதியோடு செயல்பட்டால் கண்டிப்பாக வெற்றியை அடைய முடியும். அதனால் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள் நிச்சயம் வெற்றியை அடைய முடியும்.

                                       முயற்சி + பயிற்சி = வெற்றி 

மேலும் இது போல இன்னும் பல தகவல்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.  பொதுநலம்.காம் 

 

Advertisement