Why Buy Gold On Akshaya Tritiya In Tamil
அட்சய திருதி அன்று எல்லோருமே தங்கம் வாங்குவார்கள். அது ஏன் அட்சய திருதி அன்று ஒரு குண்டுமணி அளவிற்காவது தங்கம் வாங்க வேண்டும் என, நம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். அது ஏன் ? அதில் உள்ள ரகசியம் என்ன என்பது நிறைய மக்களுக்கு தெரிவதில்லை. எல்லோரும் அட்சய திருதி அன்று தங்கம் வாங்குகிறார்கள், நம்மளும் வாங்க வேண்டும் என காரணம் தெரியாமலே வாங்குகிறார்கள். அட்சய திருதி அன்று நகை வாங்குவதன் நோக்கம் மற்றும் அதன் பலன்களை இந்த பதிவில் நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.
அட்சய திருதி அன்று தங்கம் வாங்க காரணம் :
அட்சய திருதி அன்று தங்கம் வாங்கினால் அந்த வருடம் முழுவதும் செல்வ செழிப்பும் சர்வ ஐஷ்வர்யமும் கிடைக்கும் என்பதாகும். அதுமட்டுமல்லாமல் அட்சய திருதி மஹாலக்ஸ்மிக்கு உகந்த நாள். எனவே அட்சய திருதி அன்று தங்கம் வாங்கினால் உங்கள் வீட்டிற்கு மஹாலக்ஸ்மி அருள் கிடைக்கும். அட்சய என்ற வார்த்தை பெருகுவது, குறைவில்லாது எனப் பொருள்படும். அதனால் அட்சய திருதி அன்று தங்கம் வாங்கினால் அது பெருகி கொண்டே இருக்கும். அட்சய திருதி அன்று தங்கம் மட்டும் தான் வாங்க வேண்டும் என்பதல்ல. நிதி சார்ந்த எதையும் வாங்கலாம்.
நவ கிரகங்கள் :
நவ கிரகங்களான குரு மற்றும் செவ்வாய், சனி ஆகியவை லக்னத்தில் அட்சய திருதி அன்று தான் இணைகின்றன. இந்த மூன்று நவ கிரகங்களுமே வாழ்வில் செல்வ செழிப்புகளை தர கூடிய கிரகங்கள். செல்வத்திற்கு அதிபதியானவர் சுக்கிரன் அதேபோல் குருவும் நிதி நிலையை உயர்த்தக்கூடியவர். சனிபகவான் சாதாரண மனிதனையும் வாழ்வில் உயர்ந்த நிலைக்கு கொண்டுவருபவர். அதனால் இந்த நவ கிரகங்கள் இணைந்த கூட்டு நாளான அட்சய திருதி அன்று தங்கம் வாங்கினால் உங்கள் வாழ்வில் நல்ல முன்னேற்றத்தை காணலாம்.
அட்சய திருதி அன்று தங்கம் வாங்க முடியாதவர்கள் :
அட்சய திருதி அன்று எல்லோராலும் தங்கம் வாங்க முடியாது. அட்சய திருதி அன்று எல்லோருமே தங்கம் வாங்குவது பெருகுவதற்காகவே. அதனால் தங்கம் தான் வாங்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. மகாலட்சுமிக்கு உகந்த நாளான அட்சய திருதியில் மஹாலட்சிமிக்கு உரிய இரண்டு பொருட்களை மட்டும் வாங்குங்கள். இதனால் தன தான்யம் மற்றும் அஷ்ட செல்வங்களும் வந்து சேரும். மகாலட்சுமிக்கு உரிய குண்டு மஞ்சள் மற்றும் கல் உப்பு ஆகியவை வாங்கலாம். குண்டுமஞ்சள் பண தடைகளை அகற்றும் சக்தி இந்த குண்டு மஞ்சளுக்கு உண்டு. கல் உப்பு இதனையும் அட்சய திருதி அன்று வாங்கலாம். கல் உப்பிற்கு கடன் தொல்லை மற்றும் எதிர்மறை ஆற்றலை அழிக்க கூடிய சக்தி உண்டு. நீங்கள் கவனித்து இருக்கீர்களா வெள்ளி மற்றும் செவ்வாய் கிழமைகளில் உப்பு இரவையாக கொடுக்க கூடாது என்பார்கள். அப்படி கொடுத்தால் மஹாலக்ஷ்மி வீட்டை விட்டு போய்விடுவார் என்பது நம்பிக்கை. அதனால் அட்சய திருதி அன்று கல் உப்பை வாங்கி ஒரு ஜாடியில் அல்லது பித்தளை, செம்பு ஆகியவற்றில் நிரப்பி பூஜை அறையில் வைக்கலாம். அதேபோல் இன்னொரு பாத்திரத்தில் குண்டு மஞ்சளை நிரப்பி வைத்து பூஜை அறையில் வையுங்கள். இதனால் ஐஸ்வர்யம் மற்றும் தனம் தான்யமும் வந்து சேரும்.
அட்சய திருதியை அன்று மறந்தும் இதை மட்டும் செய்துவிடாதீர்கள்..!
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |