ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் நம்ப முடியாத பழக்க வழக்கங்கள்..!

Advertisement

Albert Einstein’s Unbelievable Habits in Tamil

தனது வாழ்வில் புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து அதனை வாழ்வியல் நடைமுறைக்கு கொண்டுவந்து உலகசாதனை படைத்தவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். இவரை தெரியாதவரே உலகில் கிடையாது. உலகளவில் மிகவும் பிரபலமானவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். இயற்பியலில் மக்களுக்கு தேவையானவற்றை கண்டுபிடிக்கும் ஒரு அறிவியல் விஞ்ஞானி. புகழ்பெற்ற ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அவரின் நம்பமுடியாத சுவாரஸ்ய பழக்கவழக்கங்களை பற்றி பார்ப்போம்.

தோற்றத்தை சீர்படுத்த விரும்பாதவர்:

albert instin

அவர் தனது தோற்றத்தை அழகாக வைத்து கொள்வதில் விருப்பம் இல்லாதவராம். அவர் தனது தலை கலைந்திருந்தால் அதனை சீரமைக்க அவர் விரும்பமாட்டாராம், தேவையில்லாத விஷயங்களுக்காக அவர் நேரம் செலவிட நான் விரும்புவதில்லை என கூறுவாராம்.

விளையாட்டுத்தனம் :

அவர் அதிக விளையாட்டுத்தனமும் குறும்புத்தனமும் உடையவராம். தன் நண்பர்கள் மற்றும் தன்னுடன் பணி செய்பவர்களிடம் நகைச்சுவை குணம் கொண்டவராக அதிக குறும்பு தனம் கொண்டவராக இருப்பாராம். அதிக புகைப்படங்களில் அவர் நாக்கை நீட்டியிருப்பது போல் பார்த்திருப்பீர்கள் அது அவர் குறும்பு தனமாக எடுத்த புகைப்படம். நாளடைவில் அந்த புகைப்படம் தான் அதிகளவில் பிரபலமானதாம்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீனிற்கு சாக்ஸ் அணிய பிடிக்காதாம் :

அவருக்கு சிறு வயதில் இருந்தே சாக்ஸ் அணிய விருப்பப்படமாட்டாராம். சாதாரணமாக விஞ்ஞானிகள் என்றாலே அவர்கள் உடையில் அதிகம் கவனம் செலுத்துவார்கள் ஆனால் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனிற்கு அதிலெல்லாம் விருப்பம் கொஞ்சம் கூட கிடையாதாம். 1921இல்  தனது நோபல் பரிசை அவர் வாங்கும்போது கூட சாக்ஸ் அணியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சிறு வயதில் சாக்ஸ் அணிய தெரியாமல் அணிந்து சாக்சின்  கட்டை விரல் ஓட்டையாகி விட்டதால் அப்போதில் இருந்து அவருக்கு சாக்ஸ் அணிவதில் நாட்டம் இல்லாமல் போவிட்டதாம்.

நியாபக மறதி :

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் என்னதான் புகழ்பெற்ற விஞ்ஞானியாக இருந்தாலும் அவருக்கு நியாபக மறதி அதிகம். தனது உரையை பல்கலைக்கழகத்தில் பேச முடித்து வீடு திரும்பும் போது ஓட்டுநர் அவரின் வீட்டு முகவரியை கேட்டபோது அவருக்கு சட்டென்று தனது வீட்டு முகவரியை மறந்து விட்ட்டாராம். அந்தளவுக்கு நியாபக மறதி உடையவராம்.

இசை விரும்பி :

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அதிகமாக இசை கேட்பாராம் அதுமட்டுமல்ல மிகவும் அருமையாக வயலின் வாசிக்கும் திறமை உடையவராம். தனது கண்டுபிடிப்பின் போது ஏற்படும் சிக்கலின் டென்ஸ்டனை தீர்க்க வயலின் வாசிக்கும் பழக்கம் உடையவராம்.

பூனை வளர்ப்பு :

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் விலங்குகளை அதிகம் நேசிப்பாராம், அவருக்கு பூனை என்றால் மிகவும் பிடிக்குமாம். அவர் அன்புடன் வளர்த்த செல்லப்பிராணி கூட ஒரு பூனை தானாம். அதன் பெயர் டைகர் என்பது  குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் முதல் பெண் மருத்துவர்

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil

Advertisement