Bailiff Meaning
வணக்கம் நண்பர்களே. இப்பதிவில் Bailiff என்றால் என்ன.? என்பதையும் அவற்றின் முழு விவரங்களையும் இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம். நாம் அனைவருமே Bailiff என்ற வார்த்தையை அறிந்து இருப்போம். அனால், அதனை பற்றி நமக்கு அந்த அளவிற்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால், அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவில் Bailiff என்பதற்கான தமிழ் அர்த்தம் என்ன என்பதை விவரித்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.
Bailiff Meaning in Tamil:
Bailiff என்றால் ஒரு பதவியின் பெயர் ஆகும். அதாவது, நீதிமன்றத்தில் நீதிபதிக்கும், நீதிமன்ற க்ளர்க்கிற்கும் தேவையானவற்றை வாங்கி கொடுக்க வேண்டிய நபர் (செய்து தரும் நபர்) Bailiff ஆவர். இன்னும் தெளிவாக சொல்லப்போனால், நீதிமன்றத்தில் ஒரு நீதிமன்ற தீர்ப்பு வந்த பிறகு, அது சம்மந்தப்பட்ட பொருட்களையோ, நிலங்களையோ, நபரையோ, சொத்துக்களையோ பாதுக்காப்பாக வைத்து, அதாவது, நீதிமன்றத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை வரைக்கும் அதனை பாதுகாப்பாக வைத்து பராமரிப்பது Bailiff பணியின் வேலை ஆகும்.
Bailiff என்றால் நீதிமன்றத்தின் அதிகாரி கூறிய நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றுதல், கைது செய்தல் மற்றும் நீதிமன்ற அறையில் ஒழுங்கை பராமரித்தல் போன்ற நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றுவதற்கு பொறுப்பானவர் ஆவர்.
நீதிபதிக்கான சட்டங்கள் என்னென்ன உங்களுக்கு தெரியுமா..?
Junior Bailiff Meaning in Tamil:
Junior Bailiff என்றால் தொடக்கநிலையில் அந்த பதவியில் சேரும் நபரை குறிக்கும். அதாவது, புதிதாக அந்த வேலையில் சேர்த்து இருக்கும் நபர்களை Junior Bailiff என்று கூறுவார்கள்.
நீதிமன்ற உத்தரவுகளை செயல்படுத்துதல்:
- நீதிமன்றத்தின் ஆணைகளை (Court Orders) சரியாக பயனாளிகளுக்கு வழங்க வேண்டும்.
- ஒப்படைத்த ஆவணங்களை பாதுகாப்பாக மற்றும் சரியாக உரிய நபர்களுக்கு கொடுக்க வேண்டும்.
சமன்கள் (Summons) மற்றும் உத்தரவுகள் வழங்குதல்:
- வழக்குகளில் சார்ந்த நபர்களுக்கு அழைப்பாணை (Summons) மற்றும் நீதிமன்ற உத்தரவு (Warrants) வழங்குதல்.
காவல் மற்றும் சட்ட ஒழுங்கு:
- முக்கியமான ஆவணங்களை காவல்துறை அல்லது அரசு அதிகாரிகளுக்கு வழங்குதல்.
- சில நேரங்களில் நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்த உதவ வேண்டும்.
நீதிமன்ற செயல்பாடுகளில் உதவுதல்:
- நீதிமன்ற அலுவலக பணிகளை மேற்கொள்வது.
- வழக்குகளில் தேவையான ஆவணங்களை இடம் மாற்றுதல்.
- வழக்கு தொடர்பான தகவல்களை தேவையான நேரத்தில் அதிகாரிகளுக்கு வழங்குதல்.
கைதிகள் தொடர்பான பணிகள்:
- சிறைச்சாலையில் இருந்து நீதிமன்றத்திற்கு கைதிகளை அழைத்துவர அதிகாரிகளுக்கு உதவுதல்.
- கைதிகளின் விபரங்களை சரிபார்த்தல்.
Senior Bailiff Meaning in Tamil:
Senior Bailiff என்றால், Bailiff பணியில் அதிக வருடம் அனுபவம் பெற்றிருக்கும் நபரை குறிக்கும்.
நீதிமன்ற உத்தரவுகளை வழங்குதல்:
- நீதிமன்ற உத்தரவு (Warrant) மற்றும் அழைப்பாணை (Summons) போன்றவற்றை சரியான நபர்களிடம் வழங்குதல்.
- உத்தரவை வழங்கிய பின், அது தொடர்பான அறிக்கையை சமர்ப்பித்தல்.
மேலாண்மை & மேற்பார்வை:
- Junior Bailiff-களின் பணிகளை மேற்பார்வை செய்யுதல்.
- அவசரமான மற்றும் முக்கியமான வழக்குகளில் உறுதி செய்யப்பட்ட ஆவணங்களை பாதுகாத்து வழங்குதல்.
கைதிகள் மற்றும் சிறைச்சாலை தொடர்பான பணிகள்:
- வழக்குகளில் கைதிகளை நீதிமன்றத்திற்கு அழைத்து வருவதற்கான தொடர்புகளை ஏற்படுத்துதல்.
- கைதிகளின் விபரங்களை சரிபார்த்தல் மற்றும் அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த அதிகாரிகளுக்கு உதவுதல்.
ஆவண பராமரிப்பு:
- நீதிமன்றத்திலுள்ள முக்கிய ஆவணங்களை பதிவுசெய்தல் மற்றும் பராமரித்தல்.
- வழக்குகளில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை சரிபார்த்தல்.
அலுவலக மேலாண்மை:
- நீதிமன்ற நிர்வாக பணிகளை ஒழுங்காக மேற்கொள்வது.
- வழக்கு ஆவணங்கள், உத்தரவுகள் மற்றும் சமன்களை சரியாக வழங்கியதற்கான பதிவுகளை பராமரித்தல்.
Bailiff Work in Court in Tamil:
Bailiff பதவியின் வேலை என்னவென்றால், நீதிபதிகளுக்கு தேவையான அனைத்தையும் எந்தவொரு இடையூறும் இல்லாமல் செய்து தருவது ஆகும். அதாவது ஒரு வரியில் சொல்ல வேண்டுமானால் நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றுதல் Bailiff -யின் வேலை ஆகும். சம்மன்கள், சட்ட ஆவணங்களை வழங்குவதற்கும், வெளியேற்றுதல் அல்லது சொத்துக்களை பறிமுதல் செய்தல் போன்ற நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்துவதும் Bailiff -யின் வேலை ஆகும்.
நீதிமன்ற அறையில் ஒழுங்கைப் பராமரித்தல் Bailiff-யின் வேலை ஆகும். அதாவது, நீதிமன்ற அறைக்குள் நுழைவதைக் கட்டுப்படுத்துதல், பிரதிவாதிகளை அழைத்துச் செல்வது மற்றும் ஏதேனும் இடையூறுகள் அல்லது பாதுகாப்புச் சிக்கல்கள் இருந்தால் தலையிடுவதன் மூலம் நீதிமன்ற நடவடிக்கைகளின் சுமூகமான செயல்பாட்டை உறுதிப்படுத்துதல் போன்ற பணிகள் அடங்கும்.
அடுத்ததாக நீதிபதிகள் மற்றும் நீதிமன்ற ஊழியர்களுக்கு உதவுதல் போன்ற வேலைகள் அடங்கும். அதாவது, நீதிமன்ற அறையை அமைத்தல், கண்காட்சிகளை நிர்வகித்தல் மற்றும் செய்திகளை வெளியிடுதல் போன்ற நீதிபதிகள் மற்றும் பிற நீதிமன்ற பணியாளர்களுக்கு உதவி செய்வார்கள்.
முக்கியமாக பாதுகாப்பை வழங்குதல் Bailiff -யின் முக்கிய பணி ஆகும். அதாவது, நீதிமன்ற பாதுகாப்பில், நீதிபதிகள், ஜூரிகள், சாட்சிகள் மற்றும் பிற பங்கேற்பாளர்களை அச்சுறுத்தல்கள் அல்லது வன்முறையில் இருந்து பாதுகாப்பது போன்ற வேலைகள் அடங்கும்.
தமிழ்நாட்டில் சிவில் நீதிபதியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா.?
இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் | Interesting information |