Varumana Vari Vithimurai in Tamil | Income Tax Rules in India 2024
வாசகர்கள் அனைவருக்கும் இன்றைய பதிவின் வாயிலாக ஒரு பயனுள்ள தகவலை பற்றி தான் கூறப்போகின்றோம். அதாவது இந்த 2024 ஆம் ஆண்டிலிருந்து 2025 ஆம் ஆண்டு வரை வருமான வரி செலுத்தும் நபர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விதிமுறைகள் என்ன என்பதை பற்றி தான் பார்க்கப்போகின்றோம். பொதுவாக வருமான வரி என்றால் என்ன என்று தெரியும். அதுமட்டுமில்லாமல் இந்த 2024 ஆம் ஆண்டில் ஏப்ரல் மாதம் புதிய விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளன. ஆகவே வருமான வரி செலுத்துவோர் தெரிந்து கொள்ள வேண்டிய விதிமுறைகள் என்ன என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க.
வருமான வரியை செலுத்த மறந்துவிட்டீர்கள் என்றால் இதை செய்யுங்க IT Raid-லிருந்து தப்பிக்கலாம்
வருமான வரி என்றால் என்ன..?
வருமான வரி என்பது ஒரு நிதியாண்டில் சம்பாதித்த தனிநபர் அல்லது வணிகத்தின் ஆண்டு வருமானத்தின் மீது விதிக்கப்படும் வரி ஆகும். அதாவது, ஒரு தனி நபரோ அல்லது ஒரு நிறுவனமோ தான் ஈட்டும் ஒரு குறிப்பிட்ட வருமானத்திற்கேற்ப தான் சார்ந்திருக்கும் நாட்டிற்கு செலுத்தும் வரி ஆகும். அந்த வரியைக் கொண்டே அரசு சேவைகளை வழங்குகிறது.
இந்தியாவில் வருமான வரி அமைப்பு வருமான வரி சட்டம், 1961 ஆம் ஆண்டில் நிர்வகிக்கப்படுகிறது. இது வருமான வரி கணக்கீடு, மதிப்பீடு மற்றும் வசூல் ஆகியவற்றிற்கான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை வகுக்கிறது.
வருமான வரி விதிமுறைகள் 2024-25 – Income Tax Rules in India
ஒவ்வொரு ஆண்டும் வருமான வரித்துறை புதிய விதிகளை அமல்படுத்தும். அதாவது வருமான வரி விதிகள் மத்திய பட்ஜெட்டில் அல்லது நிதியாண்டின் நடுப்பகுதியில் அறிவிக்கப்பட்டாலும், அவை பெரும்பாலும் புதிய நிதியாண்டு தொடங்கும் போது அமலுக்கு வருகின்றன.
இந்த ஆண்டு, இடைக்கால பட்ஜெட்டின் போது 2024-25 நிதியாண்டுக்கான வருமான வரிச் சட்டங்களில் எந்த மாற்றமும் இல்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. எனவே, முந்தைய நிதியாண்டின் அனைத்து வருமான வரி விதிகளும் அப்படியே இருக்கின்றன. அதில் எந்த மாற்றமும் இல்லை.
பழைய மற்றும் புதிய வரி முறைகளில் அடிப்படை விலக்கு வரம்பு:
பொதுவாக பழைய மற்றும் புதிய வரி முறைகளில் அடிப்படை விலக்கு வரம்பில் வேறுபாடு உள்ளது. ஒரு தனிநபரின் வருமானம் ஒரு நிதியாண்டில் அடிப்படை விலக்கு வரம்பை மீறவில்லை என்றால், அத்தகைய நபரின் வருமானம் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. அதில் எந்த அளவுக்கு மாற்றம் உள்ளது என்று தற்போது காணலாம்.
புதிய வருமான வரி அடுக்குகள் (New Tax Regime)
இந்த வருமான வரி வரம்பு 23.07.2024 மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த அன்று அப்டேட் செய்யப்பட்டுள்ளது.
வருமான வரம்பு (ரூபாயில்) | வருமான வரி விகிதம் (%) |
0-3,00,000 | 0 (வரி எதுவும் இல்லை) |
3,00,001 – 7 லட்சம் வரை | 5% |
7,00,001 – 10 லட்சம் வரை | 10% |
10,000,001 – 12 லட்சம் வரை | 15% |
12,00,001 – 15 லட்சம் வரை | 20% |
15,00,001 மற்றும் அதற்கு மேல் | 30% |
பழைய வருமான வரி அடுக்குகள்
வருமான வரம்பு (ரூபாயில்) | வருமான வரி விகிதம் (%) |
0-2,50,000 | 0 |
2,50,001-5,00,000 | 5 |
5,00,001-10,00,000 | 20 |
10,00,001 மற்றும் அதற்கு மேல் | 30 |
யார் யார் வருமான வரி செலுத்த வேண்டும்..?
வருமான வரிச் சட்டத்தின்படி, இந்தியாவில் உள்ள அனைவரும், வசிப்பவர்கள் அல்லது குடியுரிமை பெறாதவர்கள், வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். தற்போது, 2024-25 ஆம் நிதியாண்டில் ரூ. 3 லட்சத்துக்கு மேல் வருமானம் இருந்தால் வரி செலுத்த வேண்டும்.
அதுமட்டுமில்லாமல், வருமான வரி என்பது பழைய திட்டத்தின் படி ஐந்து லட்சத்திற்கு மேலும் புதிய திட்டத்தின்படி 7 லட்சத்து 25 ஆயிரத்திற்கு மேலும் இருந்தால் வருமான வரி கட்ட வேண்டும். இந்த வரிகளை மாதம் மாதம் உங்கள் சம்பளத்தில் நிறுவனங்கள் பிடித்து வருமான வரி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
அப்படி இந்தியாவில் யார் யார் வருமான வரி செலுத்த வேண்டும் என்று தற்போது காண்போம்.
- தனிநபர்கள்
- இந்து பிரிக்கப்படாத குடும்பம் (HUF)
- நிறுவனங்கள்
- நபர்கள் சங்கம் (AOP)
- தனிநபர்களின் உடல் (BOI)
- உள்ளூர் நிர்வாகம்
- செயற்கை நீதித்துறை நபர்
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |